1.2.19 இன்றய ராசிபலன்

0

இந்த 4 ராசிகளுக்கு மட்டும் நினைத்தது நிறைவேறும்

மேஷம்

இன்னைக்கு சொந்த பந்தம் நண்பர்கள் இப்படி யார்கிட்டயும் தேவையில்லாத விவாதங்களை தவிர்ப்பது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் வேண்டும். யாருடைய சண்டை போட வேண்டாம் .ஜாக்கிரதை வேண்டும்.

ரிஷபம்

இன்னைக்கு வீட்ல, கணவன் மனைவி ரொம்ப ஒற்றுமையா சந்தோஷமாக இருப்பீர்கள். அரசியல் சம்பந்தப்பட்ட பொது இடங்களில் பேச உங்களுக்கு வரவேற்பும் பாராட்டும் அதிகரிக்கும். அதேமாதிரி உங்களோட உயர் அதிகாரிகளோட பாராட்டும் பதவி உயர்வும் கிடைக்க சான்ஸ் இருக்கு. வியாபாரத்தில் பெரிய லாபம் கிடைக்கும்.

மிதுனம்

உங்களுடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள பாருங்க .சக ஊழியர்களிடம் பொறுமை காட்டவும். வீட்டில இருக்கிற கால்நடைகளால் செலவுகள் வரும். பயணம் செய்யும் போதும் ஜாக்கிரதையா இருக்கணும்.

கடகம்

வீட்டில் குழந்தைகளுடன் நிதானமாக நடந்துக்கொள்ள வேண்டும். அக்கம்பக்கத்துல யாரிடமும் வீண் வாக்குவாதம் வேண்டாம். உடல் ஆரோக்கியத்தோடு மனசையும் பத்திரமா பார்த்துக்குங்க. அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு இன்னைக்கு வேலை அதிகமாகும் .பரம்பரை சொத்தும் மூலம் செலவுகள் வர சான்ஸ் இருக்கு.

சிம்மம்

உங்களுடைய வாதத்திறமையால் உங்களுக்கு நன்மை பயக்கும். பேச்சுத் திறமை எல்லோரையும் வசீகரிக்கும். அதனால வீட்டில உள்ளவங்களோட ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் .அரசு தரப்பிலிருந்து நீங்க எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் நடக்கும். விருந்து விழாக்களில் கலந்து கொள்ள வாய்ப்பு இருக்கு.

கன்னி

சின்ன சின்ன பயணங்கள் மனசு சந்தோசமா இருக்கும். பெரிய பதவியில் இருப்பவர்களால்  உங்களுக்கு பெரிய பாராட்டு கிடைக்கும். தொழிலை விரிவாக்கம் செய்வதில் ஏதாவது முயற்சி இருந்தால் கண்டிப்பாக செய்யுங்கள், உடனே நடக்கும். நீங்க செய்ற எல்லா முயற்சிக்கும் வெற்றி கிடைக்க இன்னைக்கு கிரகங்கள் சாதகமா இருக்கு. மாணவர்கள் ஆசிரியரிடம்  நற்பெயர் வாங்குவீர்கள்.

துலாம்

இன்னைக்கு கிரகங்கள் இருக்கிற நிலையில ,உங்களுக்கு வீடு வண்டி வாகனம் வாங்குவதற்கு வாய்ப்புகள் இருக்கு. அதற்கான முயற்சிகள் செய்தால் கண்டிப்பாக நடக்கும் .எதிர்பார்த்த எதிர்பாராத லாபங்கள் வரும். பெரிய மனிதர்களோட சந்திப்பு உங்களுக்கு கிடைக்கும் .நீங்க எந்த முயற்சி செய்தாலும் அது வெற்றியே வரும்.

விருச்சிகம்

இன்னைக்கு உங்களோட கூட பிறந்தவங்க அனைவரும், உங்களுக்கு ரொம்ப ஆதரவா இருப்பாங்க . நீங்க எந்த தொழில் செய்தாலும், அதில் மிகப் பெரிய லாபம் கிடைக்கும் .ஆனால் எங்கு சென்றாலும் கூடுதல் கவனம் வேண்டும், எந்த வேலை செய்தாலும் யாரிடம் கொடுக்காமல் நீங்கள் செய்ய வேண்டும். இல்லையென்றால் வேலை இரட்டிப்பாகும்.

தனுசு

நல்லவர்களோடு ஒத்துழைப்பால் உங்களோட தொழில் சிறப்பாக நடக்கும். வீட்டில் நீங்கள் என்ன செய்தாலும் ஆதரவு கூடும். தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் பணி சிறப்பாக அமைந்து வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். அதற்கான உதவிகளும் கிடைக்கும்.

மகரம்

உங்கள் உடன்பிறந்த சகோதரிகள் மூலம் நற்செய்திகள் வீடு வந்து சேரும். உங்களோட குழந்தைகள் செயல்பாட்டால் உங்களுடைய செல்வாக்கு உயரும். பயணங்களும் லாபம் தரும். குடும்பத்துல இருக்கிற அத்தனை பேரோட ஆதரவால் நீங்க நினைத்தது நிறைவேறும். நகைகள் வாங்கும் வாய்ப்புகளும் அதிகம்.

கும்பம்

சொந்தமாக தொழில் செய்து வரும் உங்களோட வளர்ச்சி இன்னைக்கு அதிகமாகும் .ஆனாலும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு .நல்ல யோகா செய்ய வேண்டும். மெடிடேஷன் செய்ய வேண்டும். புதிய வாகனங்கள் வாங்குவதற்கான வாய்ப்புகளும் என்று கொண்டு.

மீனம்

நீங்கள் செய்கின்ற தொழிலில் நல்ல ஆதரவு கிடைக்கும். புதிய யுக்திகளால் தொழிலை அபிவிருத்தி செய்து அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். இருந்த மனவருத்தங்கள் குறையும் .எங்கு சென்றாலும் அங்கு தலைமைப் பொறுப்புகள் கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.

Leave A Reply