இன்றைய ராசி பலன் – 31.01.19

இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டும்

மேஷம்

நீ என்ன முயற்சி எடுத்தாலும் இன்னைக்கு அதில் வெற்றி கிடைக்கும். பணவரவும் உண்டு. அரசியல் சம்பந்தமான அதிகாரிகளை சந்தித்து அதில் வெற்றியும் கிடைக்கும். மதியத்துக்கு மேல உங்களுக்கு பிடிக்காத நபரை சந்திக்க நேரிடும். அதனால மனவருத்தமும் வரும். மேலும் சாப்பிட முடியாத அளவுக்கு வேலை இருந்து கொண்டே இருக்கும். அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு அம்மா வழியில் நன்மை ஏற்படும்

ரிஷபம்

எதிர்பாராத செலவுகள் இன்னைக்கு கண்டிப்பா உங்களுக்கு இருக்கு. பணம் இருக்கறதனால ஓரளவு சமாளித்து விடுவீர்கள். வியாபாரத்தில் லாபம் கண்டிப்பா இருக்கும். உங்க குடும்பத்துல எல்லாரும் பாராட்டுவாங்க. திடீர்னு பணம் வரும். மாலையில் சொந்தக்காரங்க வீட்டுக்கு வருவாங்க. சுறுசுறுப்பா இருப்பீங்க.

மிதுனம்

நல்ல விஷயத்தை காலையிலேயே தொடங்கி விடுங்கள்.  மதியத்துக்கு மேல ஏதாவது ஒரு விஷயத்தை நினைத்து கவலை படுவீங்க. பயம் உண்டாகும். மற்றவர்களோடு பேசும்போது ஜாக்கிரதையா பேசவும். உங்க வாயால இன்னைக்கு பிரச்சனை வர சான்ஸ் இருக்கு. சொந்த வேலைகளில் கவனமாக இருங்கள் .மிருகசீரிடம் நட்சத்திர பிறந்த உங்களுக்கு இன்னைக்கு புதுசா ஏதாவது கிடைக்கும்.

கடகம்

சொந்தக்காரங்க வீட்டுக்கு வர வாய்ப்பு அதிகம்., அதனால இன்னைக்கு சந்தோஷமா இருப்பீங்க . பணவரவு தாராளமாக இருக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடும். சிலருக்கு வெளியூர் போறதுக்கு வாய்ப்புகள் இருக்கு. அலுவலகத்தில் சலுகைகளும் கிடைக்க வாய்ப்பு இருக்கு. தொழிலில் வருமானம் அதிகமாக இருக்க வாய்ப்பு இருக்கு. புனர்பூச நட்சத்திர பிறந்தவர்களுக்கு புதுசா எதாவது செய்தால் அது கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் கொடுக்கும்.

சிம்மம்

இன்னைக்கு அறிவுபூர்வமான பேச்சால் நீங்கள் மற்றவர்களுக்கு சந்தோஷத்தை தருவீங்க. உங்களுடைய குழந்தைகளால்  உங்களுக்கு மிகப்பெரிய சந்தோஷம் காத்து இருக்கு .உங்களோட வாழ்க்கை துணை மூலமாகவும் நல்ல செய்தி வருவதற்கு வாய்ப்புகள் நிறைய இருக்கு. சந்தோசமான நாள் .மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சித்தர்களின் ஆசி கிடைக்கும்.

கன்னி

தகப்பன் வழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். அரசு வகையில் நீங்க எதிர்பார்க்கிற எல்லா விஷயங்களும் நல்லபடியா நடக்கும். உங்களோட பேச்சுக்கும் முயற்சிக்கும் வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு கண்டிப்பாக கிடைக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அவர்களுடன் நண்பர்களால் இன்னைக்கு சந்தோஷமும் நன்மையும் கிடைக்கும்.

துலாம்

இன்னிக்கு உங்களுக்கு  நேரம் சரியில்லாத காரணத்தால் புதிய முயற்சியில் ஈடுபட ஈடுபடுவதை தவிர்க்கவும். மதியத்துக்கு மேல எதிர்பார்த்த தகவல் கண்டிப்பாக வரும். குடும்பத்தில் கேக்குற விஷயங்களை செய்வதற்காக நிறைய செலவு செய்தீர்கள். எதிர்பாராத செலவுகளும் இருக்கும். ஆபீஸ்ல நல்ல உற்சாகமாக இருப்பீர்கள் .வியாபாரத்தையும் விற்பனை நல்லபடியா இருக்கும் .சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.

