நடிகர் விவேக்கின் அதிர்ச்சி வீடியோ

சென்னையில் மட்டுமல்லாமல் தமிழகம் எங்கும் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்கள் பெரும் அவதியுறுகின்றனர் .. அவ்வப்போது பொதுமக்கள் காளி குடங்களுடன் போராட்டமும் நடத்துகிறார்கள்

இந்நிலையில் நடிகர் விவேக் , அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வை வெளியிட்டுள்ளார் . அதில் சுமார் 1 கிலோ மீட்டர் வரை காளி குடங்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன .

அதில்…’ இந்த கானொளி சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டைக் காட்டுகிறது. இந்த அவலம் தமிழ்நாடு முழுதும் வர இருக்கும் அபாயம். ஒரே தீர்வு= மரம் நடுதல், ஏரி குளம் சீரமைத்தல், நீர் சிக்கனம்.#இளைஞர் மாணவர் கவனத்திற்கு’என்று நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது