நல்ல வேளை… டாசில் தோத்துட்டோம்… தோனியும் இல்ல.. அதனால போட்டியில ஜெயிச்சுட்டோம் -tamil.mykhel.com

நல்ல வேளை… டாசில் தோத்துட்டோம்… தோனியும் இல்ல.. அதனால போட்டியில ஜெயிச்சுட்டோம் Read more at: https://tamil.mykhel.com/cricket/it-was-better-to-lose-the-toss-says-mumbai-indians-captain-rohit-sharma-014148.html

தோனி, ரோஹித் கொடுத்த அட்வைஸ் – கோஹ்லி பாராட்டு -வெப்துனியா தமிழ்

தோனி, ரோஹித் கொடுத்த அட்வைஸ் – கோஹ்லி பாராட்டு

கோஹ்லி சதம்: இந்தியா 250 ரன்கள் – தினமலர்

கோஹ்லி சதம்: இந்தியா 250 ரன்கள்

ஒல்லி சமி… நல்லா விளையாடும் சமி… மனம் திறந்து பாராட்டும் கோலி.. வாழ்த்தும் ரசிகர்கள் Read more at: https://tamil.mykhel.com/cricket/virat-kohli-praises-shami-with-lean-mean-pace-machine-twitter-013185.html – tamil.mykhel

ஒல்லி சமி… நல்லா விளையாடும் சமி… மனம் திறந்து பாராட்டும் கோலி.. வாழ்த்தும் ரசிகர்கள் Read more at: https://tamil.mykhel.com/cricket/virat-kohli-praises-shami-with-lean-mean-pace-machine-twitter-013185.html

திடீரென ஓய்வை அறிவித்த தென்னாப்பிரிக்காவின் இம்ரான் தாஹிர்! -தமிழ்.ஈனாடு

திடீரென ஓய்வை அறிவித்த தென்னாப்பிரிக்காவின் இம்ரான் தாஹிர்!

கோலி – தோனி கெமிஸ்ட்ரி! சிலாகிக்கும் சீனியர் வீரர்கள்! கொண்டாடும் ரசிகர்கள்! – IEதமிழ்

கோலி – தோனி கெமிஸ்ட்ரி! சிலாகிக்கும் சீனியர் வீரர்கள்! கொண்டாடும் ரசிகர்கள்!

எங்களிடம் கிரிக்கெட் விளையாட, இந்தியாவை கேட்கும் அளவுக்கு நாங்கள் தயாராகுவோம் – பொங்கி எழுந்த பாகிஸ்தான் இயக்குனர்

கிரிக்கெட் என்றாலே அதில் சுவாரசியம் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுவதே… இந்தியா பாகிஸ்தான் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை மிக விரும்புவர்.

இந்தியா-பாகிஸ்தான் இரு நாடுகளும் கிரிக்கெட் கிரிக்கெட் விளையாட போகிறது என்றாலே இருநாட்டு மீடியாக்களும் வரிசை கட்டிக் கொண்டு களத்தில் இறங்கும்…

ஆனால் மும்பை குண்டு வெடிப்பு நடந்ததற்கு பிறகு, இந்த குண்டுவெடிப்புபிற்கு காரணம் பாகிஸ்தானே என்று இந்தியா குற்றம் சாட்ட, அதன்பிறகு எந்த ஒரு கிரிக்கெட் போட்டியிலும் பாகிஸ்தானுடன் இனி இந்தியா விளையாடாது என்று அறிவித்தது பிசிசிஐ…

ஐசிசி ஏற்பாடு செய்யும் போட்டிகளில் மட்டுமே பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடி வருகிறது . இதனாலேயே இந்த இரண்டு கிரிக்கெட் வாரியங்களும் அவ்வப்போது மோதல்களை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். ஒப்பந்தம் செய்துகொண்ட படி இந்திய அணி எங்கள் நாட்டிற்கு விளையாட வராததால் எங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.. எனவே நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் icc யிடம் வழக்கு தொடர்ந்தது . ஆனால் இந்த வழக்கில் இந்தியாவுக்கு ஆதரவாக தீர்ப்பு வர பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய வருத்தமும் பின்னடைவும் கோபமும் ஏற்பட்டது.

இருந்தாலும் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாட வேண்டும் அல்லது பாகிஸ்தான் நாட்டிற்கு இந்தியா வந்து விளையாட வேண்டும் என்பது அங்குள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாமல் கிரிக்கெட் வீரர்களும் வாரியமும் அவ்வப்போது கோரிக்கை வைத்துக் கொண்டுதான் இருக்கின்றன..

இந்நிலையில் தற்போது புதிய நிர்வாக இயக்குனராக பொறுப்பை ஏற்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் இயக்குனர் வாசிம் கான் அவர்கள் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்

என்னவென்றால் எங்கள் கிரிக்கெட் வீரர்களின் தகுதியை நாங்கள் மென்மேலும் பலப்படுத்துவோம் .. இதனாலேயே இந்தியா தானே வந்து எங்களிடம் விளையாட வருமாறு கூறும் நிலை வெகு சீக்கிரம் உருவாகும் என்று தெரிவித்துள்ளார். ஆனாலும் இது மிகப்பெரிய சவாலாகும். இருப்பினும் இந்த விஷயத்தில் தீர்வு எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்..

இந்தியாவுக்கு எதிராக நாங்கள் விளையாட முடியவில்லை என்ற வருத்தம் எங்களுக்கு இருந்துகொண்டே இருக்கிறது .அதனுடைய எங்களுடைய வாழ்க்கை நகர்ந்து கொண்டே இருக்கிறது என்றும் கூறியுள்ளார் இயக்குனர்.. எங்கள் நோக்கம்  என்னவெனில் பாகிஸ்தான் கிரிக்கெட் உலகத்தரம் வாய்ந்த அளவுக்கு உயர்த்த வேண்டும் .எங்கள் வீரர்களை சர்வதேச அளவிற்கு வாழ்க்கை வேண்டும் என்றும் கூறினார்.

ஐசிசி வார்னிங் – தோனி கீப்பிங் செய்யும்போது ….

‘தோனி  ஸ்கிப்பிங் செய்யும்போது யாரும் கிரீஸ் கோட்டை தாண்டாதீர்கள்’ இப்படி ஒரு எச்சரிக்கை icc ட்விட்டர் அக்கவுண்ட்ல பதிவு பண்ணி இருந்தா எப்படி இருக்கும் ?

ஆனால் இதுதான் உண்மை.. அனைத்து சமூக வலைத்தளங்களிலும் நேற்று நடந்த இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் தோனியின் கீப்பிங்கியையும் அவர் ரன் அவுட் செய்த விதமும் மிகப்பெரிய பாராட்டை பெற்றுள்ளது.

நியூசிலாந்து வீரர் ஜேம்ஸ் நீசம்-ஐ ரன் அவுட் செய்ததற்காக இவ்வளவு பெரிய பாராட்டுகளை பெற்றுக் கொண்டிருக்கிறார்.

அதற்குமேலும் மகுடம் சூட்டுவது போல் icc, ‘இனிமேல் யாரும் தோனி கீப்பிங் செய்யும்பொழுது கிரீஸ் கோட்டை தாண்டி விளையாடாதீர்கள்’ என்று எச்சரிக்கை பதிவை செய்திருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் ,குறிப்பாக தோனியின் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.

twitter

அதற்கு சம்பந்தப்பட்ட நியூசிலாந்து வீரர் ஜேம்ஸ் நீசம் நன்றி தெரிவித்துள்ளார் இனிமேல் பந்து யாரிடம் இருக்கிறது என்பதை பார்த்து ஓடுகிறேன் என்றும் கூறியுள்ளார் .

twitter

பேட்டிங்கில் சொதப்பினாலும் நான் கில்லி தான்டா- தோனி

thanks AFP

மகேந்திர சிங் தோனி இல்லாமல் ,நமக்கு இரண்டு உலக கோப்பை இல்லை என்பதே நிதர்சனம். ஆனால் மகேந்திர சிங் தோனியின் பேட்டிங் திறமை பற்றி ,சமீப காலமாக பல விமர்சனங்கள் எழுந்து கொண்டு வரும் நிலையில் , கேப்டன் கோலியும், பயிற்சியாளர் ரவிசாஸ்திரியும், அவர் மீது அபார நம்பிக்கை வைத்துள்ளனர்.

அந்த நம்பிக்கையை காப்பாற்றும் விதத்தில் அவர் அவ்வப்போது ரன்களை எடுத்து தன்னையும் காப்பாற்றிக் கொள்வார்.  சில போட்டிகளின்போது அவருடைய பங்களிப்பு மிக அதிகமாக இருக்கும். பேட்டிங் ஆக இருந்தாலும் சரி அல்லது கீப்பிங் ஆக இருந்தாலும் சரி ,அவருடைய பங்களிப்பு இல்லாமல், இந்தியா வெல்ல வாய்ப்பே இல்லை என்ற நிலையை இன்று வரை அவர் கொண்டிருக்கிறார்.  மேலும் கேப்டன்களுக்கு அவ்வப்போது சில உருப்படியான அறிவுரை கூறி, அணியை காப்பாற்றுவதிலும் மிக கில்லாடியாக உள்ளார்.

