மகள் செய்யும் காரியம்… ரஜினிகாந்த் அதிர்ச்சி…

0

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் ரஜினிகாந்தின் இளைய மகளான சௌந்தர்யா, திருமண வாழ்வில் முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு, கடந்த சில மாதங்களாக தனியாக வாழ்ந்து வந்தார். தற்போது வேறு ஒருவருடன் திருமணம் செய்ய தயாராகிவிட்டார்.

விசாகன் என்பவர்தான் இவர் திருமணம் செய்ய இருக்கும் இரண்டாவது நபர், இவரும் ஏற்கனவே திருமணமாகி மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றவர் என்று கூறப்படுகிறது.

தற்பொழுது இந்த இருவருக்கும் திருமணம் நடக்க தயாராகி வரும் நிலையில் ,ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா அவர்கள், இந்த திருமணமாவது கடைசி வரை நீடிக்க வேண்டும் என்று வேண்டி, தமிழகத்தில் உள்ள முக்கியமான கோயில் குளம் என்று நடையாய் நடந்து தரிசனம் செய்து வருகிறார்.

இதற்காக சிறப்பு பிரார்த்தனைகளும் ,சிறப்பு பூஜைகளும், செய்து வேண்டி வருகிறார்.

நாகர்கோவில் அருகே அமைந்துள்ள சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலில் தரிசனம் செய்து, சிறப்பு பரிகாரம் செய்து உள்ளார் .அதே மாதிரி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள, பகவதி அம்மன் கோவில் மற்றும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் என , ஒவ்வொரு மாவட்டத்திலும் பல அம்மன் கோவில்களில் நேரில் சென்று சிறப்பு தரிசனம் செய்து வருகிறார் .

Leave A Reply