ஸ்டாலினை கடுமையாக சாடிய தமிழிசை

2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக பல கட்சிகள் கூட்டணி வைக்க தொடங்கியுள்ள நிலையில் பல கட்சிகள் பிரச்சாரமும் செய்ய துவங்கிவிட்டன

ஒவ்வொரு கட்சியும் தனது எதிர் கட்சியை பலமாக குறை சொல்வதும் குற்றம் சுமத்தப்படும் ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபடுத்துவதும் வழக்கம் என்றாலும், தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களே, பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர பாண்டியன் கடுமையாக சாடியுள்ளார்.

அதில், கிராமங்கள்தான் கோவில்கள் என மகாத்மா காந்தி கூறியிருக்கிறார்; எனவே இந்த கோவிலை தேடி ஒரு பக்தனாக வந்திருக்கிறேன் என்று திருமழிசையில் நடந்த கிராமசபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் சொல்லியிருப்பதை கேலி செய்யும் விதமாக தமிழிசை சௌந்தரபாண்டியன் தன்னுடைய டிவிட்டர் அக்கவுண்டில் ஒரு பதிவு இட்டுள்ளார்.

அதில் உண்டியல்கள் சிலைகள் பத்திரம். போலி பக்தர்கள் நடமாட்டம் ஓர் எச்சரிக்கை மக்கள் நலன் கருதி என்ற ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்

இந்த பதிவு  சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில் தமிழிசை சவுந்தர பாண்டியனுக்கு டிவிட்டரில் கடுமையான பதில்களை விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது .