80 ஆயிரத்தில் ஆரம்பித்த தொழில், பல கோடிகளை வென்ற அதிசயம்.

0

‘எங்க கம்பெனி தயாரிப்பு பொருட்களை பெரிய கடைகளில் அழகாக அடுக்கியும், சிறிய கடைகளில் அழகாக தொங்க விடுவதையும் பார்க்கும் போது இதயத்திலே கிடைக்கும் மனநிறைவுக்கு, ஈடு இணையே இல்ல’ இது ஆச்சி நிறுவனத்தின் தலைவர் திரு.ஐசக் கருத்து.


அதே போல் தன்னுடைய தொழிற்சாலைக்கு செல்லும் போது, அங்கு வேலை செய்யும் தொழிலாளிகளின் முகத்தில் இருக்கும் சந்தோசத்தை பார்க்கும் போது கிடைக்கும் மனநிறைவும் யாருக்கும் கிடைக்காத பொக்கிஷம் என்கிறார் திரு ஐசக்.

கோட்ரேஜ் சோப்பு கம்பெனி ல ஏரியா மானேஜராக தன் வாழ்க்கையை துவங்கிய திரு ஐசக், சுமார் 10 வருடம் கழித்து, தனியாக தொழில் துவங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு துவங்கிய தொழில், சொட்டு நீலம் தொழில். அந்த தொழிலின் வருமானம், தன் குடும்பத்திற்கு போதுமானதாக இருந்தாலும், உள் மனசில் உணவு தொழிலில் மிக பெரிய ‘ஆட்சி ‘ செய்ய வேண்டும் என்பதே…

1990 களில் மிகப்பெரிய நிறுவனங்கள் இருந்தாலும் மசாலா பொருட்களுக்கென்று, சரியான நிறுவனம் இல்லை என்பதே எனக்கு மிக பெரிய ஊன்றுகோலாக இருந்தது என்கிறார் ஐசக்.
மேலும் அன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான பெண்கள், சமைக்க சென்றால் சுமார் 4 மணி நேரம், சமையலுக்கே வீணடித்து விடுகிறார்கள், என் அம்மா உட்பட..

இந்த பிரச்சனையை சரி செய்து பெண்களின் மனதில் ‘ஆட்சி’ செய்ய, என்பது ஆயிரம் ரூபாய் முதலீட்டில், ஒரு பத்துக்கு பத்து ரூமில் ஆரம்பிக்க பட்டதுதான் ‘ஆச்சி’. வெற்றி களிப்பில் சிரிக்கிறார் திரு ஐசக்.

எந்த மசாலா தயார் செய்தாலும் எங்க வீடுதான் முதல் ‘டெஸ்ட்டிங் கிரௌண்ட்’ எனும் ஐசக், குழம்பு சில்லி பவுடர் தான், நாங்கள் தயாரித்த முதல் மசாலா என்கிறார்.

இன்று பல கோடி வருமானம் ஈட்டும் தொழிலதிபராக இருக்கும் திரு ஐசக் , தன் தொழிற்சாலைக்கு, சுமார் 1500 கிராமத்து ,படிக்காத பெண்களை பணியமர்த்தி உயர்வு கண்டுள்ளார். சுற்றி உள்ள கிராமத்திலிருந்து இவர்களை அழைத்து வர பிரத்தியோகமாக 15 பஸ் உள்ளது . மேலும் சுமார் 150 உடல் ஊனமுற்றவர்களை பணியமர்த்தி அவர்களுக்கு வாழ்க்கை தரும் திரு ஐசக், ‘இவர்களுக்கு வேலை தருவதால் இவர்களின் தன்னம்பிக்கை வளரும்’ என்கிறார்.

ஒருவர் ஏதாவது தொழில் செய்து சுமார் 2 லட்சம் நஷ்டமடைந்தால்..நஷ்டம் என்று புலம்புகிறார்கள்.. அது தவறு, அது நஷ்டம் இல்லை , நீங்கள் படித்த படிப்பிற்கு , ஏற்ற தொழிலை, கற்றுக்கொள்ள செய்த செலவு , என்றே கொள்ள வேண்டும்…என்று இளைஞர்களுக்கு தெம்பூட்டுகிறார் ஐசக்.

எந்த தொழில் செய்தாலும் ‘ஜெயிக்கணும், ஜெயிக்கணும்,’ அப்படிங்கற வெறி இருந்துகிட்டே இருக்கனும். அவமானம், கஷ்டம், வேதனை, இதெல்லாம் சொல்ற பாடம் ‘ஜெயிக்கணும், ஜெயிக்கணும்’ங்கறது மட்டும்தான்.. நரம்பு புடைக்க பேசுகிறார்.

எங்களோட வெற்றியே , எங்க மசாலாவுக்கு தேவையான மூலப்பொருட்களை, நேரடியாகவே விவசாயிகிட்ட வாங்குவது தான். தனியா-ராஜஸ்தான், மிளகாய்-கம்பம், ஏலக்காய்-கேரளா, மிளகு-போடி, மஞ்சள்-ஈரோடு, இப்படி எல்லா பொருட்களையும் நேரடியாக வாங்குகிறோம், இதனால் விவசாயிகளும், மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றனர். என்றும் பெருமிதம் கொள்கிறார் ஐசக்.

இப்ப உள்ள குழந்தைகள் மிளகாயை ,பிளாஸ்டிக் பொருள் என்கின்றனர் … அவர்களுக்கு எந்த காய்கறி, எப்படி விளைகின்றது, என்பதே தெரியவில்லை என்று வேதனைப்படும் ஐசக், நம்ம குழந்தைகளுக்கு வீட்டிலேயே, சிறு சிறு தொட்டிகள் வைத்து காய்கறிகள் வளர்த்து ,அவர்களுக்கு கற்று கொடுக்கவேண்டும் என்று மெனக்கெடுகிறார்., திரு ஐசக்.

வாழ்த்துக்கள் ஆச்சி குழுமம் & ஐசக்

Leave A Reply