முப்பெரும் தேவியரும் குடி கொண்ட மாமனிதர் இளையராஜா – பொன்னார்

0

இளையராஜா 75 என்ற நிகழ்ச்சி சென்னையில் இரண்டு நாட்களாக நடந்து அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பான செய்திகளாக உலாவிக் கொண்டிருக்கிறது .

ஏ .ஆர் .ரகுமான் பேசிய நெகிழ்ச்சியான வார்த்தை, ரஜினி கமல் பேசிய பேச்சுகள் ,இளையராஜாவின் பாடல்கள், என ஒவ்வொரு  விஷயமும், பல வடிவங்களாக சமூகவலைத்தளங்களில் வந்து கொண்டிருக்கிறது.

இதில் இளையராஜாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய மத்திய அமைச்சர் திரு பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள், இளையராஜா ஆன்மீக ரீதியாகவும் தர்மத்தின் ரீதியாகவும் வாழ்ந்து வருபவர் . தெய்வமான முப்பெரும் தேவியும் இருக்கக்கூடிய மாமனிதன் தமிழகத்திற்கு கிடைத்த மகா பாக்கியம். அவரது பாதங்களை  தொட்டு வணங்கிய போது முப்பெரும் தேவியரின் ஆசிர்வாதம் கிட்டியதாக மனமகிழ்ந்தேன் என்றார்.

முன்னதாக, ஒரு ரசிகனாக நான் இளையராஜாவுக்கு மரியாதை செலுத்தினேன். இதயங்களில் உள்ள பாரங்களை இறக்கி வைக்கும் இடம் இது என்று நெகிழ்ந்தார்


Leave A Reply