வைகோ தனது ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார்

0

பிரதமர் மோடி அவர்கள் மருத்துவமனையை துவக்கி வைப்பதற்காக மதுரை வரவுள்ளார்.  அப்போது அவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட திட்டமிட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் திரு வைகோ தெரிவித்துள்ளார் .

தஞ்சாவூரில் திருமண விழாவில் கலந்து மணமக்களை வாழ்த்தி பேசிய திரு வைகோ அவர்கள் , ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளித்து விவசாய தொழிலை அழித்தல்,  நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி அளித்தது தேனி மாவட்டத்தின் இயற்கை வளங்களை அழித்தல், தமிழுக்குப் பதிலாக சமஸ்கிருதத்தை நுழைதல், இவ்வாறு பலதரப்பட்ட செயல்கள்மூலம் தமிழகத்துக்கும் தமிழர்களுக்கும்,  எதிராக மோடி அரசு செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டின வைகோ அவர்கள் , மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனையின் துவக்க விழாவிற்கு வரும் மோடிக்கு எதிராக கண்டிப்பாக கருப்புக் கொடி காட்டுவேன் என்று கோபமாக பேசி உள்ளார்

Leave A Reply