இதேபோல் நேற்று நடந்த இந்தியா நியூசிலாந்து ஐந்தாவது ஒருநாள் போட்டியில் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்து தோனி அனைவருடைய ஏமாற்றத்தை அளித்து, பின்பு அவருடைய கீப்பிங் செயல்பாட்டால் நல்ல பெயரை சம்பாதித்தார் .

ஒரு நிலையில் வெற்றிக்காக போராடிக்கொண்டிருந்த நியூசிலாந்து அணி 31 ஓவர்களில் 135 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து திணறிக் கொண்டிருந்தனர் .இருந்தாலும் அந்த அணியின் ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் நீசம் விக்கெட் மிக முக்கியமானதாக இருந்தது.

ஏனென்றால் அவர் மிக அருமையாக ஆடிக்கொண்டிருக்க, அவரை எவ்வாறு வெளியேற்றுவது என்று அனைத்து வீரர்களும் குழம்பி கொண்டிருக்க, அவருடைய விக்கெட், கீப்பர் தோனியின் சமயோசிதமான புத்தியால் விழுந்தது.

37 வது ஓவரில் இரண்டாவது பந்தை அடிக்க, நீசம் நன்றாக காலை நீட்டி ஸ்வீப் ஆட முயன்றார். கேதர் ஜாதவ் பந்து வீச்சு அபாரமாக இருந்து பந்து கால் பேடில் பட்டு பின்னால் தோணியிடம் சென்றது.

கேதர் ஜாதவ் இதற்கு எல்பி முறையீடு செய்தார் .ஆனால் அது ஸ்டம்புக்கு வெளியே அதாவது பேட்ஸ்மேன் லைனுக்கு வெளியே நின்று பேடில் வாங்கினார். பின்பு அது கீப்பரிடம் சென்றது. இதனால் அது எல்பி கிடையாது என்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் டோனி அண்டர் ஆர்ம் முறையில் அழகாக பந்தை, ஸ்டெம்பை நோக்கி எறிய அது ஸ்டெம்பில் பட , நீசம் ரன் அவுட் ஆனார்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் ,எந்த போட்டியிலும் ஒரு விக்கெட் விழுந்ததற்கு துள்ளிக் குதிக்காத தோனி, இந்த விக்கெட் விழுந்த ஒரு காரணத்தால் மிகப்பெரிய கொண்டாடத்தை கொண்டாடினார். இது அனைவருக்குமே ஆச்சரியத்தையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மகேந்திர சிங் தோனி ஏதாவது ஒரு துறையில் இந்திய அணிக்கு தான் எவ்வளவு முக்கியம் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொண்டு வருகிறார்.

தொடரை வென்ற தலைக்கணம்… ஆப்பு வைத்த நியூசிலாந்து

thanks – twitter

 இந்திய அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ,நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது. ஐந்து  ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில், விளையாட இந்திய அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் சென்று உள்ளது.

நடந்து முடிந்த 3 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து தோனி மற்றும் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு மிதமாக இன்று கலந்து கொண்ட இந்திய அணி பரிதாபமாக தோல்வி கண்டது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தார் நியூசிலாந்து அணியின் கேப்டன். ஆரம்பமே அதிர்ச்சி தரும் விதமாக  ஷிகர் தவான் 13 வெளியேற , அடுத்து அறிமுக வீரர் சுமன் களமிறங்கினார்… இவர் களம் இறங்க, உடனே நான் வெளியேறுகிறேன் என்பதுபோல், ரோகித் சர்மா 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்தடுத்து வந்த ராயுடு, வந்த வேகத்தில் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.  அதற்கேற்றாற்போல் அடுத்து வந்த அனைத்து வீரர்களும் ,சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி 50 ஓவர்களில் வெறும் 92 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டத்தை இழந்தது.

இதன்மூலம் ஒருநாள் போட்டியில் மிகக்குறைவான ரன்கள் எடுத்த பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது இந்தியா.  இதற்கு முன்னதாக சார்ஜாவில் நடந்த போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக 54 ரன்கள் எடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

நியூஸிலாந்து தரப்பில் போல்ட் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்

thanks – twitter

இந்த சொற்ப ரன்களை வென்றுவிட  ஆடிய நியூசிலாந்து அணி தொடக்க வீரர்கள் 2 பேரை இழந்தாலும்  14 ஓவர்களிலேயே 93 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது.

ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில்.1-3 என்ற விதத்தில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது

தோனியை முந்தினார் மிதாலி ராஜ்

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இது ஒரு பொற்காலம் என்றே கூற வேண்டும். அந்த அளவுக்கு இந்தியா, விளையாட்டுகளில் வெற்றிகளை குவித்து வருகிறது .குறிப்பாக கிரிக்கெட்டில் ஆண்கள்  விளையாட்டு ஆனாலும் சரி ,பெண்கள் விளையாட்டு ஆனாலும் சரி, வெற்றியை மட்டுமே பெற்று வருகிறோம்.

தற்போது நியூசிலாந்து சுற்றுப்பயணம் சென்று விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி ,3 ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து வென்று சாதனை படைத்தது…

அதேபோல் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியும் சிறந்த வெற்றியை நியூசிலாந்துக்கு எதிராக பதிவிட்டு வருகிறது

அதிலும் குறிப்பாக இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ், மிகச் சிறந்த வீரராக இருந்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும் .

ஆண்கள் கிரிக்கெட் அணியில் தோனி ஒருவர் போதும். ஏனெனில் எவ்வளவு பெரிய ஸ்கோர் ஆனாலும் , மிகப் பொறுமையாக நிதானமாக ரன்களை எடுத்து பின்பு அதிரடியாக ஆடி வெற்றிக்கனியை பறிப்பார்

அதேபோல் மகளிர் அணியில், கேப்டன் மிதாலி ராஜ், டோனியை மிஞ்சி விட்டார் என்று சொன்னால் அது மிகையல்ல.

இரண்டாவது போட்டியில் அரைசதம் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் வெற்றியை பெற்று வந்தார்..

முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 161 ரன்களுக்கு ஆட்டமிழந்தது .அடுத்து ஆடிய இந்திய மகளிர் அணி துவக்கத்திலேயே தனது துவக்க வீரர்கள் இழந்தாலும், அடுத்த நம்பிக்கை நட்சத்திரங்களான ஸ்மிருதி மந்தனா மற்றும் கேப்டன் மிதாலி ராஜ் பொறுப்பான ஆட்டத்தை வெளியிட்டு வெற்றிக்கனியை படித்தனர்.

111 பந்துகளை சந்தித்த மிதாலி ராஜ் 63 ரன்கள் அடித்தார், 83 பந்துகளில் அதிரடியாக 90 ரன்கள் எடுத்தார் ஸ்மிருதி மந்தனா. பொறுமையாக ஆடியதால் விமர்சனத்திற்கு உள்ளான மிதாலி ராஜ் ,வெற்றிக்குப் பிறகு அவருடைய பொறுப்பான ஆட்டம் தான் என்று அனைவராலும் பாராட்டப்பட்டது . இந்த வெற்றியில் தோனியை மிஞ்சி விட்டார் என்பது அவருடைய சேசிங்  சராசரியை வைத்தே சொல்லலாம்

தோனி 103.7 சராசரியும் மிதாலி ராஜ்111.29 சராசரி வைத்து முன்னிலையில் உள்ளார்

ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணியை சேர்த்து பார்த்தால்  தோனியை மற்றும் கோலி யை கீழே தள்ளி முதலிடத்தில் உள்ளார் கேப்டன் மிதாலி ராஜ்

கண்ணுபட போகுதய்யா விராத் கோலி

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான விராட் கோலி, எதிரிக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறார் என்பது ஊரறிந்த விஷயம் .மிகச் சிறந்த கிரிக்கெட் அணியில் நம்முடைய இந்திய அணியும் ஒன்று…

தற்போது நடந்து முடிந்த ஆஸ்திரேலியா தொடரில் மிகச் சிறந்த வரலாற்று மிக்க வெற்றியைப் படைத்தது நம் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி.  அதற்கு மகுடம் சூட்டும் விதமாக icc , விராட் கோலிக்கு இந்த வருடத்திற்கான அனைத்து விருதுகளையும் விராட் கோலி வழங்கி இந்தியாவையும் பெருமைப்படுத்தியுள்ளது இன்டர்நேஷனல் கிரிக்கெட் கவுன்சில்….

