வக்கிரத்தின் உச்சம்… தமிழிசை கடும் கோபம்

0

சமூக ஊடகங்களில் அனைவரின் செயல்பாட்டையும் மீம்ஸ் மூலம் கிண்டலடிப்பதும் அல்லது சுட்டிக்காட்டுவதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது. அதை ஒரு சிலர் பொருட்டாக எடுப்பதில்லை., ஒரு சிலர் அதற்காக மன உளைச்சலுடன் பதில் சொல்ல ஆரம்பிப்பார்.

ஆனால் மிக பிரபலமான அரசியல் பின்புலம் கொண்ட தமிழிசை சவுந்தரராஜனை கிண்டல் செய்யாதவர்கள் இல்லை என்ற அளவிற்கு ஆகிவிட்டது… ஊடகம் மட்டுமல்லாது பொதுமக்களும் ஏதாவது ஒரு வகையில் இவர்களின் செயல்பாட்டையும் பேசுவதையும் கிண்டலடித்து மீம்ஸ் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள் . சில மீம்ஸ் பார்த்தவுடன் சிரிப்பை வரவழைக்கும். சில மீம்ஸ் முகம் சுழிக்க வைக்கும்.

இந்நிலையில் இன்று பிரபல ஊடகம் ஒன்று தமிழிசை சவுந்தர பாண்டியனின் உருவத்தையும் நிறத்தையும் பற்றி மிகத் தரம் தாழ்த்தி விமர்சித்துள்ளது

இதை வன்மையாக கண்டித்த தமிழிசை சவுந்தர பாண்டியன் அவர்கள், வக்கிர குணம் கொண்டவர்களே இந்த மாதிரி தரம் தாழ்த்தி விமர்சிப்பார்கள் .இந்த விமர்சனத்தால் நானும் என் குடும்பத்தை சார்ந்தவர்களும் மிக மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். என்னையே இவ்வாறு கீழ்த்தரமாக செல்கிறார்கள் என்றால், அரசியலில் புதிதாக நுழையும் பெண்களை எவ்வளவு கீழ்த்தரமாக விமர்சிப்பார்கள் என்று அவர்கள் கேள்வி எழுப்பினார்.

Leave A Reply