கடன் தொல்லையும், எதிரிகள் தொல்லையும் இன்றி வாழ சிவனுக்கு இந்த ஒரு பொருளை கொண்டு அபிஷேகம் செய்யுங்கள் -tamil.boldsky.com

கடன் தொல்லையும், எதிரிகள் தொல்லையும் இன்றி வாழ சிவனுக்கு இந்த ஒரு பொருளை கொண்டு அபிஷேகம் செய்யுங்கள் Read more at: https://tamil.boldsky.com/insync/pulse/2019/lord-shiva-lingam-abhishekam-and-its-benefits-025155.html

அமாவாசை நல்ல நாளா? தீய நாளா? வட இந்தியர்கள் நல்ல நாளாக கருதுவது ஏன்? – தமிழ்.சமயம்

அமாவாசை நல்ல நாளா? தீய நாளா? வட இந்தியர்கள் நல்ல நாளாக கருதுவது ஏன்?

மூன்றாம் பிறையின் முக்கியத்துவம் என்ன…?

இஸ்லாமியர்கள் போற்றிக் கொண்டாடும் ஒரு நாள் மூன்றாம் பிறை என்பது அனைவருக்கும் தெரியும். அதே அளவு  கிறிஸ்து மற்றும் இந்துக்களும் மூன்றாம் பிறையை மிகமுக்கியமாக பார்க்கிறார்கள்… அப்போ அதன் சிறப்பு என்ன என்பதை பார்ப்போம்.

நாம் எந்த நல்ல காரியங்கள் செய்தாலும் அது வளர்பிறையாக இருக்க வேண்டும் என்பதை நாம் அனைவரும் கடைபிடிக்கிறோம். அவ்வாறு இருக்கும்போது பிறைகளிலேயே மிக முக்கியத்துவம் வாய்ந்தது மூன்றாம் பிறை .அது தெய்வீகமான பிறை என்றும் சொல்வார்கள்.

நாயன்மார்கள், இந்த மூன்றாம் பிறையை ‘இத்தாய் பிறை சூடிய பெருமானே’ என்று பாடுகிறார். இந்த மூன்றாம் பிறையை சிவன் தன் முடி மீது அணிந்திருக்கிறார் என்றும் சொல்வார்கள்.

மூன்றாம் பிறையின் விசேஷம் என்னவென்றால், அமாவாசை முடிந்து தெரிய கூடிய பிறைதான் இந்த மூன்றாம் பிறை. ஏனென்றால் அமாவாசை அன்றும் அதற்கு மறுநாளும் சந்திரன் தெரியாது. அதுக்கு மறு நாள் தான் சந்திரன் ஒளிரும். ஒரு சின்ன ஒளிக்கீற்றாக வரும் . அதனை ஏதாவது ஒரு காட்டில் அல்லது ஒரு கிராமத்தில் இருந்து மின் விளக்குகள் இல்லாத இடத்தில் இருந்து பார்த்தால் உங்களுக்கு ஆச்சரியம் தெரியும். அதை பார்த்த உடன் உங்களுக்கு ஒரு புத்துணர்வு கிடைக்கும் .

எந்த ஒரு உயிரினமும் சிறுவயதில் மிக அழகாக தெரிவார்கள். அதாவது கன்றுக்குட்டி, கோழி குஞ்சு, கைக்குழந்தை இவ்வாறு எதை பார்த்தாலும் அதனுடைய அழகிலும் வசீகரத்தாலும் நாம் மயங்கிவிடுவோம்.

அதே அளவு இந்த மூன்றாம் பிறை பார்க்கும்போது மனம் குளிர்ச்சியடையும். அனைத்து மதங்களிலும் மூன்றாம் பிறை தெய்வீகமான வழிபாடாக இருக்கிறது . மூன்றாம் பிறையை கண்டு வணங்குவது ஆயுள் விருத்தியாகும். செல்வங்களைச் சேர்க்கும். பிரம்மஹத்தி போன்ற தோஷங்களை நீக்கும் என்று சொல்லப்படுகிறது.

சோமவாரம் என்றழைக்கப்படும் திங்கட்கிழமை அன்று இந்த மூன்று முறை வந்தால் மிக சிறப்பு . திங்கட்கிழமை அன்று மூன்றாம் பிறையை தரிசித்தால் வருடம் முழுவதும் எங்கு சந்திரனை வழங்கிய பலன்கள் கிடைக்கும் என்று முன்னோர்கள் கூறுகிறார்கள். அதைப் பார்த்தாலே மனக்கஷ்டங்கள் வருத்தங்கள் நீங்கும் .சந்தோஷங்கள் ஓங்கும்.

மாசித்திருவிழா ஆரம்பம். திண்டுக்கல் விழாக்கோலம்

திண்டுக்கல் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் திருவிழா பூ அலங்காரத்துடன் தொடங்கியது .

திண்டுக்கல் மாவட்டம் மலைக்கோட்டையின் கீழ் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற கோவில், கோட்டை மாரியம்மன் கோவில் ஆகும். ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் இந்த கோவிலில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.

300 வருடம் பழமை வாய்ந்த இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் அனைத்து மதத்தினரும் பங்கேற்பார்கள். மாசி திருவிழா, பூ அலங்காரதுடன் தொடங்கியது. இன்று காலை பூஜைகள் நடைபெற்று வருகிறது. மிகச் சிறப்பாக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில், அம்மன் வீதி உலா வந்து அனைத்து பக்தர்களுக்கும் காட்சி கொடுத்து வருகிறார்.

நான்கு ரதவீதிகளிலும் அம்மன் உலா வர, அம்மனுக்காகக் காத்துக் கொண்டிருந்த அனைத்து பக்தர்களும், அம்மன் மீது பூக்களைத் தூவி, சிரம் தாழ்த்தி பயபக்தியுடன் வழங்கினார்கள்.

இத்திருவிழாவையொட்டி ஒவ்வொரு சாலையிலும் ஆங்காங்கே மோர்பந்தல், மாவிலை தோரணம், வாழை மரம், என அழகாக ஒவ்வொரு சாலையிலும் காட்சியளிக்கிறது.

மாசி திருவிழாவின் முதல்நாள் என்பதால், ஏராளமான பக்தர்கள் ஒவ்வொரு சாலையிலும் குவிந்து, அம்மனுக்காக காத்திருக்கிறார்கள்.

1.2.19 இன்றய ராசிபலன்

இந்த 4 ராசிகளுக்கு மட்டும் நினைத்தது நிறைவேறும்

மேஷம்

இன்னைக்கு சொந்த பந்தம் நண்பர்கள் இப்படி யார்கிட்டயும் தேவையில்லாத விவாதங்களை தவிர்ப்பது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் வேண்டும். யாருடைய சண்டை போட வேண்டாம் .ஜாக்கிரதை வேண்டும்.

ரிஷபம்

இன்னைக்கு வீட்ல, கணவன் மனைவி ரொம்ப ஒற்றுமையா சந்தோஷமாக இருப்பீர்கள். அரசியல் சம்பந்தப்பட்ட பொது இடங்களில் பேச உங்களுக்கு வரவேற்பும் பாராட்டும் அதிகரிக்கும். அதேமாதிரி உங்களோட உயர் அதிகாரிகளோட பாராட்டும் பதவி உயர்வும் கிடைக்க சான்ஸ் இருக்கு. வியாபாரத்தில் பெரிய லாபம் கிடைக்கும்.

