திண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன்! – யுவர் ஸ்டோரி .காம்

திண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன்!

ஒரு கையில் மிஷன் இம்பாசிபிள்.. மறு கையில் ஹாரிப்பாட்டர் தீம்.. உலக அரங்கை அதிரவைத்த தமிழ் சிறுவன்! – tamil behindwoods

ஒரு கையில் மிஷன் இம்பாசிபிள்.. மறு கையில் ஹாரிப்பாட்டர் தீம்.. உலக அரங்கை அதிரவைத்த தமிழ் சிறுவன்!

3 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து வைரலாகும் சென்னை சிறுவனின் இசை! – IEதமிழ்

3 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து வைரலாகும் சென்னை சிறுவனின் இசை!

ஈரோடு மஞ்சளுக்கு கிடைத்தது புதிய அங்கீகாரம்… ‘GI’ டேக் அளித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி! -IE தமிழ்

ஈரோடு மஞ்சளுக்கு கிடைத்தது புதிய அங்கீகாரம்… ‘GI’ டேக் அளித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி!

ஒல்லி சமி… நல்லா விளையாடும் சமி… மனம் திறந்து பாராட்டும் கோலி.. வாழ்த்தும் ரசிகர்கள் Read more at: https://tamil.mykhel.com/cricket/virat-kohli-praises-shami-with-lean-mean-pace-machine-twitter-013185.html – tamil.mykhel

ஒல்லி சமி… நல்லா விளையாடும் சமி… மனம் திறந்து பாராட்டும் கோலி.. வாழ்த்தும் ரசிகர்கள் Read more at: https://tamil.mykhel.com/cricket/virat-kohli-praises-shami-with-lean-mean-pace-machine-twitter-013185.html

நடிகர் அஜித்துக்கு அண்ணா பல்கலை-யில் ‘கவுரவ ஆலோசகர் பணி’

அண்ணா பல்கலைக்கழகம் தயாரிக்கும் விமானத்திற்கு தயாரிக்க உதவி செய்ததாக நடிகர் அஜித்துக்கு நன்றி தெரிவித்ததோடு கௌரவப் பதவிகள் பணியாற்ற அழைப்பு விடுத்துள்ளது

அண்ணா பல்கலைக்கழகம் தயாரிக்கும் விமானத்திற்கு தயாரிக்க உதவி செய்ததாக நடிகர் அஜித்துக்கு நன்றி தெரிவித்ததோடு கௌரவப் பதவிகள் பணியாற்ற அழைப்பு விடுத்துள்ளது

அண்ணா பல்கலைக்கழகம் விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் போது, ஒருவர் மட்டும் பயணம் செய்யும் விமானத்தை தயாரித்தது. இந்த விமானத்தின் தயாரிப்பு பணியில், நடிகர் அஜித் ஆலோசனைகளை வழங்கி, சுமார் 10 மாதங்கள் வரை பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் இந்த விமானத்தை தயாரிக்கும் பணி மிக சிறப்பாக முடிவுக்கு வந்துள்ளதாகவும் ,நடிகர் அஜித்தின் பங்களிப்பை பாராட்டி அண்ணா பல்கலைக் கழகம் சார்பாக அவருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது . விருப்பமிருந்தால் இனிவரும் காலங்களில் கௌரவ பதவியில் ஆலோசகராக நடிகர் அஜித்குமார் பணியாற்ற வேண்டும், என்று அண்ணா பல்கலைக்கழகம் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளது. இது அவருக்கும், அவருடன் பணியாற்றிய அனைத்து பொறியாளர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்துவதோடு, அஜீத்தின் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளையராஜா ஒரு சாமியார் – ஏ.ஆர்.ரகுமான்

thanks – indiaglitz

மூளையை அன்புல செலுத்தின அது அன்பாகவே டெவலப் ஆகும் பல மடங்கு பெருகும் அதே மாதிரி  கவலைகளை செலுத்தினால் மேலும் கவலைகள் தான் வரும்

“நான் இந்த ஜாதி, இந்த மதம் அதான் என்ன அமுக்குறாங்கனு சொல்லும்போது. நீ என்னயா பண்ணுற.? Do something come upto their level and kick. Sometimes நீ அந்த லெவல் வரதுக்கு 1 வருஷம் தேவைபடும், sometimes 2 வருஷம் தேவைபடும், sometimes 20 வருஷம் தேவைபடும். டைம் எடுத்துக்கோ வா.”

