விநியோகஸ்தர்களுக்கு செல்லப்பிள்ளையான அஜித்

0

கடந்த பொங்கலன்று ரிலீசான ரஜினி நடித்த ‘பேட்ட’ மற்றும் அஜித் நடித்த ‘விசுவாசம்’ இரண்டு திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றாலும், அஜித் நடித்த விசுவாசம் மட்டுமே அனைவரின் கவனத்தை திருப்பியது.. இதில் முக்கியமாக இத்திரைப்படத்தை பார்த்த அனைத்து ரசிகர்களும் மிகுந்த திருப்தியோடு இருந்தாலும் , வாங்கி வெளியிட்ட அனைத்து விநியோகஸ்தர்களும் மிகுந்த சந்தோஷத்தை பெற்றிருக்கிறார்கள் என்பதே முக்கிய செய்தியாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்ல அஜித் அவர்களை விநியோகஸ்தர்கள் அனைவரும் மனதார வாழ்த்துகிறார்கள் என்றால் மிகையாகாது.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு நடிகர்களும் பல சாதனைகளை வசூலில் கொண்டிருந்தாலும், தற்போது நம்பர் 1 இடத்தில் இருப்பவர் நடிகர் அஜித் மட்டுமே. விசுவாசம் படம் இந்த பிரம்மாண்ட வெற்றியை கொடுத்திருப்பது அனைவருக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவில் ரஜினி கமல் விஜய் சூர்யா விக்ரம் இவர்களின் பல படங்கள் விநியோகஸ்தர்களுக்கு பல கோடிகளை சம்பாதித்துக் கொடுத்து இருந்தாலும், தற்போது வெளியாகி உள்ள விசுவாசம் படம் இதுவரை 20 கோடி ரூபாய் வரை விநியோகஸ்தர்களுக்கு லாபம் கொடுத்துள்ளதாம். மேலும் இத்திரைப்படம் இன்னும் சில வாரங்களுக்கு மிக வெற்றிகரமாக ஓட இருப்பதால், அவர்கள் மனதார அஜித்தை வாழ்த்துகிறார்கள்.

Leave A Reply