பேட்டிங்கில் சொதப்பினாலும் நான் கில்லி தான்டா- தோனி

0
thanks AFP

மகேந்திர சிங் தோனி இல்லாமல் ,நமக்கு இரண்டு உலக கோப்பை இல்லை என்பதே நிதர்சனம். ஆனால் மகேந்திர சிங் தோனியின் பேட்டிங் திறமை பற்றி ,சமீப காலமாக பல விமர்சனங்கள் எழுந்து கொண்டு வரும் நிலையில் , கேப்டன் கோலியும், பயிற்சியாளர் ரவிசாஸ்திரியும், அவர் மீது அபார நம்பிக்கை வைத்துள்ளனர்.

அந்த நம்பிக்கையை காப்பாற்றும் விதத்தில் அவர் அவ்வப்போது ரன்களை எடுத்து தன்னையும் காப்பாற்றிக் கொள்வார்.  சில போட்டிகளின்போது அவருடைய பங்களிப்பு மிக அதிகமாக இருக்கும். பேட்டிங் ஆக இருந்தாலும் சரி அல்லது கீப்பிங் ஆக இருந்தாலும் சரி ,அவருடைய பங்களிப்பு இல்லாமல், இந்தியா வெல்ல வாய்ப்பே இல்லை என்ற நிலையை இன்று வரை அவர் கொண்டிருக்கிறார்.  மேலும் கேப்டன்களுக்கு அவ்வப்போது சில உருப்படியான அறிவுரை கூறி, அணியை காப்பாற்றுவதிலும் மிக கில்லாடியாக உள்ளார்.

இதேபோல் நேற்று நடந்த இந்தியா நியூசிலாந்து ஐந்தாவது ஒருநாள் போட்டியில் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்து தோனி அனைவருடைய ஏமாற்றத்தை அளித்து, பின்பு அவருடைய கீப்பிங் செயல்பாட்டால் நல்ல பெயரை சம்பாதித்தார் .

ஒரு நிலையில் வெற்றிக்காக போராடிக்கொண்டிருந்த நியூசிலாந்து அணி 31 ஓவர்களில் 135 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து திணறிக் கொண்டிருந்தனர் .இருந்தாலும் அந்த அணியின் ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் நீசம் விக்கெட் மிக முக்கியமானதாக இருந்தது.

ஏனென்றால் அவர் மிக அருமையாக ஆடிக்கொண்டிருக்க, அவரை எவ்வாறு வெளியேற்றுவது என்று அனைத்து வீரர்களும் குழம்பி கொண்டிருக்க, அவருடைய விக்கெட், கீப்பர் தோனியின் சமயோசிதமான புத்தியால் விழுந்தது.

37 வது ஓவரில் இரண்டாவது பந்தை அடிக்க, நீசம் நன்றாக காலை நீட்டி ஸ்வீப் ஆட முயன்றார். கேதர் ஜாதவ் பந்து வீச்சு அபாரமாக இருந்து பந்து கால் பேடில் பட்டு பின்னால் தோணியிடம் சென்றது.

கேதர் ஜாதவ் இதற்கு எல்பி முறையீடு செய்தார் .ஆனால் அது ஸ்டம்புக்கு வெளியே அதாவது பேட்ஸ்மேன் லைனுக்கு வெளியே நின்று பேடில் வாங்கினார். பின்பு அது கீப்பரிடம் சென்றது. இதனால் அது எல்பி கிடையாது என்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் டோனி அண்டர் ஆர்ம் முறையில் அழகாக பந்தை, ஸ்டெம்பை நோக்கி எறிய அது ஸ்டெம்பில் பட , நீசம் ரன் அவுட் ஆனார்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் ,எந்த போட்டியிலும் ஒரு விக்கெட் விழுந்ததற்கு துள்ளிக் குதிக்காத தோனி, இந்த விக்கெட் விழுந்த ஒரு காரணத்தால் மிகப்பெரிய கொண்டாடத்தை கொண்டாடினார். இது அனைவருக்குமே ஆச்சரியத்தையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மகேந்திர சிங் தோனி ஏதாவது ஒரு துறையில் இந்திய அணிக்கு தான் எவ்வளவு முக்கியம் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொண்டு வருகிறார்.

Leave A Reply