ராமராஜன், மைக் மோகனை, கலாய்த்த இளையராஜா

0

‘இளையராஜா 75’ விழாவில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அதில் ஒன்று நடிகர் ரஜினிகாந்த் ,எனக்கு எவ்வளவு திரைப்படங்களில் இளையராஜா இசையமைத்து இருக்கிறார். என்னுடைய படங்களுக்கு எத்தனையோ ஹிட் பாடல்களை கொடுத்து இருந்தாலும், கமல் படம் என்றால் மட்டும் இளையராஜா சார் ஸ்பெஷலாக போட்டு தருவார் ,என்று ரஜினி சொல்ல அரங்கமே அதிர்ந்தது.

அதற்கு சிரித்துக்கொண்டே இளையராஜா ‘எனக்கு யார் பாடல்கள் என்று முக்கியம் கிடையாது, பாடல் தான் முக்கியம். கமலிடம் கேட்டால் ‘ரஜினி படங்களுக்கு தான் பிரமாதமாக போட்டு தருவாய்’ என்று சொல்வார்.

இதைவிட ராமராஜன் படங்கள் கூட தான் நல்ல பாடல்களைத் தந்துருகிறேன் .. நீங்களெல்லாம் பெயர் வைத்திருக்கிறீர்களே…’மைக் மோகன்’என்று அந்த நடிகருக்கு கூட தான் நல்ல பாடல்களை கொடுத்து இருக்கிறேன், என்று சொல்ல  அரங்கமே அதிர்ந்தது .

Leave A Reply