மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் தேமுதிக ஆதரவாளர்கள்

0

தேமுதிக கட்சியின் தலைவரும் நடிகருமான விஜயகாந்த்  கடந்த சில வருடங்களாக அரசியலுக்கு அப்பாற்பட்டு தன்னுடைய சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு சென்று வருகிறார்.

இதனால் அவருடைய கட்சியும் அவர் கட்சி தொண்டர்களும் களை காணப்படுவது போல், அனைத்து தமிழ் உள்ளங்களும் அவர் இல்லாமல் தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் இருப்பதாகவே உணர்கிறார்கள்.

அவரைப் பற்றிய ஒவ்வொரு செய்தி வரும் பொழுது தமிழக மக்கள் ‘ஐ மிஸ் யூ தலைவா’ என்று ஏங்குகிறார்கள்.

அந்த ஏக்கத்தை போற்றும் வண்ணம் தற்போது விஜயகாந்த் அவர்களின் ட்விட்டர் அக்கவுண்டில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

அதில், தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர் பொதுச்செயலாளர் கேப்டன் அவர்கள் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 18ம் தேதி மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார், மேல் சிகிச்சை முடிந்து பூரண நலமுடன் வரும் 16ம் தேதி சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு தாயகம் திரும்புவார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது… என்று அறிவித்துள்ளார்கள்.

இந்த செய்தி கேட்டதும் தேமுதிக தொண்டர்கள் சந்தோசத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வாழ்த்துக்கள் கேப்டன்

Comments are closed.