மாசித்திருவிழா ஆரம்பம். திண்டுக்கல் விழாக்கோலம்

0

திண்டுக்கல் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் திருவிழா பூ அலங்காரத்துடன் தொடங்கியது .

திண்டுக்கல் மாவட்டம் மலைக்கோட்டையின் கீழ் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற கோவில், கோட்டை மாரியம்மன் கோவில் ஆகும். ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் இந்த கோவிலில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.

300 வருடம் பழமை வாய்ந்த இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் அனைத்து மதத்தினரும் பங்கேற்பார்கள். மாசி திருவிழா, பூ அலங்காரதுடன் தொடங்கியது. இன்று காலை பூஜைகள் நடைபெற்று வருகிறது. மிகச் சிறப்பாக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில், அம்மன் வீதி உலா வந்து அனைத்து பக்தர்களுக்கும் காட்சி கொடுத்து வருகிறார்.

நான்கு ரதவீதிகளிலும் அம்மன் உலா வர, அம்மனுக்காகக் காத்துக் கொண்டிருந்த அனைத்து பக்தர்களும், அம்மன் மீது பூக்களைத் தூவி, சிரம் தாழ்த்தி பயபக்தியுடன் வழங்கினார்கள்.

இத்திருவிழாவையொட்டி ஒவ்வொரு சாலையிலும் ஆங்காங்கே மோர்பந்தல், மாவிலை தோரணம், வாழை மரம், என அழகாக ஒவ்வொரு சாலையிலும் காட்சியளிக்கிறது.

மாசி திருவிழாவின் முதல்நாள் என்பதால், ஏராளமான பக்தர்கள் ஒவ்வொரு சாலையிலும் குவிந்து, அம்மனுக்காக காத்திருக்கிறார்கள்.

Leave A Reply