வேல் கம்போடு தனுஷ்…அசுரன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

0

தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத முன்னணி நடிகரான தனுஷ்… இவர் நடித்து வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் மிகுந்த வெற்றியையும் ,பாராட்டையும் பெறும். ஏனென்றால் இவர் தேர்வு செய்யும் கதைகளும், இவருடைய நடிப்பும், ஏதாவது வகையில் பேசப்படும்.

அதே போல் இவரும், இயக்குனர் வெற்றிமாறனும் இணைந்து பணியாற்றும் திரைப்படம் என்றால் சமூக வலைத்தளங்களில் மிக பேசப்படும் விஷயமாக மாறிவிடும்.

அந்த வகையில் ஏற்கனவே தனுஷ், இயக்குனர் வெற்றிமாறன் இணைந்து பணியாற்றி வெளிவந்த  திரைப்படங்களான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை போன்ற திரைப்படங்கள் மிகுந்த வரவேற்பையும் ,பல விருதுகளையும் பெற்று தனுஷிற்கும், இயக்குனர் வெற்றிமாறனுக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

இந்நிலையில், இந்த இரண்டு கலைஞர்களும் இணைந்து, ‘அசுரன்’ என்ற தலைப்பில் ஒரு படத்தை தொடங்குவதாக அறிவித்திருந்தார்கள். இந்நிலையில் இன்று, அதே ஆடுகளம் தனுஷ் தோணியில் லுங்கியுடன் மிகுந்த ஆக்ரோஷத்துடன், கையில் வேல் கம்பு வைத்து யாரையோ தாக்குவது போல் ஒரு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். அது இப்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது .

Leave A Reply