ஒரு இசைக்கலைஞன்னா தண்ணி அடிப்பான், பொண்ணுங்களோட சுத்துவான், இப்படி தப்பான ஒரு பிம்பம் இருந்தது .அதை உடைச்சது இளையராஜா சார். அவர் ஒரு சாமியார் மாதிரி இருப்பார்.. எப்பவும் மியூசிக்., மியூசிக்., மியூசிக் .,

நீண்ட இடைவெளிக்கு பிறகு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் வெளிப்படையான, உத்வேகம் உள்ள ஒரு இண்டர்வியூ …

நன்றி indiaglitz


மகள் செய்யும் காரியம்… ரஜினிகாந்த் அதிர்ச்சி…

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் ரஜினிகாந்தின் இளைய மகளான சௌந்தர்யா, திருமண வாழ்வில் முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு, கடந்த சில மாதங்களாக தனியாக வாழ்ந்து வந்தார். தற்போது வேறு ஒருவருடன் திருமணம் செய்ய தயாராகிவிட்டார்.

விசாகன் என்பவர்தான் இவர் திருமணம் செய்ய இருக்கும் இரண்டாவது நபர், இவரும் ஏற்கனவே திருமணமாகி மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றவர் என்று கூறப்படுகிறது.

தற்பொழுது இந்த இருவருக்கும் திருமணம் நடக்க தயாராகி வரும் நிலையில் ,ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா அவர்கள், இந்த திருமணமாவது கடைசி வரை நீடிக்க வேண்டும் என்று வேண்டி, தமிழகத்தில் உள்ள முக்கியமான கோயில் குளம் என்று நடையாய் நடந்து தரிசனம் செய்து வருகிறார்.

இதற்காக சிறப்பு பிரார்த்தனைகளும் ,சிறப்பு பூஜைகளும், செய்து வேண்டி வருகிறார்.

நாகர்கோவில் அருகே அமைந்துள்ள சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலில் தரிசனம் செய்து, சிறப்பு பரிகாரம் செய்து உள்ளார் .அதே மாதிரி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள, பகவதி அம்மன் கோவில் மற்றும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் என , ஒவ்வொரு மாவட்டத்திலும் பல அம்மன் கோவில்களில் நேரில் சென்று சிறப்பு தரிசனம் செய்து வருகிறார் .

கோடிகளில் புரள வைக்கும் ‘இஞ்சி’

வீட்டில் சமைக்கும் போது முக்கியமாக,  மட்டன், சிக்கன் சமைக்கும் பொழுது, இஞ்சி தவறாமல் உபயோகிப்பார்கள்… ஏனெனில் நாம் சாப்பிடும் உணவு நல்ல செரிமானம் ஆக வேண்டும் என்ற நோக்கம் அதில் உள்ளது.  கெட்ட பாக்டீரியா வைரஸ்களை எதிர்த்துப் போராடும். வயிற்று உப்புசத்தை சரி செய்யும். இஞ்சி சாறோட கொஞ்சம் வெங்காயத்தையும் சேர்த்து ஒரு வாரம் மட்டும் ஒரு ஸ்பூன் வீதம் காலையில குடித்து வந்தால், நீரிழிவு நோயின் தன்மை குறையும்னுசொல்றாங்க…

மேலும் இந்த இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு, மூன்றையும் கலந்து ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் ,ஆஸ்துமா, இளைப்பு, இருமல், இவைகளை ஆரம்பத்திலேயே சரிசெய்துவிடலாம்னு சொல்றாங்க.

இங்க நிறைய பேருக்கு இஞ்சி டீ குடிப்பது வழக்கம்., ஏனென்றால் அது நறுமணத்தை மட்டுமல்லாமல், உடலை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும். நம்ம வீட்டுல செய்யும்போதுகூட டீ போடும் போது ,இரண்டு மூன்று துண்டுகளை அதோடு சேர்த்து கொதிக்க வைத்தால் ,தேநீர் பருக நன்றாக இருக்கும். உடலுக்கு ரொம்ப நல்லது.

அதேமாதிரி இஞ்சியும் தேனும் கலந்து சாப்பிட்டு வர, செரிமானம் சரியாகும். வயிற்றில் இருக்கும் கொழுப்பு குறையும். இதனால் தொப்பை குறையும் .தொடர்ந்து 40 நாட்களுக்கு இந்த கலவையை சாப்பிட்டு வர ,மிகப்பெரிய மாற்றத்தை உங்கள் வயிற்றில் காணலாம்.

வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் தீர, இஞ்சி சாறை பாலில் கலந்து பருக வேண்டும்..

இஞ்சி எந்த உணவில் சேர்த்தாலும் அது உடம்புக்கு மிக பயனுள்ளதாக அமையும் .மலச்சிக்கல் களைப்பு, மார்பு வலி, வாத கோளாறு, பித்தம் ,அஜீரணம், வாய் துர்நாற்றம், வயிற்று உப்பிசம் ,இரைச்சல், இவை எல்லாம் சரியாகும்.

