ப்ளூ சட்டை கைது …?

0

தற்போது விமர்சனம் என்ற பெயரில் youtube channel ஐ பிரபலப்படுத்துவதற்காக தரங்கெட்ட வகையில் ,விமர்சனம் நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.

அந்த வகையில் தனக்கென ஒரு subscribers கூட்டம்  வைத்துக்கொண்டு, தமக்குப் பிடித்த படம் ,பிடிக்காத படம் என்று பாராமல், பல படங்களை வெறுப்பேற்றி, கீழ்த்தரமாக பேசியவர் தமிழ் டாக்கீஸ் என்ற யூடியூப்  சேனலின் உரிமையாளர் இளமாறன்.

இவரை சினிமா உலகினர்  செல்லமாக இல்லை இல்லை கோபமாக ப்ளூ சட்டை என்றே அழைப்பார்கள்… சமீபத்தில் ரஜினி திரைப்படம், அஜித் திரைப்படம், என்று பார்க்காமல் கீழ்த்தரமாக விமர்சனம் செய்ததாக மிகவும் பிரபலமானவர்.

அவர்களின் ரசிகர்களின் கடுங்கோபத்துக்கு ஆளாகி, அதனாலேயே அவருடைய youtube channel வியூஸ் அதிகமாகி,  அவருடைய வருமானமும் அதிகமாகி, இன்று தன்னால் எதையும் செய்ய முடியும் என்ற நிலையில் உள்ளவர் tamil talkies இளமாறன்.

அதற்கு முற்றுப்புள்ளி வைப்பது போல் ,யாரு இந்த பூனைக்கு மணி கட்டுவது என்பது போலவும், சார்லி சாப்ளின் இயக்குனர் சக்தி சிதம்பரம், மற்றும் அம்மா கிரியேஷன்ஸ் சிவா, ஆகியோர் இணைந்து அவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.

இவர்கள் கூட்டணியில் தற்போது வெளி வந்த சார்லிசாப்ளின் 2 என்ற திரைப்படம், பிரபுதேவா மற்றும் நிகில் கல்ராணி அறிவோடு நடிப்பில் வந்த படம்.

படம் ரிலீசான மறுதினமே இவரது சேனலில் படத்தின் விமர்சனம் வரும்.. அதற்கு முன்பே சம்பந்தப்பட்டவர்களிடம் பேரம் பேசி, ஒரு தொகையை கைப்பற்றுவது வருவது வழக்கம் ..

அதேமாதிரி சார்லிசாப்ளின் 2 படம் வெளிவருவதற்கு முன்பாக, இயக்குனரிடம் பணம் கேட்டுள்ளார் .இவ்வளவு பணம் கொடுத்தால் நான் இவ்வாறாக பேசுவேன் இல்லையென்றால் தரங்கெட்டு தான் பேசுவேன், என்று மிரட்டி உள்ளார்.

அதற்கு மறுத்த திரைப்படக் குழு நீ என்ன வேண்டுமானாலும் செய்துகொள் என்று விட்டுவிட்டார்கள் ஏற்றார்போல் அந்த படத்தை மிக கீழ்த்தரமான விமர்சனத்தை வைத்தார் ப்ளூ சட்டை

அதனால் விரக்தி அடைந்த திரைப்படக்குழு போலீசில் புகார் அளித்து உள்ளார்கள்

Leave A Reply