ரூ 2000 சிறப்பு நிதி. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

0

சில தினங்களுக்கு முன்பாக தமிழக அரசு வெளியிட்ட ஒரு ஆணை அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.  ஏழை தொழிலாளர்களுக்காக அவர்களது வங்கி கணக்கில் 2000 ரூபாய் வழங்கப்படும் அதுவும் இந்த மாத இறுதியில் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்

இந்த அறிவிப்பை எதிர்த்து கடந்த 13ம் தேதி சட்டப் பஞ்சாயத்து என்ற இயக்கத்தை சேர்ந்த செந்தில் ஆறுமுகம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் இத்திட்டத்திற்கு எதிராக முறையீடு செய்தார்… இந்த 2000 ரூபாய் வழங்கப்படும் என்று திட்டம் எந்த கணக்கெடுப்பை வைத்து 60 லட்சம் ஏழை குடும்பங்கள் என நிர்ணயிக்கிறது இந்த அரசு? எவ்வாறு தொகை வழங்கப்படுகிறது. தேர்தலை மனதில் வைத்து இந்த அரசியல் அறிவிப்பை வெளியிட்டு இருப்பதாக தெரிகிறது .இது சட்டவிரோதமான செயலாகும். எனவே இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இன்று விசாரணைக்கு வந்த அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அரசு சிறப்பு நிதி வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என தீர்ப்பளித்துள்ளது. எனவே அந்த அறுபது லட்சம் ஏழை குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் கிடைப்பது உறுதியாகி உள்ளது.

Comments are closed.