விஜய் சேதுபதிக்கு பார்த்திபன் தந்த 96 பரிசு

0

கடந்த வருடம் விஜய் சேதுபதி ,திரிஷா நடிப்பில் வெளிவந்த 96 என்ற திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றிகளை பெற்றது. ‘ஆட்டோகிராப்’ திரைப்படத்திற்கு பிறகு, இளமை கால காதலை மிகச் சிறப்பாக நேர்த்தியாக சொன்னதில் 96 திரைப்படத்திற்கு மிகப் பெரிய பங்கு உண்டு.

சமீபத்தில் இப்படத்தின் வெற்றியை கொண்டாடிய குழுவினருக்கும், நடிகர் விஜய் சேதுபதிக்கும் பலர் பாராட்டுகளைத் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் மிக மாறுபட்ட சிந்தனை கொண்ட இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், பார்த்திபன் அவர்கள், ஒரு வித்தியாசமான பரிசை, விஜய் சேதுபதி அவர்களுக்கு அளித்துள்ளார்கள்.

எல்லோருடைய வெற்றிக்கும் யார் யாரோ உரிமை கொண்டாடும் இந்த உலகத்தில்… சினிமாவில் யார் வெற்றி பெற்றாலும், முதல் ஆளாய் நின்று வாழ்த்துக்களை சொல்வதில் பார்த்திபனுக்கு நிகர் பார்த்திபனே.

சில தினங்களுக்கு முன்னால் நடந்த ‘இளையராஜா 75’ என்ன நிகழ்ச்சிக்கு சென்ற இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானுக்கு, அவர் வீட்டிலேயே சென்று பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்கள் சொன்ன பார்த்திபன், தற்போது விஜய் சேதுபதி அவர்களுக்கு, அவர் நடித்த 96 திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாகவும், அதன் நினைவாகவும் மிக அழகாக,அர்த்தமுள்ளதாக, ஒரு கடிகாரத்தை பரிசாக வழங்கியுள்ளார்.

இயற்கையாக சினிமாவை காதலிப்பவன் என்பதால்….
‘ஊரார் வெற்றியை ஊக்கி வளர்த்தால், தன் படம் தானாய் வளரும்’ என்பதால் என் செலவில் ஒரு கேடயம் வழங்கினேன்-96 என பதிவு செய்து ஒரு ட்விட் செய்துள்ளார்

இதை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பார்த்திபனும் பதிவு செய்துள்ளார். அதற்கு அவரின் ரசிகர்கள் மூலம் , ஏகப்பட்ட பாராட்டுகள் பெற்றுள்ளார். அனைவரும், உங்கள் வித்தியாசமான சிந்தனை நாங்கள் மதிக்கிறோம், வாழ்த்துகிறோம் என்று பலவாறு பாராட்டுகிறார்கள் .

Leave A Reply