வீட்டில், கெட்ட சக்திகளை விரட்டி, லக்ஷ்மியை வரவழைக்க..

0

வீட்ல பணக்கஷ்டம் மாறி நல்ல செல்வ செழிப்போடு வாழ நிறைய பரிகாரங்கள் இருந்தாலும் இந்த பரிகாரம் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பரிகாரமாகும்.

அதுவும் ரொம்ப எளிமையான முறையில் ,திருப்தி அளிக்கக்கூடிய வகையில், அதுவும் நீங்க நம்பக்கூடிய வகையில் இருக்கும் பரிகாரமாகும்.

என்னவென்று பாருங்கள்…

வீட்டில் உள்ள கெட்ட சக்திகளை, [நெகட்டிவ் எனர்ஜி சொல்வாங்க] அதைப் போக்குவதற்கு கல் உப்பு வைத்து, எப்படி வீட்டில் செல்வ செழிப்பை உருவாக்குவோம்… அப்படின்னு சில வழிமுறைகளை சொல்றாங்க.

என்னவென்றால்,  எப்பவும் நம்ம வீடு கழுவும் போது, அந்த தண்ணியில் கல் உப்பு ஒரு கைப்பிடி போட்டு வீட்டை கழுவி வருவதை வழக்கமாக கொண்டால் உடனடி பலன் கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.

இரண்டாவது, ஒரு பவுலில் தண்ணியோட ஒரு ஸ்பூன் உப்பைப் போட்டு வீட்டில் தென்மேற்கு மூலையில் வைத்திருங்கள், இது கண்டிப்பாக உங்களுக்கு நல்ல வருமானத்தை ஏற்படுத்தும். முக்கியமான விஷயம் என்னன்னா இந்த பவுல் இருக்குற தண்ணி எப்போதெல்லாம் கலர் மாறுதோ அப்போ நீங்க தண்ணீரையும் உப்பையும் மாற்றி மாற்றி வைத்து வணங்க வேண்டும்.

மூன்றாவது இது சாப்பிட இடத்தில, குளிக்க இடத்தில் ,இதே மாற்றி மாற்றி வைத்து வணங்க, வீட்டில் ஏழ்மை நிலை கண்டிப்பாக மாறும் என்று சாஸ்திரம் சொல்கிறது

நான்காவது ஒரு சிவப்பு துணியில் கல்  உப்பு சேர்த்து கட்டி, அதை வீட்டில் நுழைவாயில் தொங்கவிடுவது, வீட்டிற்குள் தீயசக்திகளும் திருஷ்டிகளும் நுழையாது என்பதும் ஒரு கூடுதல் தகவல்.

முக்கியமாக ,தினமும் நான் குளிக்கும்போது, நாம் குளிக்கும் தண்ணீரில் ஒரு கைபிடி அளவு கல் உப்பை சேர்த்து குளித்தால், நம் உடலில் இருக்கும் கெட்ட சக்திகளும், தீய சக்திகளும் ,விலகி நம் மனதிற்கு ஒரு புத்துணர்வு பிறக்கும் என்கிறார்கள்.

முடிந்தால் இந்த உப்பு ;ஹிமாலயன் சால்ட்’ என்று சொல்லும் ‘இந்து உப்பு’ இருந்தால் மேலும் சிறப்பு .

முடிந்த அளவு செல்வ தேவதையான லட்சுமிக்கு ஒப்பான, உப்பை வீட்டில் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் .ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் உப்பு வாங்குவது மேலும் சிறப்பைத்தரும். ஏனென்றால் லட்சுமி கடலில் தோன்றியவர், உப்பும் கடலில் தோன்றுகிறது என்பதால் ,லட்சுமி கடாட்சம் வீட்டில் நிறையும் என்கிறது சாஸ்திரம்

Leave A Reply