மெரினாவில் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்கலாம் -ஹைகோர்ட்

0

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்க தடை இல்லை என்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது

சென்னை மெரினாவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்டடம் கட்ட தமிழக அரசு திட்டமிட்டு இருந்தது. அதற்கு சுமார் 50 கோடி செலவிட தமிழக அரசு தயாராக இருந்தது.

இந்நிலையில் இதற்கு எதிராக .வழக்கறிஞர் ரவி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு போட்டார் .ஜெயலலிதாவிற்கு நினைவிடம் மெரினாவில் அமைக்கக்கூடாது என்று…

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவிற்கு  நினைவிடம் அமைப்பது சரியான செயல் இல்லை… இது வருங்காலத்தில் வந்து தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்… அதுமட்டுமல்லாமல் இந்த கட்டுமானம் விதிகளை மீறி கட்டப்படுகிறது…, அதனால் இதை தடை செய்ய வேண்டும் என்று மனுவில் ரவி என்ற வழக்கறிஞர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கில் தமிழக அரசு ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பது தவறான செயல் இல்லை என்றும், அவர் இறந்தபோது குற்றவாளி இல்லை என்றும் ,அதன்பிறகு சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்தது என்றும், இது அரசின் கொள்கை முடிவு என்றும் ,தமிழக அரசு கூறியது .இந்நிலையில் தமிழக அரசுக்கு தீர்ப்பு சாதகமாக வந்துள்ளது.

அதில்,  மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க தடை இல்லை என்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது . நீதிபதிகள் ராஜமாணிக்கம், சத்யநாராயணன் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார். மக்கள் வரிப்பணத்தில் இந்த நினைவிடம் அமைக்க எந்த தடையும் கிடையாது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மேலும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில்,  சொத்துக்குவிப்பு தீர்ப்பு வருவதற்கு முன்பாகவே ஜெயலலிதா இறந்து விட்டார்.., எனவே அவர் இறந்தபோது தீர்ப்பு வழங்கப் படவில்லை. அதனால் அவரை சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளி என்று கருதிவிட முடியாது. அதனால் அவருக்கு அரசு நினைவிடம் அமைப்பதில் தவறில்லை என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Leave A Reply