நம்ம இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வந்த ஆங்கிலேய ஒரு பெண்மணி, நமது இஞ்சி டீ சாப்பிட்டு மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளார்… அவரது சொந்த ஊரில் இதே பார்முலாவை தயார் செய்து விற்பனை செய்யும் பொழுது ,அதற்கு மிகப்பெரிய வரவேற்பு  கிடைத்ததை அடுத்து இன்று அவர் மிகப் பெரிய கோடீஸ்வரர் ஆகி உள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே… சமூகவலைத்தளங்களில் இவரைப்பற்றிய தகவல்கள் அவ்வப்போது வந்து கொண்டே இருக்கும்.

இஞ்சி உடலுக்கும் மனதுக்கும் பணதிற்கும் நல்லது

நரம்பு புடைக்க வைக்கும் தமிழ் வாசகங்களோடு ‘தமிழ் ஆடைகள் ‘

thanks-thaithingal.in

இளைஞர்களுக்கான இனிப்பு செய்தி இது…

எல்லா இளைஞர்களும் தமிழனாய் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும் என்ற நினைப்பு எப்போதும் உண்டு. அது இப்போது இன்னும் அதிகமாகவே இருக்கிறது என்றால் மாற்றுக் கருத்து இல்லை. தமிழர்களையும், தமிழ் மண்ணையும், தமிழ் மருத்துவத்தையும், தமிழ் உலகையும், அழிக்க பல விதங்களில் பல கூட்டம் உருவாகி தோல்வியை கண்டு கொண்டிருக்கிறது என்பது உண்மையே .அதற்கு ஜல்லிக்கட்டு மிகப் பெரிய உதாரணம்.

thanks-thaithingal.in

நாம் மனிதர்களை இவ்வாறு மதிக்கிறோமோ அதற்கு ஈடாக விலங்குகளையும் மதிக்கிறோம் என்பதற்கு ஜல்லிக்கட்டு போராட்டம் … அதோட வெற்றியும் உதாரணம்.

அதுபோல் இப்பொழுது, இயற்கை சார்ந்த உணவுகள், இயற்கை விவசாயம், குறிப்பாக தமிழ் விவசாயங்கள், தமிழ் மருத்துவ முறைகள், தமிழ் உணவுகள், உலகெங்கும் பாராட்டையும் வாழ்த்தையும் பெற்று வருகிறது, அதேபோல்

இன்று நாம் பார்க்கப் போகும் இணையதளம் தைத்திங்கள்.in

thanks-thaithingal.in

இந்த தைத்திங்கள் டாட் இன் என்ற இணையதளத்தில் நமக்குத் தேவையான, முக்கியமாக குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் ,தேவையான ஆடைகளை அழகான தமிழ் வார்த்தைகளோடு உருவாக்கி விற்பனை செய்கிறார்கள்.

மிகக்குறைந்த விலையோடு, மிகத்தரமான ஆடைகளை, விற்பனை செய்யும் இந்த இணையதளத்தில்,  குழந்தைகளுக்கான ஆடை, பெண்களுக்கான ஆடை, இளைஞர்களை டி ஷர்ட் ,என பல வகையான உடைகளை ஆன்லைன் மூலம் விற்று வருகிறார்கள்.

இதில் தனித்துவம் என்ன என்றால், ஒவ்வொரு ஆடைகளிலும் அழகான தமிழ் வார்த்தைகளை விதைத்திருக்கிறார்கள். தமிழையும் தமிழ் மண்ணையும் நேசிக்கும் அனைத்து தமிழர்களுக்கும், இந்த இணையதளம் கண்டிப்பாக சந்தோஷத்தையும் பரவசத்தையும் கொடுக்கும்.

thanks-thaithingal.in

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள்

 இடுக்கண் வருங்கால் நகுக

என்ன தவம் நான் செய்தேன் தமிழனாய் பிறப்பதற்கு

இதுவும் கடந்து போகும்

நான் வாள் எடுக்க நீ வீரன் இல்லை, நீ வாள் எடுக்க நான் கோழை இல்லை

பதுங்க தெரியும்.. பயப்பட தெரியாது

ரௌத்திரம் பழகு

தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

செயல் ஒன்றை உன்னை யாரென்று உணர்த்தும்

தடை அதை உடை.. புது சரித்திரம் படை..

தமிழால் இணைவோம் தமிழராய் வாழ்வோம்

சாதிதான் சமூகம் என்றால், வீசும் காற்றில் விஷம் பரவட்டும்,

thanks-thaithingal.in

இவ்வாறு பல எழுச்சியூட்டும் , யோசிக்கவைக்கும்,  நரம்புகளை புடைக்க வைக்கும், வாசகங்கள் கொண்ட வண்ண டி-ஷர்ட்டுகள் விற்பனைக்கு உள்ளது.