விருச்சிகம்

இன்னிக்கு ரொம்ப நல்ல நாளு. உங்களோட தாயோட விருப்பத்தை நிறைவேற்றுங்கள். சொந்தக்காரங்க வாக்குவாதத்தை தவிர்த்து விடுங்கள். அவங்க உங்களுக்கு சங்கடத்தை தருவாங்க .ரொம்ப பொறுமையா இருக்கணும். வியாபாரத்தில் விற்பனை சுமாராக இருக்கும். பார்ட்னர்ஷிப் பிரச்சனைகள் வரும். விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகள் வழியில் நல்ல பெயர் கிடைக்கும்.

தனுசு

தினமும் செய்து வர வேலைகளை ஜாக்கிரதையா செய்யுங்கள். மதியத்துக்கு மேல நீங்க எதிர்பார்க்கிற தொகை வந்து சேரும். மதியம் வரை எந்த புது முயற்சி செய்யாதீர்கள் .ரொம்ப நாளா செய்ய நினைத்திருந்த காரியத்தை நிறைவேற்றுங்கள். மாலையில் சந்தோஷமான சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு இருக்கு .மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பயணங்களில் சந்தோஷம் உண்டு.

மகரம்

தினமும் செய்கிற வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். புதுசா எதுவும் செய்ய வேணாம் .பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. கடன் வாங்கவும் நேரும். ஒரு சிலருக்கு புதுசா சில நண்பர்கள் கிடைப்பார்கள் .அவங்களால நன்மைகளும் கிடைக்கும். மதியத்துக்கு மேல உடல்நலம் பாதிப்பு சிறிய அளவில் ஏற்பட வாய்ப்பு இருக்கு. ஜாக்கிரதை. உத்திராடம் நட்சத்திர பிறந்தவர்களுக்கு திடீரென்று பயணம் போக வாய்ப்பு உண்டு.

கும்பம்

இன்னைக்கி ரொம்ப பொறுமையா இருங்க. எந்த முக்கியமான முடிவையும் எடுக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று வாருங்கள். பிள்ளைகள் வழியில் பிரச்சினைகள் வர வாய்ப்பு இருக்கு. ஆனா பாதிப்பு ஏதும் இருக்காது. வியாபாரத்தில் நிறைய உழைக்க வேண்டி இருக்கும். அவிட்டம் நட்சத்திர பிறந்தவர்களுக்கு இன்னைக்கி எதிர்பாராத செய்தி கிடைக்கும்.

மீனம்

 எதிர்பாராத செய்தி உங்களை வந்து மகிழ்ச்சியில்  ஆட்டம் போடவைக்கும். சிலருக்கு நல்ல லாபமும் கிடைக்கும் . சொந்தக்காரங்க வருகையால் வீட்டுல ரொம்ப சந்தோஷமா இருப்பீங்க,  பழைய நண்பர்களையும் பார்ப்பீங்க. அதனால விருந்துக்கு போவிங்க .பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புது ஆடைகள் வாங்க வாய்ப்பு இருக்கு .

குளிர் காலத்தில் உங்கள் உதடை காப்பாற்ற …

நம்ம வாழ்க்கையில வெயில் காலம், மழைக் காலம், குளிர் காலம் இந்த மாதிரி பல காலங்களுக்கு ஏற்றமாதிரி நம்மளோட வாழ்க்கை முறையை நாம்  மாற்றிக் கொள்கிறோம், வெயில் காலத்தில் இருந்து தப்பிக்க ஏசி… அதே மாதிரி மழைக்காலங்களில் மழையில் இருந்து தப்பிக்க நிறைய வழிமுறைகளிலிருந்து  நம்மை பாதுகாத்துக் கொள்கிறோம். அதே மாதிரி இந்த குளிர்காலங்களில் ரொம்ப பாதிக்கப்படுவது குழந்தைகளும் பெண்களும் தான்.

