விஜய் டிவி புகழ் செந்தில் கணேஷ் உடன் இணைகிறார் பா.ரஞ்சித்

0

மெட்ராஸ், அட்டகத்தி, கபாலி, காலா, ஆகிய படங்களை  இயக்கியவர் ரஞ்சித். இவரோட தயாரிப்பில் அடுத்து வரும் திரைப்படம் , ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’

கிடைக்கும் மேடை எல்லாம் சாதி அடக்குமுறை பற்றியே பேசி ,அனைவருடன் கருத்து மோதல்களில் ஈடுபடும், பா ரஞ்சித் தயாரிக்கும் இத்திரைப்படத்தில், விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் செந்தில் கணேஷ் இணைகிறார்.

சமீபமாக அவருடைய புகழ்பெற்ற பாடலான ‘சின்ன மச்சான் செவத்த மச்சான்’ என்ற பாடல் சார்லிசாப்ளின் 2 என்ற திரைப்படத்தில் இடம்பெற்று மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வரும் திரு செந்தில் கணேஷ் அவர்கள், பா ரஞ்சித் அவர்களின் தயாரிப்பில், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு என்ற திரைப்படத்தில், ஒரு பாடலை பாடியிருக்கிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Leave A Reply