உங்கள் ஆதரவுகளையும் வாழ்த்துக்களையும் சமர்ப்பிக்க ‘தைத்திங்கள்.in’

என்ற இணையதளத்தில் பாருங்கள் …

தேங்காய் சிரட்டையின் விலை 3000 ருபாய் …அமேசானில்

நாம் தினமும் உபயோகித்து  குப்பையில் வீசி எறியும் பொருளான தேங்காய் மூடி அல்லது கொட்டாங்குச்சி அல்லது தேங்காய் சிரட்டை என அழைக்கப்படும் இவற்றின் விலை 3000 ரூபாய் என்று சொன்னால் நம்புவீர்களா? ஆனால் அதுதான் உண்மை.

உலகத்திலேயே முன்னணி ஆன்லைன் நிறுவனமான அமேசான்,  இந்த தேங்காய் சிரட்டையை தான் ஆன்லைன்ல விற்பனை செய்து வராங்க.

இந்த தேங்காய் சிரட்டையை நாம, நம்ம வீட்டில சாம்பிராணி போட்டு தூபம் காமிக்கவும் கிராமப்புறங்களில் அடுப்பெரிக்கவும் பயன்படுத்துவார்கள்.

இந்த தேங்காய் சிரட்டையை கைவினை கலைஞர்கள் காபி கப், சட்டை பட்டன்கள், அழகு பொருட்கள் என விதவிதமாக தயார் செய்து இங்கே விற்பனை செய்து வருவார்கள் . ஆனால் இதே தேங்காய் மூடி அல்லது தேங்காய் சிரட்டை அல்லது கொட்டாங்கச்சி ஆன்லைன்ல அமோகமாக விற்பனை ஆகுது…. இதுதான் எல்லோருக்கும் ஆச்சரியம் அளிக்கும் செய்தி.

400 கோடி ரூபாய் வருமானம் தரும் இந்த தேங்காய் சிரட்டைகள் வெறும் எரிபொருளாக மட்டும் இல்லாமல், நகை வேலைப்பாடு, வெடிமருந்து, என 50க்கும் மேற்பட்ட தயாரிப்புகளுக்கு உதவுகிறது இந்த தேங்காய் சிரட்டை.

திருச்சி , கரூர், தேனீ, திருப்பூர், இந்த மாதிரியான மாவட்டங்களில் அதிகமா தேங்காய் விளைகிறது. இங்கிருந்து தேங்காய் சிரட்டை கொள்முதல் செய்யப்பட்டு, நெகமம் பகுதியில் செயல்படும் தொழிற்சாலைகளுக்கு சப்பளை பண்றாங்க.  அந்த தொழிற்சாலைகளில் இருந்து தான் பலதரப்பட்ட கலைப்பொருட்களாக இது உருமாறுகிறது.

சீசன்ல அதாவது தேங்காய் விலை அதிகமான நேரங்களில், இந்த தேங்காய் சிரட்டை விலை அதிகமாக போகிறது என்கிறார்கள்.

அதிகபட்சம் ஒரு டன் சிரட்டை வந்து 15 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்துள்ளார்கள். அதுவும் திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் ஒரு கோடிக்கு விற்பனை நடந்து வருவதாக சொல்கிறார்கள் .இந்த தேங்காய் சிரட்டை வியாபாரத்தில் வந்து வருஷத்துக்கு 400 ரூபாய் வியாபாரம் நடக்கிறது.

15000 முதலீட்டில் ஆரம்பித்து, 1500 கோடிகளில் சாம்ராஜ்யம் நடத்தும் தமிழன்

படங்கள் – https://www.facebook.com/CavinKareIndia/

எங்க அப்பா கணக்கு வாத்தியார், ஆனா நான் கணக்குல ரெம்ப சுமார்…10th halfly exam-ல கணக்குல 8 மார்க் வாங்குனேன். ‘வாத்தியார் பையன் மக்கா ‘ னு சொல்லி, தலையில கொட்டியே என்ன படிக்கச் வச்சு 10th exam-ல பாஸ் பண்ண வச்சாரு எங்க அப்பா – இது கவின் கேர் நிறுவனதின் தலைவர் திரு. சி.கே.ரங்கநாதன் அவர்களின் பேச்சு. இன்னைக்கு கணக்கு தெரியாமல் யாரும் பிசினஸ் செய்ய முடியாது.


15000 ரூபாய் முதலீட்டில், 250 சதுர அடியில், வீடும் அலுவலகமும் சேர்ந்து, ஆரம்பிக்க பட்டதுதான், இன்று மிக பெரிய சாம்ப்ராஜ்யமாக வளர்ந்து இருக்கும் ‘கவின் கேர்’ நிறுவனம்.

