வைகோவின் வாதம்…ஆடிப்போன நீதிபதிகள்..

0

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வைகோ வாதிட்ட 45 நிமிடம் தான் இந்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் முக்கிய நிகழ்வாகும்

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளான பாலி நாரிமன் வினித் சரண் ஆகியோர் அடங்கிய அமர்வு ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவு ரத்து செய்யப்பட்டதாகவும் இறுதி தீர்ப்பு வழங்கியுள்ளது.

எதிர்பார்ப்புகளுக்கிடையே ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பான இறுதி தீர்ப்பை அளித்துள்ளது. இந்த தீர்ப்புக்கு பின் பல முக்கிய கட்டங்களைக் கடந்து வந்துள்ளது இந்த ஆலை விவகாரம்

Sunplus Corp.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி கடந்த மே மாதம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் கலவரம் செய்ததாக அப்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர் அதில் 13 பேர் கொல்லப்பட்டனர்

அதனை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு உடனடியாக அரசாணை வெளியிட்டது. உடனே ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தார்.

இந்த தடைக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்றை அமைத்தது.

இதனிடையே பசுமை தீர்ப்பாயத்தின் விசாரணைக்கு தடை கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால் வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாய விசாரணைக்கு தடைவிதிக்க முடியாது என்று மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

இவ்வாறு பல வழக்கு விவாதங்களை கடந்து வந்த இந்த விவகாரம் இன்று முடிவுக்கு வந்தது. அதில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடந்த இந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. கடந்த  டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வைகோவும் இன்னொரு மனுதாரராக மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கின் விசாரணை  வருவதற்கு முன்பே உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக பேசி உள்ளது .மின்னிணைப்பு அளிக்க வேண்டும். ஆலைக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் .பராமரிப்பு பணிகளை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது .இதனால் கடைசியில் தீர்ப்பு கூட சிலருக்கு ஆதரவாக வரும் என்றே எல்லோரும் எதிர்பார்த்தார்கள்.

ஆனால் நீதிமன்றத்தில் வைகோ செய்த வாதம்தான், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடாமல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விசாரணையில் சரியாக 45 நிமிடங்கள் வைகோ வாதாடினார். அதில் சில குறிப்பிட்ட விஷயங்களாக…

* திருப்பூர் சாயப்பட்டறை வழக்கு. நொய்யல் ஆறு வழக்கு. வேலூர் தோல் தொழிற்சாலை வழக்குகள் எடுத்துக்காட்டாக வைகோ கூறினார்.

* நீர்நிலைகள் மாசுபடுவதை ஆதாரங்களுடன் சமைத்தார் சமர்ப்பித்தார்

* மாசு கட்டுப்பாட்டு வாரியம் இதையெல்லாம் கருத்தில் கொள்ளவில்லை என்பதையும் நீதிபதிக்கு விளக்கம் போட்டு காண்பித்தார்

* விசாரணை கமிட்டி அமைக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி கிடையாது. நாளை குறித்து விசாரணை ஆணையம் வெளியிட்ட அறிக்கை ஏற்கக் கூடாது என்றும் வாதிட்டார்

* தமிழக அரசியல் முக்கிய ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டி உள்ளார். இவ்வாறு பல மேற்கோள்காட்டி வைகோ வாதிட அதிர்ச்சியில் ஆடிப்போன நீதிபதிகள்.

சரமாரி கேள்விகளை எழுப்பி உள்ளார்கள். ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும், ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவை ரத்து செய்யப்பட்டதாகவும் இறுதியில் தீர்ப்பு வழங்கி உள்ளது .

Comments are closed.