
கடந்த வியாழக்கிழமை காஷ்மீரில் புல்வாமா என்கிற இடத்தில் நடந்த தாக்குதலில் இந்திய வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர்
உலகிலுள்ள அனைத்து இந்தியர்களும் இச்சம்பவத்தை கண்டித்ததுடன் அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாமல் இருக்கின்றனர்..
அந்த தாக்குதலில் கொல்லப்பட்ட 40 crpf வீரர்களின் குடும்பங்களுக்கு பல்வேறு உதவிகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மிகப்பெரிய அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது
அதில் 40 வீரர்களில் 23 வீரர்கள் எஸ்பிஐ வங்கியில் கடன் பெற்று இருந்தனர் . அவர்கள் வாங்கியிருந்த கடன் அனைத்தையும் உடனடியாக தள்ளுபடி செய்வதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.
இது சம்பந்தமாக வங்கியின் தலைவர் பேசியதாவது….
தாக்குதலில் உயிரிழந்த 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் 23 வீரர்கள் தங்கள் வங்கியின் வாடிக்கையாளர்கள். அவர்கள் வங்கியில் பெற்ற கடனை உடனடியாக தள்ளுபடி செய்கிறோம். மேலும் காப்பீட்டு தொகையாக வீரர்கள் ஒவ்வொருவரும் குடும்பத்திற்கு ரூ 30 லட்சம் இழப்பீடு வழங்க இருக்கின்றோம்.
நாட்டின் பாதுகாப்புக்காக சென்ற சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது .எனவே அவர்கள் கடன்கள் தள்ளுபடி செய்கிறோம். மேலும் எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் சிஆர்பிஎஃப் வீரர் களுக்கு உதவ விருப்பமிருந்தால் bharatkeveer.gov.in என்கிற இணைய தளத்தில் நேரடியாக நிதியை அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்