படங்கள் – https://www.facebook.com/CavinKareIndia/

அப்பா வாத்தியார், ஆனா எப்பவும் சயின்ஸ் சம்பந்தமா நிறைய புக்ஸ் படிப்பார். புது பது பார்முலா கண்டு பிடிப்பார். அதுல அவர் கண்டு பிடிச்சதுல 51 product கிடைச்சது. யார் innovative வ பண்றங்களோ அவங்கதான் ஜெயிப்பாங்க னு அப்பா சொல்லிகிட்டே இருப்பார்.

பிசினஸ் பண்ணி ஜெயிக்கணும்னா பணம் தேவை இல்லை. புது புது ஐடியாஸ் வேணும்..இது எங்களுக்கு, அப்பா அடிக்கடி சொல்லும் வார்த்தை. எங்க அப்பா ஒரு லைப்ரரி, அவர்கிட்ட இருந்து கத்துகிட்ட இருக்கலாம். சரளமாக இங்கிலிஷ் பேசுவார். எனக்கு அப்டி வராது. ஆனா அவர்தான் எனக்கு பெரிய inspiration.

படங்கள் – https://www.facebook.com/CavinKareIndia/

நானும் மெல்ல இங்கிலிஷ் பேச கத்துக்கிட்டேன். ஏன்னா இங்கிலிஷ் பேச தெரியாம பிசினெஸ் ல பெரிய லெவல் ல வர முடியாது. அழுத்தமாக சொல்கிறார் கவின் கேர் நிறுவனதின் தலைவர் திரு சி.கே.ரங்கநாதன்.

மேலும் பிசினஸ் ல ஜெயிக்க புது புது ஐடியாவோட, புது புது product ஐ அறிமுகம் செய்யணும், அத மார்க்கெட் பண்ணி பெரிய லெவல் ல விளம்பரம் செய்யணும் – இது வெற்றிக்கான வியாபார யுத்தி.

படங்கள் – https://www.facebook.com/CavinKareIndia/

நாங்க ஆரம்பத்தில அலுவலகம் மற்றும் வீட்டிற்க்கு 250 சதுர அடியும் , பாக்ட்ரிக்கு 300 சதுர அடியும், தேர்ந்தெடுத்தோம், ஆனா R&D (Research and Development) கு மட்டும் 500 சதுர அடில தேர்ந்தெடுத்தோம்… அது தான் எங்களோட வெற்றி.

படங்கள் – https://www.facebook.com/CavinKareIndia/

எங்களை மாதிரியான கம்பெனிகள் R&D கு பண்ற செலவை விட ,கவின் கேர் பண்ற செலவு அதிகம். வளர்ச்சியும் அதிகம். 70 சயிண்டிஸ்ட் வச்சு ஆரம்பிச்ச எங்க தொழில், 40000 மாக வளர்த்திருக்கு.

படங்கள் – https://www.facebook.com/CavinKareIndia/

அப்பா எங்களுக்கு சொல்லி கொடுத்த 2 முக்கியமான விஷயம், ஒழுக்கம் அப்புறம் நேர்மை. நேர்மையா tax கட்டணும் னு சொல்லுவார். அது எந்தளவுக்கு எங்க வளர்ச்சிக்கு உதவுச்சுனு, எங்களுக்குதான் தெரியும்.

படங்கள் – https://www.facebook.com/CavinKareIndia/

நாம எவ்வளவு பெரிய வெற்றி யை அடைச்சாலும், நம்மளோட வசதி, வாழ்க்கையை மாத்திக்கிறலாம்..ஆனா கடந்து வந்தபாதையை மட்டும் மறக்க கூடாது. எங்க அப்பா அவரோட ஆராச்சிகளுக்காக விவசாய நிலங்களை எல்லாம் விற்றார். சொந்த பந்தங்கள் எல்லாம் கேலி செய்தார்கள், அதையும் மீறி ஜெயிச்சோம்னா, எங்களோட கடின உழைப்பும், நம்பிக்கையும் தான்.

படங்கள் – https://www.facebook.com/CavinKareIndia/
படங்கள் – https://www.facebook.com/CavinKareIndia/

அப்பா ஒரு ‘செயின் ஸ்மோக்கர்’ ஹார்ட் அட்டாக் ல தான் இருந்தாரு. என்ன காரணம் னு கண்டுபிடிக்கும் போது தான் தெரிந்தது, சிகரெட் னு. அதனால எனக்கும் சிகரெட் பழக்கம் இல்ல . வாழ்க்கையில ஜெயிக்கும் னா ஹெல்த்தும் முக்கியம் பாஸ்..உறுதியாக சொல்கிறார் கவின் கேர் நிறுவனதின் தலைவர் திரு சி.கே.ரங்கநாதன்.

80 ஆயிரத்தில் ஆரம்பித்த தொழில், பல கோடிகளை வென்ற அதிசயம்.