மிதுனம்

உங்களுடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள பாருங்க .சக ஊழியர்களிடம் பொறுமை காட்டவும். வீட்டில இருக்கிற கால்நடைகளால் செலவுகள் வரும். பயணம் செய்யும் போதும் ஜாக்கிரதையா இருக்கணும்.

கடகம்

வீட்டில் குழந்தைகளுடன் நிதானமாக நடந்துக்கொள்ள வேண்டும். அக்கம்பக்கத்துல யாரிடமும் வீண் வாக்குவாதம் வேண்டாம். உடல் ஆரோக்கியத்தோடு மனசையும் பத்திரமா பார்த்துக்குங்க. அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு இன்னைக்கு வேலை அதிகமாகும் .பரம்பரை சொத்தும் மூலம் செலவுகள் வர சான்ஸ் இருக்கு.

சிம்மம்

உங்களுடைய வாதத்திறமையால் உங்களுக்கு நன்மை பயக்கும். பேச்சுத் திறமை எல்லோரையும் வசீகரிக்கும். அதனால வீட்டில உள்ளவங்களோட ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் .அரசு தரப்பிலிருந்து நீங்க எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் நடக்கும். விருந்து விழாக்களில் கலந்து கொள்ள வாய்ப்பு இருக்கு.

கன்னி

சின்ன சின்ன பயணங்கள் மனசு சந்தோசமா இருக்கும். பெரிய பதவியில் இருப்பவர்களால்  உங்களுக்கு பெரிய பாராட்டு கிடைக்கும். தொழிலை விரிவாக்கம் செய்வதில் ஏதாவது முயற்சி இருந்தால் கண்டிப்பாக செய்யுங்கள், உடனே நடக்கும். நீங்க செய்ற எல்லா முயற்சிக்கும் வெற்றி கிடைக்க இன்னைக்கு கிரகங்கள் சாதகமா இருக்கு. மாணவர்கள் ஆசிரியரிடம்  நற்பெயர் வாங்குவீர்கள்.

துலாம்

இன்னைக்கு கிரகங்கள் இருக்கிற நிலையில ,உங்களுக்கு வீடு வண்டி வாகனம் வாங்குவதற்கு வாய்ப்புகள் இருக்கு. அதற்கான முயற்சிகள் செய்தால் கண்டிப்பாக நடக்கும் .எதிர்பார்த்த எதிர்பாராத லாபங்கள் வரும். பெரிய மனிதர்களோட சந்திப்பு உங்களுக்கு கிடைக்கும் .நீங்க எந்த முயற்சி செய்தாலும் அது வெற்றியே வரும்.

விருச்சிகம்

இன்னைக்கு உங்களோட கூட பிறந்தவங்க அனைவரும், உங்களுக்கு ரொம்ப ஆதரவா இருப்பாங்க . நீங்க எந்த தொழில் செய்தாலும், அதில் மிகப் பெரிய லாபம் கிடைக்கும் .ஆனால் எங்கு சென்றாலும் கூடுதல் கவனம் வேண்டும், எந்த வேலை செய்தாலும் யாரிடம் கொடுக்காமல் நீங்கள் செய்ய வேண்டும். இல்லையென்றால் வேலை இரட்டிப்பாகும்.

தனுசு

நல்லவர்களோடு ஒத்துழைப்பால் உங்களோட தொழில் சிறப்பாக நடக்கும். வீட்டில் நீங்கள் என்ன செய்தாலும் ஆதரவு கூடும். தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் பணி சிறப்பாக அமைந்து வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். அதற்கான உதவிகளும் கிடைக்கும்.

மகரம்

உங்கள் உடன்பிறந்த சகோதரிகள் மூலம் நற்செய்திகள் வீடு வந்து சேரும். உங்களோட குழந்தைகள் செயல்பாட்டால் உங்களுடைய செல்வாக்கு உயரும். பயணங்களும் லாபம் தரும். குடும்பத்துல இருக்கிற அத்தனை பேரோட ஆதரவால் நீங்க நினைத்தது நிறைவேறும். நகைகள் வாங்கும் வாய்ப்புகளும் அதிகம்.

கும்பம்

சொந்தமாக தொழில் செய்து வரும் உங்களோட வளர்ச்சி இன்னைக்கு அதிகமாகும் .ஆனாலும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு .நல்ல யோகா செய்ய வேண்டும். மெடிடேஷன் செய்ய வேண்டும். புதிய வாகனங்கள் வாங்குவதற்கான வாய்ப்புகளும் என்று கொண்டு.

மீனம்

நீங்கள் செய்கின்ற தொழிலில் நல்ல ஆதரவு கிடைக்கும். புதிய யுக்திகளால் தொழிலை அபிவிருத்தி செய்து அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். இருந்த மனவருத்தங்கள் குறையும் .எங்கு சென்றாலும் அங்கு தலைமைப் பொறுப்புகள் கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.

இன்றைய ராசி பலன் – 31.01.19

இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டும்

மேஷம்

நீ என்ன முயற்சி எடுத்தாலும் இன்னைக்கு அதில் வெற்றி கிடைக்கும். பணவரவும் உண்டு. அரசியல் சம்பந்தமான அதிகாரிகளை சந்தித்து அதில் வெற்றியும் கிடைக்கும். மதியத்துக்கு மேல உங்களுக்கு பிடிக்காத நபரை சந்திக்க நேரிடும். அதனால மனவருத்தமும் வரும். மேலும் சாப்பிட முடியாத அளவுக்கு வேலை இருந்து கொண்டே இருக்கும். அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு அம்மா வழியில் நன்மை ஏற்படும்

ரிஷபம்

எதிர்பாராத செலவுகள் இன்னைக்கு கண்டிப்பா உங்களுக்கு இருக்கு. பணம் இருக்கறதனால ஓரளவு சமாளித்து விடுவீர்கள். வியாபாரத்தில் லாபம் கண்டிப்பா இருக்கும். உங்க குடும்பத்துல எல்லாரும் பாராட்டுவாங்க. திடீர்னு பணம் வரும். மாலையில் சொந்தக்காரங்க வீட்டுக்கு வருவாங்க. சுறுசுறுப்பா இருப்பீங்க.

மிதுனம்

நல்ல விஷயத்தை காலையிலேயே தொடங்கி விடுங்கள்.  மதியத்துக்கு மேல ஏதாவது ஒரு விஷயத்தை நினைத்து கவலை படுவீங்க. பயம் உண்டாகும். மற்றவர்களோடு பேசும்போது ஜாக்கிரதையா பேசவும். உங்க வாயால இன்னைக்கு பிரச்சனை வர சான்ஸ் இருக்கு. சொந்த வேலைகளில் கவனமாக இருங்கள் .மிருகசீரிடம் நட்சத்திர பிறந்த உங்களுக்கு இன்னைக்கு புதுசா ஏதாவது கிடைக்கும்.

