நடிகர் சூர்யா அசத்தல் அறிவிப்பு… மாணவர்களே…தயாராகுங்கள்

0

நடிகர் சூர்யா அவர்கள் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார்

நடிகர் சூர்யா அவர்கள் கடந்த சில வருடங்களாக அகரம் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை நிறுவி அதன் மூலம் பல ஏழைக் குழந்தைகளுக்கு கல்வியை  பெற உதவிகளை வழங்கி உள்ளார்

இந்நிலையில் ட்விட்டர் அக்கவுண்டில் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்

அதில், ஆசிரியர்களுக்கு அன்பான வேண்டுகோள் .தகுதியான மாணவர்களை அகரத்திற்கு அடையாளம் காட்டுங்கள்

ஆசிரியர்  பெருமக்களுக்கு வணக்கம் . அரசு பள்ளி மாணவர்கள் கல்லூரிகளில் உயர்கல்வி பெற அகரம் பவுண்டேஷன் கடந்த 10 ஆண்டுகளாக துணை புரிகிறது . பெற்றோர்களை இழந்த ஆதரவற்ற வறுமை காரணமாக மேற்கொண்டு கல்வியை தொடர முடியாத மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்குகிறது.

இதுவரை சுமார் 2,500 மாணவர்கள் அகரம் விதைதிட்டத்தின் கீழ் பயனடைந்து உள்ளார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம்.

2019ஆம் ஆண்டு பிளஸ் டூ தேர்வு எழுதுகிற மாணவர்களில் தகுதியும் திறமையும் வாய்ந்த ஏழை மாணவர்களை அகரத்திற்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய பெருமக்கள் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்

வறுமை மற்றும் குடும்ப சூழல் காரணமாக கல்வியை தொடர முடியாமல் போகிற மாணவர்களை கீழ்க்காணும் அகரம் பவுண்டேஷன் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்

மாணவர்களின் வகுப்பறை கரும்பலகையில் இந்த தொடர்பு எண்களை எழுதி போடும்படி கேட்டுக்கொள்கிறோம் நன்றி என தங்களுடைய மொபைல் நம்பர்களை அளித்துள்ளார்கள்

Comments are closed.