விஜய்சேதுபதி படத்தின் இசையமைப்பாளர்கள் இவர்கள்தான்

0

விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படத்தின் செய்தி என்றாலே அது எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. காரணம், அவர் நடிக்கும் திரைப்படங்கள் தனித்தன்மை வாய்ந்ததாகவும், அவர் தேர்வு செய்யும் கதைகளும் இயல்பாக இருப்பதால் இந்த பாராட்டையும் பெறுகின்றது.

தற்போது பல படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி அவர்கள், அடுத்து விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்திற்கு நடிக்கவிருக்கிறார்.  கதாநாயகியாக ராசி கண்ணா நடிக்கவிருப்பதாகவும் ,நகைச்சுவைக்கு சூரி நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்திற்கு விஜய் சந்தர் இயக்குனராக பணி புரிய இருக்கிறார்.

இதில் முக்கியமாக, இசையமைப்பாளராக பணிபுரிய “ஒரசாத” பாடல் புகழ் இசை அமைப்பாளர்கள் விவேக் மற்றும் மெர்வின் சாலமன், இவங்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் சொல்றாங்க.

இவங்க ஏற்கனவே வடகறி. குலேபகவாலி. ஆகிய படங்களில் பணி ஆற்றி இருந்தாலும். தற்போது விஜய் சேதுபதி நடிக்க இருக்கும். இந்த படத்திற்கு இசையமைப்பதாலேயே இவர்கள் அனைவரின் கவனத்தை பெறுவார்கள்.

ஆனால் ,இளைஞர்களிடையே இந்த இரண்டு இசையமைப்பாளர்களும், மிகுந்த செல்வாக்கு பெற்றவர்கள் .ஏனென்றால் இவர்கள் இசையமைத்து, யூடியூப்பில் 57 மில்லியன் பார்வையைக் கொண்ட, “ஒரசாத” பாடல் இன்றும் பலரின் பாராட்டை பெற்றுள்ளது

Leave A Reply