கடகம்

சொந்தக்காரங்க வீட்டுக்கு வர வாய்ப்பு அதிகம்., அதனால இன்னைக்கு சந்தோஷமா இருப்பீங்க . பணவரவு தாராளமாக இருக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடும். சிலருக்கு வெளியூர் போறதுக்கு வாய்ப்புகள் இருக்கு. அலுவலகத்தில் சலுகைகளும் கிடைக்க வாய்ப்பு இருக்கு. தொழிலில் வருமானம் அதிகமாக இருக்க வாய்ப்பு இருக்கு. புனர்பூச நட்சத்திர பிறந்தவர்களுக்கு புதுசா எதாவது செய்தால் அது கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் கொடுக்கும்.

சிம்மம்

இன்னைக்கு அறிவுபூர்வமான பேச்சால் நீங்கள் மற்றவர்களுக்கு சந்தோஷத்தை தருவீங்க. உங்களுடைய குழந்தைகளால்  உங்களுக்கு மிகப்பெரிய சந்தோஷம் காத்து இருக்கு .உங்களோட வாழ்க்கை துணை மூலமாகவும் நல்ல செய்தி வருவதற்கு வாய்ப்புகள் நிறைய இருக்கு. சந்தோசமான நாள் .மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சித்தர்களின் ஆசி கிடைக்கும்.

கன்னி

தகப்பன் வழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். அரசு வகையில் நீங்க எதிர்பார்க்கிற எல்லா விஷயங்களும் நல்லபடியா நடக்கும். உங்களோட பேச்சுக்கும் முயற்சிக்கும் வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு கண்டிப்பாக கிடைக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அவர்களுடன் நண்பர்களால் இன்னைக்கு சந்தோஷமும் நன்மையும் கிடைக்கும்.

துலாம்

இன்னிக்கு உங்களுக்கு  நேரம் சரியில்லாத காரணத்தால் புதிய முயற்சியில் ஈடுபட ஈடுபடுவதை தவிர்க்கவும். மதியத்துக்கு மேல எதிர்பார்த்த தகவல் கண்டிப்பாக வரும். குடும்பத்தில் கேக்குற விஷயங்களை செய்வதற்காக நிறைய செலவு செய்தீர்கள். எதிர்பாராத செலவுகளும் இருக்கும். ஆபீஸ்ல நல்ல உற்சாகமாக இருப்பீர்கள் .வியாபாரத்தையும் விற்பனை நல்லபடியா இருக்கும் .சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.

விருச்சிகம்

இன்னிக்கு ரொம்ப நல்ல நாளு. உங்களோட தாயோட விருப்பத்தை நிறைவேற்றுங்கள். சொந்தக்காரங்க வாக்குவாதத்தை தவிர்த்து விடுங்கள். அவங்க உங்களுக்கு சங்கடத்தை தருவாங்க .ரொம்ப பொறுமையா இருக்கணும். வியாபாரத்தில் விற்பனை சுமாராக இருக்கும். பார்ட்னர்ஷிப் பிரச்சனைகள் வரும். விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகள் வழியில் நல்ல பெயர் கிடைக்கும்.

தனுசு

தினமும் செய்து வர வேலைகளை ஜாக்கிரதையா செய்யுங்கள். மதியத்துக்கு மேல நீங்க எதிர்பார்க்கிற தொகை வந்து சேரும். மதியம் வரை எந்த புது முயற்சி செய்யாதீர்கள் .ரொம்ப நாளா செய்ய நினைத்திருந்த காரியத்தை நிறைவேற்றுங்கள். மாலையில் சந்தோஷமான சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு இருக்கு .மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பயணங்களில் சந்தோஷம் உண்டு.

மகரம்

தினமும் செய்கிற வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். புதுசா எதுவும் செய்ய வேணாம் .பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. கடன் வாங்கவும் நேரும். ஒரு சிலருக்கு புதுசா சில நண்பர்கள் கிடைப்பார்கள் .அவங்களால நன்மைகளும் கிடைக்கும். மதியத்துக்கு மேல உடல்நலம் பாதிப்பு சிறிய அளவில் ஏற்பட வாய்ப்பு இருக்கு. ஜாக்கிரதை. உத்திராடம் நட்சத்திர பிறந்தவர்களுக்கு திடீரென்று பயணம் போக வாய்ப்பு உண்டு.

கும்பம்

இன்னைக்கி ரொம்ப பொறுமையா இருங்க. எந்த முக்கியமான முடிவையும் எடுக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று வாருங்கள். பிள்ளைகள் வழியில் பிரச்சினைகள் வர வாய்ப்பு இருக்கு. ஆனா பாதிப்பு ஏதும் இருக்காது. வியாபாரத்தில் நிறைய உழைக்க வேண்டி இருக்கும். அவிட்டம் நட்சத்திர பிறந்தவர்களுக்கு இன்னைக்கி எதிர்பாராத செய்தி கிடைக்கும்.

மீனம்

 எதிர்பாராத செய்தி உங்களை வந்து மகிழ்ச்சியில்  ஆட்டம் போடவைக்கும். சிலருக்கு நல்ல லாபமும் கிடைக்கும் . சொந்தக்காரங்க வருகையால் வீட்டுல ரொம்ப சந்தோஷமா இருப்பீங்க,  பழைய நண்பர்களையும் பார்ப்பீங்க. அதனால விருந்துக்கு போவிங்க .பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புது ஆடைகள் வாங்க வாய்ப்பு இருக்கு .

வீட்டில், கெட்ட சக்திகளை விரட்டி, லக்ஷ்மியை வரவழைக்க..

வீட்ல பணக்கஷ்டம் மாறி நல்ல செல்வ செழிப்போடு வாழ நிறைய பரிகாரங்கள் இருந்தாலும் இந்த பரிகாரம் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பரிகாரமாகும்.

அதுவும் ரொம்ப எளிமையான முறையில் ,திருப்தி அளிக்கக்கூடிய வகையில், அதுவும் நீங்க நம்பக்கூடிய வகையில் இருக்கும் பரிகாரமாகும்.

என்னவென்று பாருங்கள்…

வீட்டில் உள்ள கெட்ட சக்திகளை, [நெகட்டிவ் எனர்ஜி சொல்வாங்க] அதைப் போக்குவதற்கு கல் உப்பு வைத்து, எப்படி வீட்டில் செல்வ செழிப்பை உருவாக்குவோம்… அப்படின்னு சில வழிமுறைகளை சொல்றாங்க.

என்னவென்றால்,  எப்பவும் நம்ம வீடு கழுவும் போது, அந்த தண்ணியில் கல் உப்பு ஒரு கைப்பிடி போட்டு வீட்டை கழுவி வருவதை வழக்கமாக கொண்டால் உடனடி பலன் கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.

இரண்டாவது, ஒரு பவுலில் தண்ணியோட ஒரு ஸ்பூன் உப்பைப் போட்டு வீட்டில் தென்மேற்கு மூலையில் வைத்திருங்கள், இது கண்டிப்பாக உங்களுக்கு நல்ல வருமானத்தை ஏற்படுத்தும். முக்கியமான விஷயம் என்னன்னா இந்த பவுல் இருக்குற தண்ணி எப்போதெல்லாம் கலர் மாறுதோ அப்போ நீங்க தண்ணீரையும் உப்பையும் மாற்றி மாற்றி வைத்து வணங்க வேண்டும்.

