மூன்றாம் பிறையின் முக்கியத்துவம் என்ன…?

0

இஸ்லாமியர்கள் போற்றிக் கொண்டாடும் ஒரு நாள் மூன்றாம் பிறை என்பது அனைவருக்கும் தெரியும். அதே அளவு  கிறிஸ்து மற்றும் இந்துக்களும் மூன்றாம் பிறையை மிகமுக்கியமாக பார்க்கிறார்கள்… அப்போ அதன் சிறப்பு என்ன என்பதை பார்ப்போம்.

நாம் எந்த நல்ல காரியங்கள் செய்தாலும் அது வளர்பிறையாக இருக்க வேண்டும் என்பதை நாம் அனைவரும் கடைபிடிக்கிறோம். அவ்வாறு இருக்கும்போது பிறைகளிலேயே மிக முக்கியத்துவம் வாய்ந்தது மூன்றாம் பிறை .அது தெய்வீகமான பிறை என்றும் சொல்வார்கள்.

நாயன்மார்கள், இந்த மூன்றாம் பிறையை ‘இத்தாய் பிறை சூடிய பெருமானே’ என்று பாடுகிறார். இந்த மூன்றாம் பிறையை சிவன் தன் முடி மீது அணிந்திருக்கிறார் என்றும் சொல்வார்கள்.

மூன்றாம் பிறையின் விசேஷம் என்னவென்றால், அமாவாசை முடிந்து தெரிய கூடிய பிறைதான் இந்த மூன்றாம் பிறை. ஏனென்றால் அமாவாசை அன்றும் அதற்கு மறுநாளும் சந்திரன் தெரியாது. அதுக்கு மறு நாள் தான் சந்திரன் ஒளிரும். ஒரு சின்ன ஒளிக்கீற்றாக வரும் . அதனை ஏதாவது ஒரு காட்டில் அல்லது ஒரு கிராமத்தில் இருந்து மின் விளக்குகள் இல்லாத இடத்தில் இருந்து பார்த்தால் உங்களுக்கு ஆச்சரியம் தெரியும். அதை பார்த்த உடன் உங்களுக்கு ஒரு புத்துணர்வு கிடைக்கும் .

எந்த ஒரு உயிரினமும் சிறுவயதில் மிக அழகாக தெரிவார்கள். அதாவது கன்றுக்குட்டி, கோழி குஞ்சு, கைக்குழந்தை இவ்வாறு எதை பார்த்தாலும் அதனுடைய அழகிலும் வசீகரத்தாலும் நாம் மயங்கிவிடுவோம்.

அதே அளவு இந்த மூன்றாம் பிறை பார்க்கும்போது மனம் குளிர்ச்சியடையும். அனைத்து மதங்களிலும் மூன்றாம் பிறை தெய்வீகமான வழிபாடாக இருக்கிறது . மூன்றாம் பிறையை கண்டு வணங்குவது ஆயுள் விருத்தியாகும். செல்வங்களைச் சேர்க்கும். பிரம்மஹத்தி போன்ற தோஷங்களை நீக்கும் என்று சொல்லப்படுகிறது.

சோமவாரம் என்றழைக்கப்படும் திங்கட்கிழமை அன்று இந்த மூன்று முறை வந்தால் மிக சிறப்பு . திங்கட்கிழமை அன்று மூன்றாம் பிறையை தரிசித்தால் வருடம் முழுவதும் எங்கு சந்திரனை வழங்கிய பலன்கள் கிடைக்கும் என்று முன்னோர்கள் கூறுகிறார்கள். அதைப் பார்த்தாலே மனக்கஷ்டங்கள் வருத்தங்கள் நீங்கும் .சந்தோஷங்கள் ஓங்கும்.

Comments are closed.