‘எங்க கம்பெனி தயாரிப்பு பொருட்களை பெரிய கடைகளில் அழகாக அடுக்கியும், சிறிய கடைகளில் அழகாக தொங்க விடுவதையும் பார்க்கும் போது இதயத்திலே கிடைக்கும் மனநிறைவுக்கு, ஈடு இணையே இல்ல’ இது ஆச்சி நிறுவனத்தின் தலைவர் திரு.ஐசக் கருத்து.


அதே போல் தன்னுடைய தொழிற்சாலைக்கு செல்லும் போது, அங்கு வேலை செய்யும் தொழிலாளிகளின் முகத்தில் இருக்கும் சந்தோசத்தை பார்க்கும் போது கிடைக்கும் மனநிறைவும் யாருக்கும் கிடைக்காத பொக்கிஷம் என்கிறார் திரு ஐசக்.

கோட்ரேஜ் சோப்பு கம்பெனி ல ஏரியா மானேஜராக தன் வாழ்க்கையை துவங்கிய திரு ஐசக், சுமார் 10 வருடம் கழித்து, தனியாக தொழில் துவங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு துவங்கிய தொழில், சொட்டு நீலம் தொழில். அந்த தொழிலின் வருமானம், தன் குடும்பத்திற்கு போதுமானதாக இருந்தாலும், உள் மனசில் உணவு தொழிலில் மிக பெரிய ‘ஆட்சி ‘ செய்ய வேண்டும் என்பதே…

1990 களில் மிகப்பெரிய நிறுவனங்கள் இருந்தாலும் மசாலா பொருட்களுக்கென்று, சரியான நிறுவனம் இல்லை என்பதே எனக்கு மிக பெரிய ஊன்றுகோலாக இருந்தது என்கிறார் ஐசக்.
மேலும் அன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான பெண்கள், சமைக்க சென்றால் சுமார் 4 மணி நேரம், சமையலுக்கே வீணடித்து விடுகிறார்கள், என் அம்மா உட்பட..

இந்த பிரச்சனையை சரி செய்து பெண்களின் மனதில் ‘ஆட்சி’ செய்ய, என்பது ஆயிரம் ரூபாய் முதலீட்டில், ஒரு பத்துக்கு பத்து ரூமில் ஆரம்பிக்க பட்டதுதான் ‘ஆச்சி’. வெற்றி களிப்பில் சிரிக்கிறார் திரு ஐசக்.

எந்த மசாலா தயார் செய்தாலும் எங்க வீடுதான் முதல் ‘டெஸ்ட்டிங் கிரௌண்ட்’ எனும் ஐசக், குழம்பு சில்லி பவுடர் தான், நாங்கள் தயாரித்த முதல் மசாலா என்கிறார்.

இன்று பல கோடி வருமானம் ஈட்டும் தொழிலதிபராக இருக்கும் திரு ஐசக் , தன் தொழிற்சாலைக்கு, சுமார் 1500 கிராமத்து ,படிக்காத பெண்களை பணியமர்த்தி உயர்வு கண்டுள்ளார். சுற்றி உள்ள கிராமத்திலிருந்து இவர்களை அழைத்து வர பிரத்தியோகமாக 15 பஸ் உள்ளது . மேலும் சுமார் 150 உடல் ஊனமுற்றவர்களை பணியமர்த்தி அவர்களுக்கு வாழ்க்கை தரும் திரு ஐசக், ‘இவர்களுக்கு வேலை தருவதால் இவர்களின் தன்னம்பிக்கை வளரும்’ என்கிறார்.

ஒருவர் ஏதாவது தொழில் செய்து சுமார் 2 லட்சம் நஷ்டமடைந்தால்..நஷ்டம் என்று புலம்புகிறார்கள்.. அது தவறு, அது நஷ்டம் இல்லை , நீங்கள் படித்த படிப்பிற்கு , ஏற்ற தொழிலை, கற்றுக்கொள்ள செய்த செலவு , என்றே கொள்ள வேண்டும்…என்று இளைஞர்களுக்கு தெம்பூட்டுகிறார் ஐசக்.

எந்த தொழில் செய்தாலும் ‘ஜெயிக்கணும், ஜெயிக்கணும்,’ அப்படிங்கற வெறி இருந்துகிட்டே இருக்கனும். அவமானம், கஷ்டம், வேதனை, இதெல்லாம் சொல்ற பாடம் ‘ஜெயிக்கணும், ஜெயிக்கணும்’ங்கறது மட்டும்தான்.. நரம்பு புடைக்க பேசுகிறார்.

எங்களோட வெற்றியே , எங்க மசாலாவுக்கு தேவையான மூலப்பொருட்களை, நேரடியாகவே விவசாயிகிட்ட வாங்குவது தான். தனியா-ராஜஸ்தான், மிளகாய்-கம்பம், ஏலக்காய்-கேரளா, மிளகு-போடி, மஞ்சள்-ஈரோடு, இப்படி எல்லா பொருட்களையும் நேரடியாக வாங்குகிறோம், இதனால் விவசாயிகளும், மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றனர். என்றும் பெருமிதம் கொள்கிறார் ஐசக்.

