தோனியை முந்தினார் மிதாலி ராஜ்

0

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இது ஒரு பொற்காலம் என்றே கூற வேண்டும். அந்த அளவுக்கு இந்தியா, விளையாட்டுகளில் வெற்றிகளை குவித்து வருகிறது .குறிப்பாக கிரிக்கெட்டில் ஆண்கள்  விளையாட்டு ஆனாலும் சரி ,பெண்கள் விளையாட்டு ஆனாலும் சரி, வெற்றியை மட்டுமே பெற்று வருகிறோம்.

தற்போது நியூசிலாந்து சுற்றுப்பயணம் சென்று விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி ,3 ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து வென்று சாதனை படைத்தது…

அதேபோல் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியும் சிறந்த வெற்றியை நியூசிலாந்துக்கு எதிராக பதிவிட்டு வருகிறது

அதிலும் குறிப்பாக இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ், மிகச் சிறந்த வீரராக இருந்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும் .

ஆண்கள் கிரிக்கெட் அணியில் தோனி ஒருவர் போதும். ஏனெனில் எவ்வளவு பெரிய ஸ்கோர் ஆனாலும் , மிகப் பொறுமையாக நிதானமாக ரன்களை எடுத்து பின்பு அதிரடியாக ஆடி வெற்றிக்கனியை பறிப்பார்

அதேபோல் மகளிர் அணியில், கேப்டன் மிதாலி ராஜ், டோனியை மிஞ்சி விட்டார் என்று சொன்னால் அது மிகையல்ல.

இரண்டாவது போட்டியில் அரைசதம் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் வெற்றியை பெற்று வந்தார்..

முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 161 ரன்களுக்கு ஆட்டமிழந்தது .அடுத்து ஆடிய இந்திய மகளிர் அணி துவக்கத்திலேயே தனது துவக்க வீரர்கள் இழந்தாலும், அடுத்த நம்பிக்கை நட்சத்திரங்களான ஸ்மிருதி மந்தனா மற்றும் கேப்டன் மிதாலி ராஜ் பொறுப்பான ஆட்டத்தை வெளியிட்டு வெற்றிக்கனியை படித்தனர்.

111 பந்துகளை சந்தித்த மிதாலி ராஜ் 63 ரன்கள் அடித்தார், 83 பந்துகளில் அதிரடியாக 90 ரன்கள் எடுத்தார் ஸ்மிருதி மந்தனா. பொறுமையாக ஆடியதால் விமர்சனத்திற்கு உள்ளான மிதாலி ராஜ் ,வெற்றிக்குப் பிறகு அவருடைய பொறுப்பான ஆட்டம் தான் என்று அனைவராலும் பாராட்டப்பட்டது . இந்த வெற்றியில் தோனியை மிஞ்சி விட்டார் என்பது அவருடைய சேசிங்  சராசரியை வைத்தே சொல்லலாம்

தோனி 103.7 சராசரியும் மிதாலி ராஜ்111.29 சராசரி வைத்து முன்னிலையில் உள்ளார்

ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணியை சேர்த்து பார்த்தால்  தோனியை மற்றும் கோலி யை கீழே தள்ளி முதலிடத்தில் உள்ளார் கேப்டன் மிதாலி ராஜ்

Leave A Reply