ஏனென்றால் இந்த குளிர்காலத்தில் தான் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் உதடு வெடிப்பு , சரும பிரச்சனைகள் நிறைய ஏற்படுவது உண்டு.  அவ்வாறு ஏற்படும் இந்த மாதிரி உதடு வெடிப்புக்கும் பல கிரீம்களை நாம் அப்ளை செய்வது உண்டு. அந்த மாதிரி செய்து நம் உடல் நலத்திற்கு தீமை தருவதை தவிர்க்க,  சில எளிய வீட்டு பராமரிப்பு முறைகளை நாம் செய்து நாம் நலத்தை பேணிக் காக்க வேண்டும்

அது என்னவென்று நாம் இப்போது பார்ப்போம். தேன் மற்றும் மில்க் க்ரீம் இந்த மாதிரி இயற்கையான விஷயங்களை வைத்து நம் சருமத்தை பாதுகாக்க வேண்டும். பால் தோலில் உள்ள பாக்டீரியாக்களை நீக்குகிறது .ஒரு சின்னக் கிண்ணத்தில் கொஞ்சம் தேன் , ஒரு ஸ்பூன் மில்க் க்ரீம் எடுத்து இரண்டையும் நல்லா கலந்து இந்தக் கலவையை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் ஊற வைங்க . பின்னாடி ஒரு சுடு தண்ணீரில் கழுவுங்கள்.  பின்பு நன்கு துடைத்துவிட்டு மாயிச்சரைசர் அப்ளை செய்யுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால் ,உங்களுடைய சருமம் பளபளப்பாய் இருக்கும்.

அப்புறம் ஆலிவ் ஆயில் இஞ்சி பேஸ்ட் அப்புறம் பட்டர், இந்த மூன்றையும் சேர்த்து  சருமத்தில் அப்ளை பண்ணா சருமத்தில் இருக்கும் அழுக்குகளை உடனே நீக்கிவிடுகிறது . முக்கியமா முகம் மற்றும் கழுத்தில் தடவி பாருங்க . ஒரு 20 நிமிடம் கழித்து  சுடுதண்ணியில நல்லா கழுவி விடுங்க. உடனே உங்களுக்கு ரிசல்ட் தெரியும்.

அப்புறம் ஒரு சூப்பர் ஐடியா… பால் மற்றும் வாழைப்பழம் அதோடு ரோஸ் வாட்டர் இதனையும் நல்லா பேஸ்ட் மாதிரி  தயார் பண்ணி முகத்தில தடவிப் பாருங்கள். அத விட பெட்டர் ரிசல்ட் கிடைக்கும் .வாழைப்பழம் இறந்த செல்களை நீக்கவும் , பால் முகத்தை சுத்தம் செய்யவும் பயன்படுகிறது . இந்த பேஸ்ட்டை அப்ளை செய்து 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான சுடு தண்ணீரில் கழுவவும்

80 ஆயிரத்தில் ஆரம்பித்த தொழில், பல கோடிகளை வென்ற அதிசயம்.

‘எங்க கம்பெனி தயாரிப்பு பொருட்களை பெரிய கடைகளில் அழகாக அடுக்கியும், சிறிய கடைகளில் அழகாக தொங்க விடுவதையும் பார்க்கும் போது இதயத்திலே கிடைக்கும் மனநிறைவுக்கு, ஈடு இணையே இல்ல’ இது ஆச்சி நிறுவனத்தின் தலைவர் திரு.ஐசக் கருத்து.


அதே போல் தன்னுடைய தொழிற்சாலைக்கு செல்லும் போது, அங்கு வேலை செய்யும் தொழிலாளிகளின் முகத்தில் இருக்கும் சந்தோசத்தை பார்க்கும் போது கிடைக்கும் மனநிறைவும் யாருக்கும் கிடைக்காத பொக்கிஷம் என்கிறார் திரு ஐசக்.

கோட்ரேஜ் சோப்பு கம்பெனி ல ஏரியா மானேஜராக தன் வாழ்க்கையை துவங்கிய திரு ஐசக், சுமார் 10 வருடம் கழித்து, தனியாக தொழில் துவங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு துவங்கிய தொழில், சொட்டு நீலம் தொழில். அந்த தொழிலின் வருமானம், தன் குடும்பத்திற்கு போதுமானதாக இருந்தாலும், உள் மனசில் உணவு தொழிலில் மிக பெரிய ‘ஆட்சி ‘ செய்ய வேண்டும் என்பதே…

1990 களில் மிகப்பெரிய நிறுவனங்கள் இருந்தாலும் மசாலா பொருட்களுக்கென்று, சரியான நிறுவனம் இல்லை என்பதே எனக்கு மிக பெரிய ஊன்றுகோலாக இருந்தது என்கிறார் ஐசக்.
மேலும் அன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான பெண்கள், சமைக்க சென்றால் சுமார் 4 மணி நேரம், சமையலுக்கே வீணடித்து விடுகிறார்கள், என் அம்மா உட்பட..

