ரூம் போட்டு காதலியை கொன்ற கொடூரன்- பரபரப்பு பின்னணி

0

மர்மமான முறையில் லாட்ஜில் கொலை செய்யப்பட்ட ஒரு நர்ஸ்… அருகில் ஒரு கடிதம் …அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம்.

லக்னோவை சேர்ந்த சமந்தா, சுகாதார மையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அவரும் ராஜேஷ் என்ற மருத்துவரும் நீண்ட நாட்களாக  காதலித்து வந்துள்ளனர்.

இவர்களுக்குள் அவ்வப்போது கருத்து மோதல்கள் இருந்து வந்துள்ளது . இந்நிலையில் நேற்று ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து இருவரும் தங்கி உள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே மோசமாக கருத்து மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் கோபமடைந்த மருத்துவ ராஜேஷ் ,காதலியை கொலை செய்துவிட்டு ,ஒரு கடிதம் எழுதி  அங்கு வைத்துவிட்டு தப்பித்து ஓடி உள்ளார்.

ஹோட்டல் நிர்வாகம், நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால் ,காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அங்கு வந்த காவல்துறையினர், கதவை உடைத்து சென்றபோது, சமந்தா பரிதாபமாக கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அருகிலிருந்த கடிதத்தில் ,என் பெயர் ராஜேஷ். நான் மருத்துவராக பணியாற்றி உள்ளேன். நானும் சமந்தாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தோம். ஆனால் நான் எவ்வளவு உண்மையாக இருந்தனோ, அந்த அளவிற்கு அவள் இல்லை, இதனாலேயே எங்கள் இருவருக்கும் நிறைய சண்டை வந்துள்ளது. ஆகவே நான் அவரை கொலை செய்தேன். நானும் தற்கொலை செய்யப் போகிறேன், என்று எழுதியிருந்ததாக போலீஸ் வட்டாரம் தெரிவிக்கின்றது.

சமந்தாவின் உடலை மீட்ட போலீசார், பரிசோதனைக்கு அனுப்பி, தற்கொலை செய்து கொள்வதாக கூறி தப்பித்து ஓடிய மருத்துவரை தேடி வருகின்றனர்

Leave A Reply