15000 முதலீட்டில் ஆரம்பித்து, 1500 கோடிகளில் சாம்ராஜ்யம் நடத்தும் தமிழன்

0
படங்கள் – https://www.facebook.com/CavinKareIndia/

எங்க அப்பா கணக்கு வாத்தியார், ஆனா நான் கணக்குல ரெம்ப சுமார்…10th halfly exam-ல கணக்குல 8 மார்க் வாங்குனேன். ‘வாத்தியார் பையன் மக்கா ‘ னு சொல்லி, தலையில கொட்டியே என்ன படிக்கச் வச்சு 10th exam-ல பாஸ் பண்ண வச்சாரு எங்க அப்பா – இது கவின் கேர் நிறுவனதின் தலைவர் திரு. சி.கே.ரங்கநாதன் அவர்களின் பேச்சு. இன்னைக்கு கணக்கு தெரியாமல் யாரும் பிசினஸ் செய்ய முடியாது.


15000 ரூபாய் முதலீட்டில், 250 சதுர அடியில், வீடும் அலுவலகமும் சேர்ந்து, ஆரம்பிக்க பட்டதுதான், இன்று மிக பெரிய சாம்ப்ராஜ்யமாக வளர்ந்து இருக்கும் ‘கவின் கேர்’ நிறுவனம்.

படங்கள் – https://www.facebook.com/CavinKareIndia/

அப்பா வாத்தியார், ஆனா எப்பவும் சயின்ஸ் சம்பந்தமா நிறைய புக்ஸ் படிப்பார். புது பது பார்முலா கண்டு பிடிப்பார். அதுல அவர் கண்டு பிடிச்சதுல 51 product கிடைச்சது. யார் innovative வ பண்றங்களோ அவங்கதான் ஜெயிப்பாங்க னு அப்பா சொல்லிகிட்டே இருப்பார்.

பிசினஸ் பண்ணி ஜெயிக்கணும்னா பணம் தேவை இல்லை. புது புது ஐடியாஸ் வேணும்..இது எங்களுக்கு, அப்பா அடிக்கடி சொல்லும் வார்த்தை. எங்க அப்பா ஒரு லைப்ரரி, அவர்கிட்ட இருந்து கத்துகிட்ட இருக்கலாம். சரளமாக இங்கிலிஷ் பேசுவார். எனக்கு அப்டி வராது. ஆனா அவர்தான் எனக்கு பெரிய inspiration.

படங்கள் – https://www.facebook.com/CavinKareIndia/

நானும் மெல்ல இங்கிலிஷ் பேச கத்துக்கிட்டேன். ஏன்னா இங்கிலிஷ் பேச தெரியாம பிசினெஸ் ல பெரிய லெவல் ல வர முடியாது. அழுத்தமாக சொல்கிறார் கவின் கேர் நிறுவனதின் தலைவர் திரு சி.கே.ரங்கநாதன்.

மேலும் பிசினஸ் ல ஜெயிக்க புது புது ஐடியாவோட, புது புது product ஐ அறிமுகம் செய்யணும், அத மார்க்கெட் பண்ணி பெரிய லெவல் ல விளம்பரம் செய்யணும் – இது வெற்றிக்கான வியாபார யுத்தி.

படங்கள் – https://www.facebook.com/CavinKareIndia/

நாங்க ஆரம்பத்தில அலுவலகம் மற்றும் வீட்டிற்க்கு 250 சதுர அடியும் , பாக்ட்ரிக்கு 300 சதுர அடியும், தேர்ந்தெடுத்தோம், ஆனா R&D (Research and Development) கு மட்டும் 500 சதுர அடில தேர்ந்தெடுத்தோம்… அது தான் எங்களோட வெற்றி.

படங்கள் – https://www.facebook.com/CavinKareIndia/

எங்களை மாதிரியான கம்பெனிகள் R&D கு பண்ற செலவை விட ,கவின் கேர் பண்ற செலவு அதிகம். வளர்ச்சியும் அதிகம். 70 சயிண்டிஸ்ட் வச்சு ஆரம்பிச்ச எங்க தொழில், 40000 மாக வளர்த்திருக்கு.

படங்கள் – https://www.facebook.com/CavinKareIndia/

அப்பா எங்களுக்கு சொல்லி கொடுத்த 2 முக்கியமான விஷயம், ஒழுக்கம் அப்புறம் நேர்மை. நேர்மையா tax கட்டணும் னு சொல்லுவார். அது எந்தளவுக்கு எங்க வளர்ச்சிக்கு உதவுச்சுனு, எங்களுக்குதான் தெரியும்.

படங்கள் – https://www.facebook.com/CavinKareIndia/

நாம எவ்வளவு பெரிய வெற்றி யை அடைச்சாலும், நம்மளோட வசதி, வாழ்க்கையை மாத்திக்கிறலாம்..ஆனா கடந்து வந்தபாதையை மட்டும் மறக்க கூடாது. எங்க அப்பா அவரோட ஆராச்சிகளுக்காக விவசாய நிலங்களை எல்லாம் விற்றார். சொந்த பந்தங்கள் எல்லாம் கேலி செய்தார்கள், அதையும் மீறி ஜெயிச்சோம்னா, எங்களோட கடின உழைப்பும், நம்பிக்கையும் தான்.

படங்கள் – https://www.facebook.com/CavinKareIndia/
படங்கள் – https://www.facebook.com/CavinKareIndia/

அப்பா ஒரு ‘செயின் ஸ்மோக்கர்’ ஹார்ட் அட்டாக் ல தான் இருந்தாரு. என்ன காரணம் னு கண்டுபிடிக்கும் போது தான் தெரிந்தது, சிகரெட் னு. அதனால எனக்கும் சிகரெட் பழக்கம் இல்ல . வாழ்க்கையில ஜெயிக்கும் னா ஹெல்த்தும் முக்கியம் பாஸ்..உறுதியாக சொல்கிறார் கவின் கேர் நிறுவனதின் தலைவர் திரு சி.கே.ரங்கநாதன்.

Leave A Reply