பெருக்கத்து வேண்டும் பணிதல் – விவேக் புகழாரம்

0

இசை உலகில் மிகப்பெரிய ஜாம்பவான்களான இளையராஜாவும், ஏ ஆர் ரகுமானும் ஒரே மேடையில் தோன்றினால் எப்படி இருக்கும் என்று ஒவ்வொரு ரசிகர்களும் ஏங்கி இருப்பார்கள்.

‘இளையராஜா 75’ என்ற இசை நிகழ்ச்சி இரண்டு நாட்கள் சென்னையில் நடந்தது .அந்த நிகழ்ச்சியை தடுப்பதற்காக சில தயாரிப்பாளர்கள் வழக்கு போட்டனர். அந்த வழக்கிலிருந்து மீண்டு, வெற்றிகரமாக நடந்த அந்த நிகழ்ச்சியில் கவர்னர் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

அதில் முக்கியமாக ,ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமான் அவர்கள், கலந்து கொண்டது முத்தாய்ப்பாக இருந்தது என்று சொல்லலாம். மேலும் ஏ ஆர் ரகுமான் பேசியது இன்னும் அனைவராலும் பாராட்டப்பட்டது . அதில், இளையராஜா எனக்கு ஸ்கூல் ஹெட்மாஸ்டர் மாதிரி… எப்பொழுதும் அவர் மீது ஒரு மரியாதை கலந்த பயம் இருக்கும்.. என்று பேசியது மிகுந்த வரவேற்பு பெற்றது.

மேலும் மேடையிலேயே அவர் இசையமைத்த பாடலை வாசித்ததும் இன்று பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இது சம்பந்தமான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு மிக அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விவேக் அவர்கள் அவருடை ட்விட்டரில் இளையராஜா ஹார்மோனியத்தில் பிறந்தவை நம்ம ஹார்மோன்களில் கலந்துவிட்டன உலகப்புகழ் பெற்ற பின்னும் மேடையேறி ராஜா சார்தான் தலைமை ஆசிரியர் போன்றவர் என்று கூறியது ஏ ஆர் ரகுமான் அவர்களின் பண்புக்கு ஒரு சான்று.’ பெருக்கத்து வேண்டும் பணிதல்’ என்ற திருக்குறளை அடிக்கோடிட்டு நடிகர் விவேக் அவர்கள் டுவிட் செய்துள்ளார். இதை 18 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.

Leave A Reply