இப்ப உள்ள குழந்தைகள் மிளகாயை ,பிளாஸ்டிக் பொருள் என்கின்றனர் … அவர்களுக்கு எந்த காய்கறி, எப்படி விளைகின்றது, என்பதே தெரியவில்லை என்று வேதனைப்படும் ஐசக், நம்ம குழந்தைகளுக்கு வீட்டிலேயே, சிறு சிறு தொட்டிகள் வைத்து காய்கறிகள் வளர்த்து ,அவர்களுக்கு கற்று கொடுக்கவேண்டும் என்று மெனக்கெடுகிறார்., திரு ஐசக்.

வாழ்த்துக்கள் ஆச்சி குழுமம் & ஐசக்

ஓவியங்களுக்கு ‘உயிர்’ தரும் ‘கூடல் கண்ணன்’

WhatsApp-Image-2018-12-25-at-12.14.11-PM.jpeg

கண்ணில் பார்த்ததை வரைவது, பார்த்தவுடன் வரைவது என ஓவியர்களில் பலர் இருந்தாலும் மதுரை ‘கூடல் கண்ணன்’ வரையும் ஓவியங்கள் மிக பிரசித்தி பெற்றவை. சுமார் 25 வருடங்களாக ஓவியத்தில் பல சாதனைகளையும் பாராட்டுகளையும் பெற்ற இவர், இன்னும் பொருளாதார நிலைமையில் பின் தங்கியே உள்ளார்.

WhatsApp-Image-32018-12-25-at-12.14.13-PM.jpeg

ஓவியம் மட்டும்மில்லாமல் மிமிக்கிரி கலைஞராகவும் தன்னை வளர்த்து கொண்டுள்ளார்.. பல டிவி நிகழ்ச்சியில் தன பல குரல் வித்தையை காண்பித்து பாராட்டுகளை அள்ளியுள்ளார் ‘கூடல் கண்ணன்’ .

WhatsApp Image 2018-12-25 at 12.17.21 PM

பாட்டில் மூடி, சாக்பீஸ், சோப் என கிடைக்கும் அனைத்து பொருட்களிலும் தன் கை வண்ணத்தை காண்பிக்கும் இவர் கோல பொடியை மட்டும் வைத்து மிக தத்ருபமாக வரைவதில் மிக கில்லாடியாக உள்ளார். திருமணங்களில் மணமக்களை கோலப்பொடியில் வரைந்து அனைவரின் பாராட்டுகளை பெற்றுள்ளார்…

WhatsApp Image 2018-12-25 at 12.15.48 PM

சைக்கிளில் சென்றவாரே ஓவியம் வரைதல், பேப்பரை கட் செய்து அதன்மூலம் உருவங்களை வரைதல்,
இரு கைகளால் தலைகீழாக வரைதல், வீணான பொருட்களை வைத்து காலை பொருட்கள் செய்வது என பன்முக கலைஞராக வலம் வருகிறார்.

WhatsApp Image 2018-12-25 at 12.15.51 PM

இவரும் இவரின் ஓவியங்களும் பிரபலமானாலும், வாழ்க்கை போரடித்து விட்டதாக நினைத்த இவர் ஒரு மெட்ரிக் பள்ளியில் ஓவிய ஆசிரிராக பணி புரிந்துள்ளார்…

அங்கு பல மாணவர்களுக்கு ஓவிய பயிச்சியை கொடுத்து கலையை வளர்த்துள்ளார்.
இப்பொழுது, அந்த ஆசிரியர் பணியும், திருப்தி நிலையில், மனம் சென்ற போக்கில் பயணித்து திறமைகளை வளர்க்கிறார்.

இவரும் இவரது ஓவிய கலையும் மென்மேலும் வளர tamilbulletin.com வாழ்த்துகிறது.

அப்துல் கலாம் இறந்த அன்றுதான், நான் சமுக சேவகியாக உருவெடுத்தேன் – ரஞ்சிதா குன்னியா

47179081_1998963893737094_6419796640781041664_o

சமூக சேவையை மிக எளிதாக பார்க்கும் இந்த சமூகத்தில் பல தடைகளையும் தாண்டி, மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் கனவு திட்டமான

”அனைவருக்கும் கல்வி 2020, பசுமை இந்தியா” போன்ற திட்டங்களில் தன்னை இணைத்து கொண்டு மிக நேர்த்தியாக செயல்பட்டு அனைவரின் பாராட்டையும் கவனத்தையும் ஈர்க்கிறார் ‘இன்பமயா அறக்கட்டளையின்’ தலைவர் ரஞ்சிதா குன்னியா.

