கஜா சுவடு மறைவதற்குள் வருகிறான் ‘பேய்ட்டி ‘

gaja_0_1_0கஜா புயலின் தாக்கத்தில் இருந்தே மக்கள் முழுதாக மீளாத நிலையில் அடுத்து ஒரு புயல் உருவாக வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

கடந்த மாதம் கஜா புயல் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை தாக்கி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பெய்யக்கூடும் என செய்திகள் தெரிவிக்கப்பட்டாலும் கடந்த 3 நாட்களாக வறண்ட வானிலையே காணப்படுகிறது.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் 

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தீவிரம் அடைந்து காற்றழுத்தமாகி, புயலாக மாறும் வாய்ப்பு உள்ளதாம். ஆம், வருகிற 10 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் பின்னர் புயலாகவும் மாறி தமிழகம்ஆந்திரா கடற்கரையை நோக்கி புயல் நகரும் வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த புயலுக்கு ‘பேய்ட்டி’ என பெயர் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *