வீராப்பு பேச்சு.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய செல்லூர் ராஜு

1

தற்போது அதிமுக அமைச்சரவையில் இருக்கும் செல்லூர் ராஜு மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் என்றாலே அவருடைய சர்ச்சை பேச்சு தான் எல்லோருக்கும் ஞாபகம் வரும் என்ற அளவுக்கு அவருடைய பேச்சு சர்ச்சையாகிவிடுகிறது.

ஒவ்வொரு பொதுக்கூட்டங்களிலும் ஏதாவது ஒரு விஷயத்தை தவறாகவோ அல்லது சர்ச்சையாக பேசுவது வழக்கம்.

மதுரையில் சில நாட்களுக்கு முன் நடந்த ஆணழகன் போட்டியில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட செல்லூர் ராஜு அவர்கள், எங்களது ஆட்சி விளையாட்டுத்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது, விளையாட்டு விடுதிகளில் உணவுப்படி அதிகமாக வழங்கப்படுகிறது ,அதனால் விளையாட்டுகளில் இளைஞர்கள் சிறந்து விளங்குகிறார்கள் என்றார்.

மேலும் பேசிய அவர்,  மதுரை காரர்களிடம் கைதட்டல் கூட கேட்டு தான் வாங்க வேண்டும், அந்த அளவுக்கு வித்தியாசமானவர்கள். இவர்கள் நட்புக்காக உயிரையும் கொடுப்பார்கள், துரோகம் செய்தால் உயிரையும் எடுப்பார்கள் என்றார்.

ஒரு அமைச்சரே வன்முறையைத் தூண்டுவது போல் பேசியது மிகுந்த சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது .

1 Comment

Leave A Reply