மூன்றாவது இது சாப்பிட இடத்தில, குளிக்க இடத்தில் ,இதே மாற்றி மாற்றி வைத்து வணங்க, வீட்டில் ஏழ்மை நிலை கண்டிப்பாக மாறும் என்று சாஸ்திரம் சொல்கிறது

நான்காவது ஒரு சிவப்பு துணியில் கல்  உப்பு சேர்த்து கட்டி, அதை வீட்டில் நுழைவாயில் தொங்கவிடுவது, வீட்டிற்குள் தீயசக்திகளும் திருஷ்டிகளும் நுழையாது என்பதும் ஒரு கூடுதல் தகவல்.

முக்கியமாக ,தினமும் நான் குளிக்கும்போது, நாம் குளிக்கும் தண்ணீரில் ஒரு கைபிடி அளவு கல் உப்பை சேர்த்து குளித்தால், நம் உடலில் இருக்கும் கெட்ட சக்திகளும், தீய சக்திகளும் ,விலகி நம் மனதிற்கு ஒரு புத்துணர்வு பிறக்கும் என்கிறார்கள்.

முடிந்தால் இந்த உப்பு ;ஹிமாலயன் சால்ட்’ என்று சொல்லும் ‘இந்து உப்பு’ இருந்தால் மேலும் சிறப்பு .

முடிந்த அளவு செல்வ தேவதையான லட்சுமிக்கு ஒப்பான, உப்பை வீட்டில் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் .ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் உப்பு வாங்குவது மேலும் சிறப்பைத்தரும். ஏனென்றால் லட்சுமி கடலில் தோன்றியவர், உப்பும் கடலில் தோன்றுகிறது என்பதால் ,லட்சுமி கடாட்சம் வீட்டில் நிறையும் என்கிறது சாஸ்திரம்

அர்ச்சனை தேங்காய் உடைந்து இருந்தால் …?

நாம் தினசரி வீட்டிலேயே தீபமேற்றி மலர் மாலைகள் அணிவித்து, சாமிகளுக்கு தீபாராதனை காட்டி வணங்குகிறோம். அதுமட்டுமல்லாது வாரம் இருமுறை வீட்டின் அருகிலேயே இருக்கும் கோவிலுக்கு சென்று வணங்குகிறோம் .இது ஒருவித நிம்மதியையும் ,அமைதியையும், மனதுக்கு கொடுத்தாலும் எல்லோருக்கும் கடவுளிடம் தமக்குத் தேவையான வேண்டுதலை நிறைவேற்றவே கோவிலுக்கு சென்று வருகிறோம்.

அவ்வாறு கோவிலுக்கு செல்லும்போது, சில நேரங்களில் எலுமிச்சைப் பழம் எடுத்து செல்வோம். சில நேரங்களில் வெறும் மலர் மாலைகளை எடுத்து செல்வோம், சில நேரங்களில் அர்ச்சனை செய்வோம்., அவ்வாறு அர்ச்சனை செய்யும்போது, உடைக்கும் தேங்காயில் பூ இருந்தாலும் அல்லது அழுகிப்போய் இருந்தாலோ அல்லது சரியாக உடையவில்லை என்றாலும் மனதிற்கு மிக அழுத்தமாகவும் ஒருவித பயமும், மிகப்பெரிய நெருடலை ஏற்படுத்துகிறது.

ஆனால் சாஸ்திரங்கள் அதை வேறு விதமாக சொல்கிறது.. அவ்வாறு நாம் தேங்காய் உடைக்கும் பொழுது,  சரியாக முடியவில்லை என்றாலும் அல்லது அழுகிப்போய் இருந்தாலும் மனம் உடைய தேவையில்லை என்று சாஸ்திரம் சொல்கிறது.

என்னவென்றால் ,நாம் உடைக்கும் தேங்காய் அழுகியிருந்தால் அது நல்ல அறிகுறி என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.  இதோடு நமக்கு இருக்கும் தீய சக்தி, பீடை , திருஷ்டி, போன்றவை அகன்று ஓடி விடும் …எனவே இது நல்ல அறிகுறியே என்று சாஸ்திரம் சொல்கிறது.

மேலும் ,இது வீட்டில் சுப காரியங்கள் நடக்க நிறைய வாய்ப்பு இருப்பதாகவும், அர்த்தம் கொள்ள வேண்டும் என்றும், தேங்காய் பூ இருந்தால் நாம் எதிர்பாராத விதமாக நமக்கு பணவரவு மிக அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது .

இந்த 9 நாள் விரதம்…உங்களுக்கு கண்டிப்பா சொந்த வீட்டை கொடுக்கும்.

சொந்த வீடு கனவு அல்லது ஏக்கம் இல்லாதவர்கள், இந்த உலகத்தில் யாருமே இருக்க மாட்டாங்க. உலகத்தில் எவ்வளவோ பேரு சொந்த வீடு இருந்தும் அந்த வீட்டில் வாழ முடியாமல் வெளிநாட்டிலேயே அல்லது வாடகை வீட்டிலேயே வாழ்ந்து வருகிறார்கள்.

இன்னும் சிலர் இந்த வருஷம் கட்டிடலாம் இல்ல அடுத்த வருஷம் கட்டிடலாம்  அப்படின்னு கனவு மட்டுமே கண்டிருப்பார்கள் இன்னும் சில பேர் வீட்டுல இருக்கிற ஜுவல்ஸ் எல்லாம் வச்சு மேலும் கடனை வாங்கி வீடு கட்டி கடனாளியாகி  வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த மாதிரி சொந்த வீடு பிரச்சனைகள் அல்லது சொந்த வீடு அமைய எல்லோருக்கும் ஒரே ஒரு பரிகாரம் தான். அதுவும் இந்த விரதம் மட்டும்தான்.

எல்லோருக்கும் சொந்தமா ஒரு வீடு அமையணும்னு  என்றால் இந்த விரதத்தை வெறும் ஒன்பது வாரங்கள் மட்டுமே செய்யுங்கள் .உங்களோட சொந்த வீடு கனவு கண்டிப்பாக நினைவாகும்.

நவக்கிரகங்களில் முக்கியமான கிரகம் செவ்வாய் .இதைப் பற்றி நிறைய கேள்விப்பட்டு இருப்பீங்க ஒரு மனிதனுக்கு ரத்தம், தைரியம், பூமி சம்பந்தமான சொத்துக்கள் ,எதிர்ப்பு சக்தி, செவ்வாய் தோஷம்,சொந்த வீடு, இது எல்லாத்துக்கும் மூலகாரணமாக விளங்குபவர் செவ்வாய் பகவானாவார்.

ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை செவ்வாய் பகவானின் அம்சம் கொண்ட முருக பகவானை வணங்கி செவ்வாய்க்கிழமைகளில் விரதம் மேற்கொண்டு வழிபட வேண்டும்

இந்த மாதிரி செவ்வாய்க்கிழமை விரதம் இருக்கிறவங்க காலையில் எந்திரிச்சு அதுவும் அதிகாலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து வீட்டில் விளக்கேற்றி விட்டு அருகில் இருக்கிற முருகன் கோவிலுக்கு போய் வழிபட வேண்டும்

பின்பு வீட்டுக்கு வந்தவுடனே பாலு அல்லது ஜூஸ் இது மட்டும் சாப்பிட்டு விரதத்தைத் தொடர வேண்டும். முருகனுக்கு உகந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், அப்புறம் மந்திரங்கள் ஆகியவற்றை கேக்கணும் பாராயணம் செய்யவும்.

