வைரமுத்துவிற்கு கட்டம் சரியில்ல போல… மீண்டும் சிக்கலில்..வைரமுத்து..

0

கடந்த இரண்டு வருடங்களாக இரண்டு பெரும் விவகாரங்களில் சிக்கி தவித்த கவிஞர் வைரமுத்து அவர்கள், மீண்டும் சிக்கலில் சிக்கி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது

கடந்தாண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் நிகழ்ச்சியில் ஆண்டாள் குறித்து தவறாக பேசியதாக வைரமுத்து மீது கடுமையான விமர்சனமும் அவருக்கு எதிராக பல போராட்டங்களும் நடந்து முடிந்த நிலையில் பின்னணி பாடகி சின்மயி அவர்கள் தன்னிடம் தவறாக நடந்ததாக குற்றம் சாட்டியது வைரமுத்து மீது மிகப்பெரிய வெறுப்பை உண்டாக்கியது.

அதற்கு அவரும் பல பதிவுகளை ஊடகம் மூலம் கொடுத்தாலும் ‘என் மனம் ஏனோ ஏற்க மறுக்கிறது’ என்ற நிலையில்தான் தமிழக மக்கள் இருந்தார்கள்.

இந்நிலையில் சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற உள்ள ‘தமிழாற்றுப்படை’ என்ற தலைப்பில் திரு வைரமுத்து அவர்கள் பேசவிருக்கிறார்.. ஒளவையார் குறித்து வைரமுத்து பேசுவார் என்று தெரிகிறது

நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்பாகவே பிரச்சினைகள் ஆரம்பித்து விட்டதாக தெரிகிறது. அதில் இந்த நிகழ்ச்சிக்கு சென்னையில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு போஸ்டரில் அவ்வையாரின் படமும் இடம்பெற்றுள்ளது. அதில் அவ்வையாரின் நெற்றியில் திருநீறு இல்லை என்பதே இப்பொழுது சர்ச்சைக்கு காரணமாகிவிட்டது

அதாவது தமிழ் இலக்கியங்களில் அவ்வையார் என்பவர் முருகபக்தர் என்பதும் எப்பொழுதும் அவருடைய புகைப்படங்களை உபயோகிக்கும் போது அவர் நெற்றியில் திருநீறு இதுவரை இருந்ததாகவும், ஆனால் இந்த போஸ்டர்களில் திருநீறு இல்லை என்ற வாதம் மிகப்பெரிய அளவில் வலுக்கிறது.

இதுவே சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது

இந்நிலையில் மேலும் ஏற்கனவே வைரமுத்து அவர்களை வம்பிழுத்த ராஜா அவர்கள், தற்போது மீண்டும் ட்விட்டரில் ஒரு பதிவை இட்டு அனைவரின் கவனத்தை  திருப்பியுள்ளார்..

அதில் அவ்வையார் அவர்கள் பற்றி தவறான கருத்துக்களை பதிய முயற்சி நடக்காது என நம்புவோம். ஆண்டாள் நாச்சியாரை அசிங்கப்படுத்தியது இந்து சமுதாயம் இன்னும் மறந்துவிடவில்லை என்று பதிவிட்டுள்ளார்.

Leave A Reply