மெஹந்தி வைத்தால் திருமணத்தை பதிவு செய்ய முடியாது…!

0

பிரபல இயக்குனர் மற்றும் காமெடி நடிகர் மனோபாலாவின் மகன் திருமணத்தில் ஒரு வினோதமான சம்பவம் நடந்துள்ளது அதை அனைவரின் விழிப்புணர்ச்சிக்காக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்

மனோபாலாவின் மகன் ஹரிஷ் மற்றும் பிரியா என்பவருக்கும் சென்னை இன்று கோலாகலமாக திருமணம் நடைபெற்றது .இதில் நடிகர்கள் சத்யராஜ், கவுண்டமணி, ராதாரவி, சிவகார்த்திகேயன், சதீஷ் மற்றும் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன், இயக்குனர் பாரதிராஜா, கேஎஸ் ரவிக்குமார், உட்பட ஏராளமான திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்நிலையில் திருமணம் முடிந்த கையோடு அந்த திருமணத்தை பதிவு செய்யும் நோக்கத்தில் மணமக்களோடு பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு சென்று உள்ளனர். அங்கு மணப்பெண்ணின் கைவிரல், பதிவு செய்யும் இயந்திரத்தில் பதிவாகவில்லை.. என்னவென்றால், கையில் மெஹந்தி கொண்டுள்ளதால் ரேகையை பதிவு செய்ய மறுத்து உள்ளது அந்த இயந்திரம். பின்பு கையில் உள்ள மெஹந்தி அழித்து, அந்த திருமணத்தை பதிவு செய்துள்ளன.ர்

இதை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அனைவரின் விழிப்புணர்வுக்காக பதிவிட்டுள்ளார் மனோபாலா. என்னவென்றால் இந்த மாதிரி மெஹந்தி வைக்கும் பொழுது கட்டைவிரலில் மெஹந்தி வைக்காதீர்கள். மேரேஜ் ரிஜிஸ்ட்ரேஷன் செய்யும்பொழுது பதிவு செய்யும் இயந்திரம், உங்களது பதிவை ஏற்க மறுக்கிறது. பீ கேர் ஃபுல். மெஹந்தி எங்கு வாழ்ந்தாலும் வைத்துக்கொள்ளுங்கள் . கட்டை விரலை தவிர .முக்கியமாக வெளிநாடு செல்பவர்கள். என்று மணவாளா வித்தியாசமான ஒரு பதிவை இட்டுள்ளார்.

Leave A Reply