ஒருநாள் கிரிக்கெட் போட்டி, 20 20 கிரிக்கெட் போட்டி மற்றும் டெஸ்ட் தொடர் என்று அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கும் தகுதியான நபர்  விராட் கோலி தான் என்று அவருக்கு அனைத்து விருதுகளையும் வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது .

thanks – twitter

ஓய்வை அறிவித்த விராட் கோலி… அதிர்ச்சியில் ரசிகர்கள்…

இந்திய கிரிக்கெட் உலகில் ,கபில்தேவ், சச்சின், தோனி இவர்களுக்கு அடுத்தபடியாக விராட் கோலி தவிர்க்கமுடியாத ஒரு வீரர்…

இந்திய கிரிக்கெட் வரலாறு, இனி விராட்கோலி இல்லாமல் எழுத முடியாது. அந்த அளவிற்கு சாதனை மேல் சாதனை செய்து ரசிகர்களையும் சக வீரர்களையும் ஆச்சரியத்தையும் சந்தோசத்தையும் கொடுத்து வரும் இவர், எதிரணிக்கு இன்றுவரை சிம்மசொப்பனமாக விளங்குகிறார்.

உலக கிரிக்கெட் வரலாற்றில் இவருடைய சாதனைகள் இனி யாராலும் நிகழ்த்த முடியாது என்பதே உண்மை.  இவரது வயது, இவருடைய அனுபவம் , இவருடைய திறனும் பார்க்கும்பொழுது இனி இவருடைய சாதனைகள் யாரும் நெருங்கக்கூட முடியாது என்பதே உண்மை.

இந்நிலையில் தன்னுடைய ஓய்வு பற்றி அறிவித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி .சமீபத்தில் ஆஸ்திரேலியாவை நொறுக்கி எடுத்த நமது கோலி தலைமையிலான இந்திய அணி,  அங்கிருந்து நியூசிலாந்து சென்று, அங்கு ஒரு வரலாற்று வெற்றியை கொடுக்க இருக்கும் நமது கேப்டன் அவர்கள் , தனது விராட் கோலி அப்ளிகேஷன் மூலம் ரசிகர்களோடு நேற்று பேசினார்.

அப்போது இன்னும் 8 வருடங்களுக்கு பிறகு அனுஷ்காவுடன் குடும்பத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பேன். ஆனால் அப்போதும் என் வாழ்க்கையில் கிரிக்கெட் ஒரு பகுதியாக இருக்கும் .எந்த காலத்திலும் குடும்ப முக்கியமானது. வாழ்க்கை வேறு, கிரிக்கெட் வேறு, என்று நான் பார்த்ததில்லை என கூறினார். தற்போது 30 வயதாகும் இவர் , இன்னும் எட்டு ஆண்டுகள் விளையாடினால் ,கிரிக்கெட்டில் அவருடைய சாதனைகளை நெருங்கவே முடியாது என்பதில் சந்தேகமே இல்லை .

உனக்கு இது தேவையா ?

ஒரே நாள்ல எல்லாரோட காலில் விழுந்த கிரிக்கெட் வீரர்

ஆஸ்திரேலியா இந்தியா இவங்க  இடையே நடந்த டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வரலாற்று வெற்றி பெற்றுள்ளது. அந்த வெற்றியை கொண்டாடும் விதமாகவும், அடுத்து நடக்க இருக்கிற ஒருநாள் போட்டிகளில் கலந்து கொள்வதற்காகவும்  நட்சத்திர வீரர் பாண்டியா இந்திய அணியோடு இணைந்துள்ளார்

இதோடு சில தினங்களுக்கு முன்னர் ஒரு தனியார் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவரும் ராகுலும் ஒரு சர்ச்சைக்குரிய பதில்களையும் விளக்கத்தையும் அளித்து உள்ளார்கள்.  அதில் ஒன்று சச்சினை விட விராத் கோலி தான் மிகச்சிறந்த வீரர் என்று சொல்லி அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் வெறுப்பேற்றி உள்ளார்

இன்னும் அதிகப்படியாக யாரோடு டேட்டிங் போகணும் யாரோட உல்லாசமாக இருக்கணும் அப்படின்னு இரண்டு நடிகைகளின் பேரையும் தெரிவித்துள்ளார்கள்,.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர் ரசிகர்களும்  முன்னாள் வீரர்களும். மேலும் இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த மாதிரி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த 2 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியது .அதுவும் 24 மணி நேரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று.

அதிர்ந்து போன பாண்டியா தன் கருத்து, யாரையும் காயப்படுத்தி இருந்தால், என்னை மன்னிக்க வேண்டும் கூறியுள்ளார் . மேலும் யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Thanks for photo – twitter