மீண்டும் சாயங்காலம் 6 மணிக்கு முருகன் கோவிலுக்கு சென்று மனசார முருகனை வேண்டி வழிபட்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம் இந்த மாதிரி ஒன்பது செவ்வாய்க்கிழமை விரதமிருந்து  முருக பகவானே உளமாற மனதார வேண்டுபவர்களுக்கு கண்டிப்பாக அந்த முருகன் அருளால் சொந்த வீடு அமையும்.

உங்க வாழ்வில் இருக்கும் பிரச்சனை, உடனே சரியாக…இதை செய்யுங்க

வாழ்க்கையில் ஏதாவது ஒரு அதிசயம் இல்லை , ஏதாவது ஒரு மாற்றம் நடக்கணும்னு ஆசைப்படுறீங்களா, அப்போ இந்த விரதத்தை கண்டிப்பா நீங்க செஞ்சு செஞ்சு பாருங்க ..

சோமவார விரதம் அப்படிங்கறதுதான் இந்த விரதத்தின் பெயர். சோமன் என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று  அர்த்தம், சந்திரபகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை வடமொழியிலிருந்து சோமவாரம் அப்படின்னு சொல்றாங்க .

பொதுவா திங்கட்கிழமை என்பது சிவனோட தினமாகும் அப்படி 16 திங்கட்கிழமை சிவனுக்கு விரதம் இருந்து அவரை வழிபட்டு  வந்தால் அதுக்கு பேரு சோமவாரவிரதம், அதாவது 16 சோமவார விரதம் அப்படின்னு சொல்றாங்க.

இந்த சோமவார விரதம் செஞ்சோம்னா நமக்கு என்னென்ன நன்மைகள் எல்லாம் கிடைக்கும் பார்க்கலாம். சோமவார விரதம் தொடர்ந்து 11 திங்கட்கிழமைகள்  சிவனுக்காக இருப்பது தான் ரொம்ப சிறப்பு .

ஒவ்வொரு திங்கட்கிழமையும் அதிகாலையில் எந்திரிச்சு வீட்டில் சிறிய அளவில் இருக்கிற சிவலிங்கத்துக்கு பூ சூட்டி உங்கள் நெற்றியில் திருநீறு பூசிக் கொள்ளுங்கள் .சர்க்கரை பொங்கல், பாயாசம் போன்ற உணவுகளை படைத்து சிவனுக்கு வந்து நெய்வேத்தியம் செய்து விட வேண்டும், சிவ மந்திரங்கள் படிக்க வேண்டும் .

இந்த விரதம் இருக்கிறவங்க மூன்று வேளையும் எதுவுமே உண்ணாமல் இருப்பது மிகவும் சிறப்பு என்றாலும், வேலை தொழில் போன்றவற்றில் இருப்பவர்கள் மூன்று வேலையும் சாப்பிடாமல் இருக்க முடியாது. அதனால அவங்க உப்பு சேர்க்காத  உணவை சாப்பிடலாம், இல்லேன்னா பால் பழங்கள் சாப்பிடலாம். அப்புறம் மாலையில் கோயிலுக்கு சென்று சிவனுக்கு பால் அபிஷேகம் இல்லைன்னா அர்ச்சனை செய்து வீட்டுக்கு திரும்பி, சிவனுக்குரிய பிரசாதங்களை மட்டும் சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.

ஒரு சிலருக்கு தொடர்ச்சியாக 16 திங்கட்கிழமைகளில் விரதம் செய்ய முடியாத நிலை இருக்கும் ,அப்படிப்பட்டவங்க  அடுத்த திங்கட்கிழமை சிவனை வழிபட்டு விரதத்தை தொடர வேண்டும்.

இந்த சோமவார விரதம் மேற்கொள்ளும் திருமண வயது ஆண்கள் மற்றும் பெண்கள் உங்களுக்கு கண்டிப்பா சீக்கிரம் திருமணம் நடக்கும். அப்புறம் பிரிந்து வாழும் தம்பதிகள் மீண்டும் ஒன்று சேர்வார்கள் .  உங்களோட தாய்க்கு ஏற்பட்ட தோஷங்கள் உடல் பாதிப்புகள், நோய்கள் எதுவானாலும் உடனே சரியாயிடும் . முக்கியமா, குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். சந்தோஷம் கிடைக்கும் .இது இரண்டுமே இருந்தால் பணப்புழக்கம் அதிகமாகும்.

2019 சிறப்பு புத்தாண்டு பலன்கள்

மேஷம் ராசி பலன் 2019

வீர உணர்வு அதிகம் கொண்ட மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு 2019 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பொருளாதார நிலையில் சில நெருக்கடிகள் வந்தாலும் பின்பு வரும் காலங்களில் நெருக்கடி எந்த ஒரு குறையும் இருக்காது. நீங்கள் எதிர்பார்க்கும் உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். ஒரு சிலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு குணமாவீர்கள். எந்த ஒரு காரியத்திலும் கடின முயற்சிகளை மேற்கொண்டாவது வெற்றிபெறுவீர்கள். அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் பதவி உயர்வுகளை பெரும் யோகம் உண்டு. கோவில் சம்பந்தமான புனித காரியங்களில் ஈடுபட்டு கௌரவத்தையும் ஆண்டவனின் அருளையும் பெறுவீர்கள்.

அடிக்கடி பயணங்களின் போது புதிய உணவுகளை உண்பதாலும் சிலருக்கு வயிறு சம்பந்தம்மான பிரச்சனைகள் ஏற்படக்கூடும். அடிக்கடி உடல் சோர்வு ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களும் சில உடல் பாதிப்பு உண்டாகும் பாதிக்கப்பட்டு மீள்வார்கள். வீட்டில் திருமண வயதை எட்டியவர்களுக்கு திருமணம் இந்தாண்டு நடக்க அதிக வாய்ப்புண்டு. புதிதாக தொடங்கப்படும் தொழில் வியாபார முயற்சிகளில் சிறிது கடிமான காலகட்டங்களை கடந்த பிறகே சிறந்த பலன்களை பெற முடியும். உங்களுக்கு கீழ் பணிபுரியும் தொழிலார்கள் மற்றும் வேலையாட்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும். பணியிலிருப்பவர்கள் அதிகப்படியான வேலைப்பளுவை சுமக்க நேரிடும்.

புதிதாக வேலை தேடும் நபர்களுக்கும் பல தடங்கல்களுக்கு பிறகு நல்ல வேலை வாய்ப்பு அமையும். வெளியூர் மற்றும் வெளிநாடுகளின் பணிகளுக்கான முயற்சிகள் வெற்றியடையும். அரசியல் மற்றும் பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு சற்று தர்ம சங்கடமான நிலை ஏற்படும். விவசாய தொழிலில் இருப்பவர்களுக்கு பயிர்கடன்கள் சற்று தாமதத்திற்கு பின்பு கிடைக்கும். கலைத்தொழிலில் இருப்பவர்களுக்கு இந்தாண்டு நல்ல வாய்ப்புகள் அமையும். பெண்கள் உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும். பெற்ற பிள்ளைகள் வழியில் ஒரு சில சங்கடங்கள் ஏற்படலாம். மாணவ – மாணவியர் கல்வியில் மிகுந்த அக்கறை செலுத்தினால் கல்வியில் சிறக்கலாம்.
ரிஷபம் ராசி பலன் 2019

தன்னை எப்போதும் அழகாக காட்டிக்கொள்வதில் அக்கறை கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு 2019 ஆம் ஆண்டு சிறந்த ஆண்டாக இருக்கும். குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். கணவன் குடும்பத்திலும் ஒற்றுமை அதிகரிக்கும். தடைபட்டு கொண்டிருந்த காரியங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேறும். புத்திர பேறில்லாமல் அவதிப்பட்டவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய வீடு, வீட்டு மனை மற்றும் அசையா சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டாகும். உடல் நலத்தில் அவ்வப்போது சிறு சிறு பாதிப்புகள் உண்டாகி மறையும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கும்.

