ஸ்மார்ட் போனால் ஆண்மைக்கு ஆபத்து – அதிர்ச்சி ரிப்போர்ட்

0

மொபைல் போன் இல்லாதவர்களே இல்லை என்ற நிலை தற்போது இருந்து வரும் உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  மொபைல் போன் இல்லாதவன் முழு மனிதனே இல்லை என்ற அளவுக்கு சகமனிதர்கள் நம்மை தவறாக பார்க்கும் உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஆனால் இந்த மொபைல் போன் அணைத்து வசதிகளையும் வாய்ப்புகளையும் நமக்கு வழங்கி கொண்டிருந்தாலும், அதைவிட மிக அபாயமான ஆபத்துகளையும் ஏற்படுத்தும் என்பதை நாம் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும்

அவ்வப்போது சில வாட்சப் மூலமாகவும், சமூக வலைத்தளங்களிலும், மொபைல் போன் வெடித்தல் அல்லது போன் பேசியபடியே சென்று ஆபத்துக்களில் மாட்டி கொள்ளுதல் என பல வகை வீடியோக்களை பார்த்திருப்போம்.

தற்போது செல்பி எடுக்கும் போது, மலை உச்சியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த விடீயோக்கள் அடிக்கடி நம் கண் முன்னே வந்து கொண்டிருக்கிறது.

அதேமாதிரி 24 மணி நேரத்தில் 20 மணி நேரம், நாம் ஸ்மார்ட்போனில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதேமாதிரி அதில் அதில் இருக்கும் ஆபத்தையும் நாம் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும்.

செல்போன் பயன்படுத்தும் அனைவருக்கும் ஆபத்து இல்லை, ஆனால் நிச்சயமாக பல நோய்கள் தாக்கும் என்பது உறுதி. செல்போனிலிருந்து வெளியேறும் மின்காந்த அலைகள், தோல் புற்றுநோய்கள், வலிப்பு நோய்கள், ரத்த புற்றுநோய் மற்றும் மூளை சம்பந்தமான அனைத்து நோய்களும் ஏற்படும் என்று மருத்துவ நிபுணர்கள் அனைவரும் கடுமையாக எச்சரித்து உள்ளனர்.

இதில் முக்கியமாக பார்க்க வேண்டியது என்னவென்றால், அதிகமாக மொபைல் போன் பயன்படுத்தும் அனைத்து இளைஞர்களுக்கும், ஆண்மை குறைவு ஏற்படும் என்று ஆய்வுகள் எச்சரிக்கின்றனர்

செல்போன் பயன்படுத்தும் போது ஏற்படும் அதிர்வலைகளால் நம்மளோட மூளை நினைவாற்றலை இழக்கும் என்று தெரிவிக்கிறது அந்த ஆய்வு.

இதனால் நமக்கு ஞாபக மறதி நோய் ஏற்படும்.  மேலும் இந்த அதிர்வலைகள் அதாவது கதிர்வீச்சுக்கள் மூளைக்குச் செல்லும் ரத்தத்தில் நச்சுத் தன்மையை உண்டாக்கி ,நோமோஃபோபியா எனும் நோயை உண்டாக்கி விடும்

அதாவது மனிதனுக்கு மொபைல் போன் இல்லாமல் எதுவுமே செய்ய முடியாது என்ற மனநிலையை ஏற்படுத்தும் இந்த நோய்.

இளைஞர்களே விழித்துக்கொள்ளுங்கள், அறிவுப்பூர்வமான தலைமுறையை உருவாக்குங்கள்

Leave A Reply