47681738_2003172146649602_8980369732209213440_n.jpg

மதுரையில் சாதாரண குடும்பத்தில் பிறந்து வாழ்ந்த இவருக்கு, இவரின் பெற்றோரின் வளர்ப்புப்படி ‘அனைவருக்கும் முடிந்தவரை எப்பொழுதும் உதவ வேண்டும்’ என்பதை தாரக மந்திரமாக வைத்துள்ளார். மதுரை சௌராஷ்டிரா பெண்கள் மேல்நிலை பள்ளியில் படித்து, காமராஜர் பல்கலையில் எம்.சி.எ படித்துள்ள இவர்,
ரோட்டோரங்களில் உணவு, உடையின்றி திரியும் பலருக்கு தரமான உணவு மற்றும் உடைகளையும் வழங்குவதில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்கிறார்.

 

45221531_1983706488596168_7193439861334867968_o

சிறு வயதிலிருந்தே உதவும் எண்ணம் கொண்ட இவர், சொந்தமாக சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி ,பணம் சம்பாதித்தும் திருப்தி இல்லாமல்,
சமூக மாற்றங்களுக்காக போராடுவதையும், சமூக சேவையும் மட்டுமே திருப்பி தரும் என்று முழு நேர சமூக சேவகியாகியுள்ளார் இந்த மதுரை மாநகர ரஞ்சிதா குன்னியா.

47505978_2002732653360218_1707979743384567808_o

அப்துல் கலாம் இறந்த அன்றுதான், அவரை பற்றி முழுமையாக தேடி அறிந்தேன் என்னும் இவர், இதுவரை நாம் வாழ்ந்த வாழ்க்கையில் பணம் மட்டுமே இருந்தது, இனிமேலாவது யாருக்காவது பிரயோஜனமாக வாழ வேண்டும் என்ற எண்ணமும் பிறந்தது என்கிறார்

46387085_1990640121236138_8041878262311288832_o

2020 வருடத்திற்குள் சுமார் ஒரு லட்சம் ஏழை எளிய மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஒவ்வொரு அரசு பள்ளியிலும் 20 தனித்திறன் கொண்ட மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சான்றிதழும் பதக்கமும் வழங்கி ஒரு மரக்கன்றையும் நடுவித்து சாதனை செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் உழைக்கும் இவர், 2017ம் ஆண்டில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் 100 பேருக்கு, சீருடைகள் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கியுள்ளார்.

47388814_2002713640028786_3013367926959898624_o

சமூக வலைத்தளங்களில் தேவை இல்லாத விஷயங்களை ஷேர் செய்வதும் அரட்டை அடிப்பதும் பொழுதுபோக்காக பலர் இருக்கும் மத்தியில், இதே சமூக வலைத்தளங்களை வைத்து நல்ல நண்பர்களை தேர்ந்தெடுத்து, அதன்மூலம் அநாதை குழந்தைகள், ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் மனநோயாளிகள் என அனைவர்க்கும் தேடி உதவி செய்கிறார்.

47469073_2003171513316332_2796040618982244352_n.jpg

அடுத்தவர்களுக்கு உதவி செய்வதும், அவர்களை சந்தோசப்படுத்தி பார்ப்பதும்தான், மனநிறைவான வாழ்க்கை என்று நம்மை நெகிழ வைக்கிறார் சமூக சேவகி ரஞ்சிதா குன்னியா. இந்த சேவையை முழு நிறைவுடன் செய்ய, இவருக்கு இவரின் குடும்பத்தாரின் ஆதரவு தெம்பூட்டுகிறது.

WhatsApp Imagedd 2018-12-24 at 6.53.26 PM

மேலும் இவர் திரை பிரபலங்களான பாரதிராஜா, ராஜ்கிரண், அமீர், பார்த்திபன், வெற்றிமாறன், சமுத்திரக்கனி மற்றும் பேஸ்புக் நண்பர்களின் உதவியோடு ‘கஜா’ புயலுக்கு பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று உதவியுள்ளார்…

WhatsApp Image 2018-12-24 at 6.53.26 PM

6 வது முறையாக ‘கஜா’புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று உதவ போகும் இவர், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை அவர்களோடயே கொண்டாட முடிவெடுத்துள்ளார்.

இந்த சேவைகளுக்காக பல பாராட்டையும் ஆசிர்வாதத்தையும் பெற்றாலும் திருநெல்வேலி லயன்ஸ் கிளப் வழங்கிய “Best social service organization” விருது என்னை பெருமைபடுத்தியது என்கிறார் இவர்

47680554_2005225266444290_3225603813201149952_o

இவரின் அறக்கட்டளைக்கு பண உதவி மற்றும் பொருள் உதவி செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ள 9994522272