உங்களுடைய உடல்நிலை பெரும்பாலும் நன்றாக இருக்கும். ஆனாலும் குடும்பத்தில் உள்ள சிலருக்கு மருத்துவ செலவுகள் செய்ய வேண்டி வரும். கடந்தகாலங்களில் வாங்கிய கடன்களை அடைத்து விடுவீர்கள்.தொழில், போட்டிகள் இருந்தாலும் உங்கள் கடின உழைப்பின் மூலம் வெற்றியை பெறுவீர்கள். உங்கள் தொழில், வியாபாரங்களை விரிவு படுத்தும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலங்கள் ஏற்படும். வெளியூர், வெளிநாட்டு வியாபாரங்களில் மிகுந்த லாபம் ஏற்படும். பணிபுரிபவர்கள் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். ஒரு சிலருக்கு புதிய இடங்களுக்கு இடமாறுதல்கள் ஏற்படும்.

அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு எதிலும் ஏற்ற, இறக்கமான பலன்களே ஏற்படும். விவசாயத்தில் ஈடுபடுபவர்களுக்கு அமோக விளைச்சல் உண்டாகும். கலைத்தொழிலில் இருப்பவர்களுக்கு வெளியூர், வெளிநாடு கலை பயணங்கள் செல்லும் சூழல் உண்டாகும். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். பெண்களுக்கு உடல் நலம் நன்றாக இருந்தாலும் ஆரோக்கியத்தில் தொடர்ந்து அக்கறை செலுத்த வேண்டும். கல்வி பயிலும் மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். விரும்பிய மேற்படிப்புகளை படிக்க கூடிய வாய்ப்புகள் அமையும்.
மிதுனம் ராசி பலன் 2019

சிறந்த ஞாபகசக்தி கொண்ட மிதுன ராசிகர்களுக்கு பிறக்கின்ற 2019 ஆம் ஆண்டு சாதக, பாதகங்கள் சம அளவு கலந்ததாகவே இருக்கும். அவ்வப்போது நோய்களால் பாதிக்கப்படும் சூழ்நிலை இருக்கும் . பண விவகாரங்களில் நம்பியவர்களே உங்களை மோசம் செய்யக்கூடும். உடன் பணிபுரிபவர்களிடம் அனுசரணையாக இருப்பது உங்களுக்கு நன்மையை தரும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை வருடத்தின் முதல் மூன்று மாதம் வரை ஒத்தி வைப்பது நல்லது. வெளிநாட்டு தொடர்புடைய தொழில் வியாபாரங்களில் அனுகூலங்கள் ஏற்படும். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும்.

மனைவி மற்றும் பிள்ளைகள் வழியே மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடும். இந்தாண்டு நீங்கள் அதிக பயணங்களை மேற்கொள்வீர்கள். உங்களுக்கும் உங்கள் உறவினர்களுக்குமிடையே சில பிரச்சனைகள் ஏற்படலாம். பிறருக்கு கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரங்களில் சக போட்டியாளர்கள் உங்களுக்கு எதிராக மறைமுகமான சதிகளை செய்வார்கள். இருந்தாலும் அவற்றை முறியடித்து நல்ல லாபங்களை ஈட்டுவீர்கள்.

பணிபுரிபவர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் எல்லாம் நலமாக முடியும். அரசியல் துறையில் இருப்பவர்கள் எதிரிக்கட்சியினருக்கு பணிந்து செல்ல கூடிய நிலை ஏற்படும். விவசாய தொழிலில் இருப்பவர்களுக்கு ஓரளவு லாபம் ஏற்படும். கலைத்துறையினர் கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். . திருமணம் வயது கொண்ட பெண்களுக்கு நல்ல வரன் அமையும். படிக்கும் மாணவர்கள் கல்வியில் முதலில் சில காலம் சற்று மந்த நிலையை அடைந்தாலும், பிறகு கல்வியில் சிறப்பார்கள்.
கடகம் ராசி பலன் 2019

பிறரின் மனநிலையை சரியாக கணிக்கும் கடக ராசிகாரர்களுக்கு 2019 ஆம் ஆண்டு நற்பலன்களை அதிகம் தரக்கூடியதாக இருக்கும். உங்களுக்கு நீண்ட காலமாக இருந்து வந்த ஆரோக்கிய குறைபாடுகள், நோய்கள் நீங்கும். திருமணம் நடக்காமல் ஏங்கியவர்களுக்கு மனதிற்கேற்ற வாழ்க்கை துணி அமைய பெறுவார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்கள் பணிகளில் நீங்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு, பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு ஆகியவை நீங்கள் விரும்பிய படியே கிடைக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். உங்கள் வீட்டில் நீண்ட நாட்களாக தாமதமான சுபநிகழ்ச்சிகள் சீக்கிரத்திலேயே நடக்கத்தொடங்கும். உறவினர்கள் மத்தியில் உங்களுக்கு செல்வாக்கும், மதிப்பும் ஏற்படும். புதிய வீடு, வாகனங்களை வாங்குவீர்கள். நீதிமன்றங்களில் உங்களுக்கு எதிராக போடப்பட்டிருந்த சொத்து சம்பந்தமான வழக்குகளில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு அமையும்.

தொழில், வியாபாரங்களில் உங்களின் மறைமுக எதிரிகள் ஒழிவார்கள். பணியிடங்களில் உங்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவும், விசுவாசமும் கிடைக்கும். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு பதவிகள் கிடைக்கும். விளைபொருட்களுக்கு கேட்ட விலை கிடைக்கும். கடன்கள் அனைத்தையும் அடைத்து முடிப்பீர்கள். பெண்களின் உடல்நிலை சிறப்பாக இருக்கும். புதிய ஆடை மற்றும் ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள், மனஸ்தாபங்கள் நீங்கும்.

சிம்மம் ராசி பலன் 2019

தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகம் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு 2019 ஆம் ஆண்டு சம அளவிலான பலன்கள் ஏற்படும். சுக வாழ்க்கையில் பாதிப்புகளை உண்டாகும். சுப காரிய சற்று தாமதத்திற்கு பிறகு வெற்றியடையும். ஆடம்பர செலவுகள் செய்வதை தவிர்க்க வேண்டும். மற்றவர்களுக்கு பெரிய அளவில் கடன்கள் கொடுக்க கூடாது. தொழில் வியாபாரங்களில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும்.
ஒரு சிலருக்கு ஜீரண கோளாறுகள் போன்றவை ஏற்படும். குடும்பத்தில் வயதானவர்களுக்கு ஆரோக்கிய குறைவு ஏற்பட்டு மருத்துவ செலவுகளை செய்ய வேண்டிய சூழல் உண்டாகும். குடும்ப பொருளாதார ஏற்ற இறக்கமாக தான் இருக்கும். குடும்ப பாரம்பரிய சொத்துகள் சிறிது இழுபறிக்கு பின்பு உங்களுக்கான பாகம் வந்து சேரும். அரசு டெண்டர், காண்ட்ராக்ட் தொழில்களில் இருப்பவர்களுக்கு சற்று தாமதங்களுக்கு பிறகு ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிய தொழில் வியாபாரங்களில் ஈடுபடுபவர்களுக்கும், அவற்றை விரிவு படுத்த நினைப்பவர்களுக்கும் சிறிது தடங்கல்களுக்கு பின்பு வெற்றி உண்டாகும்.