இந்த பிரச்சனையை சரி செய்து பெண்களின் மனதில் ‘ஆட்சி’ செய்ய, என்பது ஆயிரம் ரூபாய் முதலீட்டில், ஒரு பத்துக்கு பத்து ரூமில் ஆரம்பிக்க பட்டதுதான் ‘ஆச்சி’. வெற்றி களிப்பில் சிரிக்கிறார் திரு ஐசக்.

எந்த மசாலா தயார் செய்தாலும் எங்க வீடுதான் முதல் ‘டெஸ்ட்டிங் கிரௌண்ட்’ எனும் ஐசக், குழம்பு சில்லி பவுடர் தான், நாங்கள் தயாரித்த முதல் மசாலா என்கிறார்.

இன்று பல கோடி வருமானம் ஈட்டும் தொழிலதிபராக இருக்கும் திரு ஐசக் , தன் தொழிற்சாலைக்கு, சுமார் 1500 கிராமத்து ,படிக்காத பெண்களை பணியமர்த்தி உயர்வு கண்டுள்ளார். சுற்றி உள்ள கிராமத்திலிருந்து இவர்களை அழைத்து வர பிரத்தியோகமாக 15 பஸ் உள்ளது . மேலும் சுமார் 150 உடல் ஊனமுற்றவர்களை பணியமர்த்தி அவர்களுக்கு வாழ்க்கை தரும் திரு ஐசக், ‘இவர்களுக்கு வேலை தருவதால் இவர்களின் தன்னம்பிக்கை வளரும்’ என்கிறார்.

ஒருவர் ஏதாவது தொழில் செய்து சுமார் 2 லட்சம் நஷ்டமடைந்தால்..நஷ்டம் என்று புலம்புகிறார்கள்.. அது தவறு, அது நஷ்டம் இல்லை , நீங்கள் படித்த படிப்பிற்கு , ஏற்ற தொழிலை, கற்றுக்கொள்ள செய்த செலவு , என்றே கொள்ள வேண்டும்…என்று இளைஞர்களுக்கு தெம்பூட்டுகிறார் ஐசக்.

எந்த தொழில் செய்தாலும் ‘ஜெயிக்கணும், ஜெயிக்கணும்,’ அப்படிங்கற வெறி இருந்துகிட்டே இருக்கனும். அவமானம், கஷ்டம், வேதனை, இதெல்லாம் சொல்ற பாடம் ‘ஜெயிக்கணும், ஜெயிக்கணும்’ங்கறது மட்டும்தான்.. நரம்பு புடைக்க பேசுகிறார்.

எங்களோட வெற்றியே , எங்க மசாலாவுக்கு தேவையான மூலப்பொருட்களை, நேரடியாகவே விவசாயிகிட்ட வாங்குவது தான். தனியா-ராஜஸ்தான், மிளகாய்-கம்பம், ஏலக்காய்-கேரளா, மிளகு-போடி, மஞ்சள்-ஈரோடு, இப்படி எல்லா பொருட்களையும் நேரடியாக வாங்குகிறோம், இதனால் விவசாயிகளும், மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றனர். என்றும் பெருமிதம் கொள்கிறார் ஐசக்.

இப்ப உள்ள குழந்தைகள் மிளகாயை ,பிளாஸ்டிக் பொருள் என்கின்றனர் … அவர்களுக்கு எந்த காய்கறி, எப்படி விளைகின்றது, என்பதே தெரியவில்லை என்று வேதனைப்படும் ஐசக், நம்ம குழந்தைகளுக்கு வீட்டிலேயே, சிறு சிறு தொட்டிகள் வைத்து காய்கறிகள் வளர்த்து ,அவர்களுக்கு கற்று கொடுக்கவேண்டும் என்று மெனக்கெடுகிறார்., திரு ஐசக்.

வாழ்த்துக்கள் ஆச்சி குழுமம் & ஐசக்