மூன்று மதத்தினரையும் வீட்டில் வைத்திருக்கும் டி ராஜேந்தர்

0

‘எம்மதமும் சம்மதம்’ என்பதற்கு ஏற்ப தன்னுடைய குழந்தைகள் அனைவரும் ஒவ்வொரு மதத்தைச் சார்ந்தவர்களாக கொண்டுள்ளார் பன்முகத்தன்மை கொண்ட டி ராஜேந்தர்.

இயக்குனர் டி ராஜேந்திரனின் இளைய மகனும் நடிகர் சிம்புவின் சகோதரருமான குறளரசன் முஸ்லிம் மதத்திற்கு மாறியுள்ளார். இந்த மதமாற்றத்திற்கு பின்னணியில் உள்ள விஷயங்களை பரபரப்பாக பேட்டி அளித்துள்ளார் இயக்குநர் டி .ஆர் .

ஏற்கனவே இயக்குனர் டி ராஜேந்தர் அரசியல் சினிமா என்று அனைத்து துறைகளிலும் கால் பதித்து அனைத்து விவகாரங்களிலும் தலையிட்டு அதை ட்ரெண்டாக்குவது  அல்லது அந்த விஷயம் ட்ரெண்டாக்க படுவது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்

அதேபோல் அவருடைய மகன் சிம்புவும் சினிமாவில் பல சர்ச்சைக்குரிய வசனங்களை பேசுவது அல்லது அவர் செய்யும் விஷயம் சர்ச்சையாகும் என்பது அனைவருக்கும் பழக்கப்பட்ட ஒன்று .

இந்நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சை செய்தி … என்னவெனில் டி ராஜேந்திரன் இளைய மகன் குறளரசன் திடீரென்று நேற்று முஸ்லிம் மதத்துக்கு மாறியுள்ளார் என்ற செய்தி பரவியதும்… இதை உறுதி செய்யும் விதமாக அவர் ஒரு பேட்டியில், எம்மதமும் சம்மதம் மற்றும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையை கடைபிடித்து வாழ்ந்து வருபவன் நான். என்னுடைய மகன் சிம்பு இந்து மதத்தில் மிகப்பெரிய சிவபக்தராக வாழ்ந்து வருகிறார். மகள் இலக்கியா கிறிஸ்தவ மதத்தில் தொண்டாற்றி வருகிறார். தற்போது இளைய மகன் குறளரசன் இஸ்லாம் மதத்தையும் பின்பற்றுகிறார் என கூறினார்.

ஒன்றே குலம் ஒருவனே தேவன், எம்மதமும் சம்மதம், வாழ்க ஜனநாயகம் .

Comments are closed.