தொழிலாளர்கள் மற்றும் பணியாட்களின் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிநாடு சென்று பணிபுரியும் யோகமும் சிலருக்கு உண்டாகும். பணியாளர்கள், ஊழியர்களுக்கு மேலதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். எதிர்பாரா பணியிடமாற்றங்களும் சிலருக்கு கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கின்ற வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்வது நல்லது. பொது வாழ்வில் இருப்பவர்கள் மக்களின் ஆதரவை பெற கடுமையாக உழைக்க வேண்டும்.

கன்னி ராசி பலன் 2019

அனைவரிடமும் இதமாக பழகும் தன்மை கொண்ட கன்னி ராசியினருக்கு 2019 ஆம் ஆண்டில் சில காலம் வரை எல்லாவற்றிலும் மிக கடின முயற்சிகள் மேற்கொண்ட பிறகே நிலையிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். திருமணம், புது வீடு போன்ற சுப காரியங்கள் சம்பந்தமான முயற்சிகளில் இழுபறி நிலை இருக்கும். மறைமுக எதிர்ப்புகளை சமாளிக்க கூடிய திறன் உண்டாகும். பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். பொருளாதாரம் ஏற்ற இறக்கமான நிலையிலேயே இருக்கும்.

குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும் ஆனால் உறவினர்களிடையே சுமூக உறவு இருக்காது. தொழில், வியாபாரங்களில் உங்களுக்கு வர வேண்டிய வாய்ப்புகள் வேறு வியாபாரிகளுக்கு செல்ல கூடிய நிலை கூட்டாளிகளின் ஆலோசனையை கேட்பது சிறந்தது. அரசாங்க வழியில் ஏதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும்.

உங்களுக்கான பதவி உயர்வுகளை பிறர் தட்டி பறிக்க முயல்வார்கள் என்ற போதிலும், உங்களுக்கான பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் வந்து சேரும். அரசியல்வாதிகள் தங்களின் பதவிகளை கொள்ள கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். விவசாய தொழில் இருப்பவர்களுக்கு சுமாரான லாபம் தான் கிடைக்கும். அவசரப்பட்டு கடன்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். கலைத்தொழிலில் இருப்பவர்கள் தங்களின் சக தொழிலாளர்களுடன் அனுசரித்து செல்வதால் நன்மைகள் ஏற்பட்டும்.
துலாம் ராசி பலன் 2019

கள்ளமில்லா உள்ளம் கொண்ட துலாம் ராசியினருக்கு பிறக்கின்ற 2019 ஆண்டு சிறப்பாகா இருக்கும். இது நாள் வரை இருந்து வந்த அத்தனை பிரச்சனைகளும் தீரும். தடைபட்ட சுப காரியங்கள் அனைத்தும் நடக்கும். உடல் நிலை நன்றாக இருக்கும். பண வரவுகள் தடையில்லாமல் வந்து கொண்டே இருக்கும். பிரிந்து சென்ற உறவினர்களும் உங்களிடம் வலிய வந்து சொந்தம் கொண்டாடுவார்கள்.

பல புனித தலங்களுக்கு யாத்திரைகளை மேற்கொள்வீர்கள். தொழில், வியாபாரங்களில் நல்ல லாபம் ஏற்படும். விரும்பிய இடங்களுக்கு பணியிட மாற்றங்கள் கிடைக்கும். குழந்தைகள் இல்லாமல் ஏங்கியவர்களுக்கு குழந்தைகள் பிறக்கும். பொன், பொருள், ஆபரணங்கள், புதிய ஆடைகள், புதிய வீடு, புதிய வாகனம் என அனைத்து வகையான செல்வ சேர்க்கையும் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடையே இருந்த பிரச்சனைகள் நீங்கும். அவர்களின் அனைத்து விருப்பங்களையும் பூர்த்தி செய்வீர்கள். வாங்கிய கடன்களை எல்லாம் வட்டியுடன் கட்டி தீர்ப்பீர்கள்.

பணியிடங்களில் உங்களின் திறன்களை வெளிப்படுத்துவதற்கு சூழ்நிலை உருவாகும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும். உயரதிகாரிகளின் ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் மக்களின் பாராட்டுகளை பெறுவார்கள். விவசாயத்திற்காக வாங்கிய கடன்களை அடைத்து விடக்கூடிய அளவில் பொருளாதார நிலை உயரும். வெளிநாடுகளுக்கு சென்று பெயரும், யோகம் கலைஞர்களுக்கு உண்டாகும். பெண்களின் உடல் நிலை நன்றாக இருக்கும். அதோடு ஆபரணம், ஆடை போன்றவற்றின் சேர்க்கை ஏற்படும்.

விருச்சிகம் ராசி பலன் 2019

மனதில் பட்டதை நேரடியாக பேசும் விருச்சிக ராசிக்காரர்ளை பொறுத்தவரை 2019 ஆண்டில் அவ்வப்போது உடல்நல பாதிப்புகள் ஏற்படக்கூடும். பேச்சிலும், செயலிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. எல்லாவற்றிலும் விரும்பிய பயன்களை பெற முடியும். தொழில், வியாபாரங்களில் நல்ல வாய்ப்புகள் சற்று தாமதமாகவே கிடைக்கும். எவ்வளவு கடிமனமாக உழைத்தாலும் அதற்கேற்ற பலன்களை விரைவில் பெற முடியாது. ஆடம்பர மற்றும் தேவையற்ற செலவுகளை குறைத்து கொள்ள வேண்டும்.

வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் அடிக்கடி ஏற்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவு ஓரளவிற்கு இருக்கும். புதிய வீடு, நிலம் வாங்குவதில் இருக்கும் பிரச்சனைகள் தீரும். தொழில், வியாபாரங்களை பொறுத்தவரை ஆண்டின் தொடக்க மாதங்களில் ஏற்ற இறக்கமான பலன்களையே பெறுவீர்கள். சக போட்டியாளர்களின் சவால்களை எதிர்கொண்டு கடுமையாக உழைத்து வெற்றி காண்பீர்கள். உங்கள் வியாபார ரீதியன பயணங்கள் வெற்றியை தரும்.

