மரம் நட்டால் மாணவர்களுக்கு 2 மதிப்பெண்கள்.. வாழ்த்து தெரிவித்த நடிகர் விவேக்

0

மரம் நடுதலை ஊக்குவிக்கும் விதமாக மரம் நட்டால் 2 மதிப்பெண் வழங்கப்படும் என்ற ஆணை பிறப்பித்த அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை நடிகர் விவேக் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்

பள்ளிக்கல்வித்துறையில் பல மாற்றங்கள் செய்து வரும் அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள், பாடத்திட்டத்தில் ஸ்மார்ட் கல்வித் திட்டம் ,அனைவராலும் பாராட்டப்பட்டது.

மேலும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக சந்தோஷமான செய்தியை வெளியிட்டு உள்ளார்கள்

சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், மரம் வளர்க்கும் ஒவ்வொரு மாணவருக்கும் 2 மதிப்பெண்கள் வீதம், ஆறு பாடங்களுக்கும் 12 மதிப்பெண்கள் வழங்கப்படும். இந்த திட்டம் அடுத்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும். மாணவர்கள் படிப்பதோடு மரம் வளர்ப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் ,இதை கருத்தில் கொண்டே இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது என்று பேசினார்.

Leave A Reply