நடிகர் ஆர்யா – நடிகை சாயிஷா திருமணம்…

0

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ஆர்யாவின் திருமண விஷயம் ஒரு முடிவுக்கு வந்தது

நடிகர் ஆர்யா அனைவருக்கும், முக்கியமாக இளம் பெண்களுக்கு பிடித்த ஒரு இளம் ஹீரோ. பல வெற்றி படங்களை கொடுத்த இவருக்கு கடந்த சில வருடங்களாக தோல்விப் படங்களை அமைந்தது. இருந்தாலும் பல முயற்சிகள் கிடையே சில படங்கள் கைவசம் உள்ளது.

மேலும் தன்னுடைய திருமணம் எப்போது என்று யார் கேட்டாலும் நண்பர் விஷால் திருமணம் முடிந்த பிறகு தன்னுடைய திருமணம் என்று சொல்லி வந்தார்.

இந்நிலையில் வனமகன் க,டைக்குட்டி சிங்கம், போன்ற திரைப்படங்களில் நடித்த சாயிஷா என்ற இளம் ஹீரோயினுக்கும், நடிகர் ஆர்யாவுக்கும் வரும் மார்ச் மாதம் பத்தாம் தேதி திருமணம் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆர்யாவின் நெருங்கிய நண்பரான விஷால் தனது திருமண அறிவிப்பை வெளியிட்ட அடுத்த சில தினங்களிலேயே ஆரியாவின் திருமணம் நடக்க இருப்பது சினிமா வட்டாரத்தில் ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது.

கஜினிகாந்த் என்ற திரைப்படம் மூலம் இணைந்த இந்த ஜோடி, வாழ்க்கையிலும் இணைய போகுது அனைவருக்கும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தில் வரும் மார்ச் மாதம் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது . மேலும் இஸ்லாமிய முறைப்படி இவர்கள் திருமணம் நடக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் திலீப் குமார் அவர்களின் பேத்தி ஆவார் நடிகை சாயிஷா. மிகப் பெரிய சினிமா பின்னணி கொண்டவர்.

சரியான புளியங்கொம்பை பிடித்து விட்டார் ஆர்யா என்று இப்பொழுது கிசுகிசுக்கள் வரத் துவங்கியுள்ளது .

Leave A Reply