உத்தியோகங்களில் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு தாமதமாகி பின்பு கிடைக்கும்.விவசாயிகளுக்கு தொடக்கத்தில் சிறிது பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டாலும் பின்வரும் காலங்களில் நல்ல லாபங்கள் பெறுவார்கள். மாணவர்கள் மனதை அலைபாயவிடாமல் கல்வியில் மட்டும் கவனம் செலுத்தினால் கல்வியில் சிறக்க முடியும்.
தனுசு ராசி பலன் 2019

பிறருக்கு உதவி புரியும் நல்ல மனதை கொண்ட தனுசு ராசிக்கார்களை பொறுத்தவரை 2019 ஆம் ஆண்டில் தொடக்கத்தில் சில தேவையற்ற அலைச்சல்களால் உடல் நலம் பாதிக்கப்படும். உங்களுக்கு இது நாள் வரை இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். தொலை தூர பயணங்களால் ஓரளவிற்கு அனுகூலங்கள் இருக்கும். பதவி உயர்வுகள் சிறிது தடை தாமதங்களுக்கு பிறகு கிடைக்கும்.

உடல் நலக் குறைவுகள் அடிக்கடி ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் உறுதுனையாக இருப்பார்கள். உறவினர்களின் வருகையால் உங்களுக்கு சற்று நிம்மதி ஏற்படும். காண்ட்ராக்ட் தொழிலில் இருப்பவர்களுக்கு தொடக்கத்தில் பொருள்வரவு குறைந்தாலும் பின் வரும் காலங்களில் நல்ல தனவரவு உண்டாகும். தொழில், வியாபாரங்களில் நல்ல லாபங்கள் கிடைக்கும்.

உத்தியோகிஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியும் திருப்தியான நிலையும் ஏற்படும். உயரதிகாரிகளின் நன்மதிப்பிற்கு ஆளாவீர்கள். அரசியல்வாதிகள் பொது மக்களின் ஆதரவை பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். விவசாயிகளுக்கு அரசு எதிர்பார்த்த பயிர் மானியங்கள் கிடைக்கும். கலைஞர்கள் கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பணிபுரியும் பெண்களுக்கு வேலை பளு சற்று அதிகரிக்கும். மாணவர்கள் தீய சிந்தனைகள் மற்றும் செயல்களை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது அவசியமாகு����்.

மகரம் ராசி பலன் 2019

பிறருடன் அன்புடன் பழகும் மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை 2019 ஆண்டில் பொருளாதார நெருக்கடி நிலை நீங்கும். இவ்வளவு நாட்கள் தடைபட்டு வந்த சுபகாரியங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக உங்களின் பூர்வீக சொத்துகளிலிருந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகும். பிரிந்து சென்ற உறவினர்களும் தேடிவந்து சொந்தம் கொண்டாடுவார்கள். வெளிநாடுகள் செல்வது சம்பந்தமான முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். தொழில் வியாபாரங்களில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியும், தன்னிறைவு ஏற்படும். உறவினர்கள் உங்களிடம் உதவி கேட்டு வந்து நிற்பார்கள். உங்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வீர்கள். வாங்கிய கடன்கள் அனைத்தையும் அடைத்துவிடக்கூடிய சூழல் உண்டாகும். வேலைவாய்ப்பு தேடி அலைந்தவர்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். ஊழியர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கும்.

பணியில் இருப்பவர்களுக்கு புதிய இடங்களுக்கு பணிமாறுதல்கள் கிடைப்பதால் உங்களுக்கு பல அனுகூலங்கள் ஏற்படும். உயரதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் சிறப்பாக அமையும். புதிய நிலங்கள் வாங்கி அதிலும் விவசாயம் செய்து லாபத்தை அடைவீர்கள். பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். குழந்தை இல்லாமல் ஏங்கிய பெண்களுக்கு குழந்தைகள் பிறக்கும். மாணவ மாணவியரின் கல்வி நிலை உயரும்.
கும்பம் ராசி பலன் 2019

திடமான மன உறுதி கொண்ட கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை 2019 ஆண்டின் தொடக்க மாதங்களில் சிறிது சங்கடங்கள் இருந்தாலும் பின்வரும் காலங்களில் அனைத்தும் நன்மையாக முடியும். தேவைகளை ஓரளவிற்கு பூர்த்தி செய்ய முடியும். பிறரை நம்பி பெரிய அளவிலான தொகைகளை கடனாக தருவதை தவிர்ப்பது நல்லது. உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். வீட்டில் சுப காரியங்களுகான செலவுகள் அதிகரிக்கும்.

உடல் நலத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறுப்பினர்களிடம் ஒற்றுமை மேலோங்கும் உணவு விடயங்களில் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது. கடுமையாக உழைத்து உங்களுக்கான செல்வத்தை ஈட்டுவீர்கள். போட்டியாளர்களாலும், அரசாங்கத்தாலும் பல நெருக்கடிகளை சந்தித்தாலும் அனைத்தையும் சமாளித்து வெற்றி வாகை சூடுவீர்கள்.

தொலைதூர பயணங்களால் லாபங்கள் உண்டாகும். உத்தியோகிஸ்தர்கள் கடுமையாக உழைத்தாலும் அதற்கான பலனை உடனே பெற முடியாது. அரசியலில் இருப்பவர்களுக்கு 2019 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலம் விவசாயிகளுக்கு விளைபொருட்களுக்கான லாபம் ஓரளவுக்கே கிடைக்கும். கலைஞர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டாள் பொருளாதார சிக்கலின்றி வாழலாம். பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உறவினர்களிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது.
மீனம் ராசி பலன் 2019

அனைத்திலும் சிறந்த ஞானம் கொண்ட மீன ராசிக்காரர்களை பொறுத்தவரை 2019 ஆம் ஆண்டு சிறப்பாகவே இருக்கும். இதுவரை பட்ட கஷ்டங்கள் அனைத்தும் தீரும். உங்களை விட்டு சென்றவர்களும் உங்களிடம் வலிய வந்து நட்பு பாராட்டும் நிலையை உண்டாகும். உத்தியோகிஸ்தர்களுக்கு விரும்பிய பணியிட மாறுதல்கள் கிடைக்கும். ஒரு சிலருக்கு பதவி உயர்வுகளும் உண்டாகும். திருமணம் போன்ற சுப காரியங்கள் கைகூடும்.

பிள்ளையில்லாதவர்களுக்கு பிள்ளைகள் பிறக்கும். நீங்கள் எதிர்பாரா உதவிகள் உங்களுக்கு தக்க சமயத்தில் கிடைக்கும். நீண்ட நாட்களாக நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் நோய்கள் நீங்கும். அசையா சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டாகும். வாங்கிய கடன்கள் அனைத்தையும் கட்டி முடிப்பீர்கள். குடும்பத்தினர் விரும்பிய பொருட்கள் வாங்கி தருவீர்கள். தொழில், வியாபாரங்களில் கடும் போட்டி நிலவினாலும் உங்களுக்குண்டான லாபத்தில் எந்த ஒரு பங்கமும் ஏற்படாது.

பணியிடங்களில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்தி பதவி உயர்வையும் ஊதிய உயர்வையும் பெறுவீர்கள். வேலை தேடி அலைந்தவர்களுக்கு அவர்கள் விரும்பிய பணியே கிடைக்கும். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு சிறந்த செயல்பாடுகளால் கட்சிகளில் உயர்ந்த பதவிகள் கிடைக்கும். விவசாயிகளுக்கு விளைச்சல் அமோகமாக இருக்கும். அதோடு அரசு வழியில் கடன் உதவிகளும் கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும். மாணவ மாணவியர் கல்வியில் ஆர்வமுடன் படித்து சிறந்த மதிப்பெண்களை பெறுவார்கள்.