தொப்பையை குறைக்கணுமா…? அப்போ இத சாப்பிடுங்க

0

தொப்பையை குறைப்பது எப்படி? தொப்பையை எப்படி உடனடியாக குறைப்பது? இவ்வாறு பல கேள்விகளை 30 வயதில் இருந்தே பல பேர் கேட்பார்…

google இல் தேடி விடைகளை கண்டறிந்து அதற்கு ஏற்றார் போல் உடற்பயிற்சி பார்ப்பார் .. இன்னும் சிலர் யூட்யூபில் பல வீடியோக்களை பார்த்து உடற்பயிற்சி செய்து கொள்வார்.

ஆனால் தொப்பையை குறைக்க உடற்பயிற்சி மட்டும்தான் செய்ய வேண்டும் என்று இல்லை… மாறாக சில உணவுகளை தவிர்த்து சில உணவுப் பழக்க வழக்கங்களை கொண்டு நமது தொப்பை உடனடியாக குறையும் என்பது மருத்துவம்.

அதாவது நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவுக்கும் ஒரு கலோரி அளவு உண்டு. சத்துக்கள் வேறு, கலோரி என்பது வேறு, உதாரணமாக 100 கிராம் வெள்ளைச் சர்க்கரையில் அதாவது சீனியில் 387 என்ற அளவில் கலோரிகள் இருக்கிறது .ஆனால் எந்த சத்தும் இல்லை.

ஆனால் நமக்கு கலோரி என்பது உடலுக்கு மிக முக்கியமான ஒன்று. அதாவது ஒரு நாளைக்கு உடல் உழைப்புக்கு ஆணுக்கு 2500 கலோரிகளும் பெண்ணுக்கு ஆயிரத்து 500 கலோரிகளும் தேவை . கடினமான வேலைகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் அதாவது விவசாயிகள் மற்றும் இரும்பு வேலை செய்யும் தொழிலாளிகள் என பலர் உண்டு.. இவர்களுக்கு இந்த அளவை விட இன்னும் அதிகமாகவே தேவைப்படுகிறது. இந்தக் கலோரிகள் தான் நாம் உழைக்க, நம் உடலிலிருந்து எரிக்கப்பட்டு பின்பு சக்தியாக மாற்றப்படுகிறது.

நம்முடைய செயல்பாடுகள் அனைத்திற்கும் கலோரி எரிக்க வேண்டும்..  கடுமையாக உழைத்தால் மட்டுமே கலோரிகள் எரிக்கப்படும் என்று இல்லை .நாம் பேசும் போதும், நடக்கும் போதும், சிரிக்கும் போதும், ஏன் தூங்கும் போதுகூட கலோரிகள் எரிக்கப்படுகின்றன.

ஆனால் அது குறைந்த அளவிலேயே எடுக்கப்படுகின்றது. ஒவ்வொரு மனிதனும் அவனுடைய செயல்பாடுகளை வைத்தே அவனுடைய கலோரிகளை எரிப்பதன் அளவு மாறுபடும். எந்த செயல்பாடுகளிலும் ஈடுபடாத, முக்கியமாக தினமும் ஏசியில் அமர்ந்து கம்ப்யூட்டர் முன்னாடி வேலை செய்யும் நபர்களுக்கு, தேவைக்கு அதிகமாக கிடைக்கும் சக்தி கொழுப்பாக மாறி வயிற்றின் அடிப்பகுதியில் தொப்பை என்ற பெயரில் சேமிக்கின்றது.

எவ்வாறு குறைப்பது என்று கேள்வி அடுத்து வரும் ….முன்பே நாம் பதிவிட்ட மாதிரி தொப்பையை குறைக்க உடற்பயிற்சி மட்டுமில்லாமல், அதற்கு நாம் உண்ணும் உணவு பழக்கவழக்கங்களை மாற்றினால் மிகுந்த பலனைத் தரும்.

கல்லூரிகளை அடக்க Negative calorie effect என்று சொல்வார்கள். நாம் உண்ணும் உணவுகள் மட்டும் தான் நமக்கு கலோரிகளை வழங்கும். ஆனால் சில காய்கறிகளும் பழங்களும் நம் உடலில் செரிப்பதற்கு, கலோரிகளை எடுத்துதான் செரிமானம் செய்யும்.

அவ்வாறான காய்கறிகளும் பழங்களும் கலோரிகளை நம் உடலுக்கு தராமல் நம் உடலில் ஏற்கனவே இருக்கும் கலோரிகளை எரித்து விட்டு தான் நமக்கு உணவாகின்றன.

இந்த உணவுகளை சாப்பிட்டால் நமக்கு கலோரிகளை எரிக்கவும் பயன்படும்.

அந்த உணவுகள் என்னவென்று பார்த்தால்

கேரட், தக்காளி, தர்பூசணி, ஆப்பிள், பச்சை பூண்டு ,எலுமிச்சை, ப்ராக்கோலி, வெள்ளரிக்காய், இந்த மாதிரியான காய்கறிகள் நமது உடலில் உள்ள கலோரிகளை குறைக்க உதவுகிறது .ஏனென்றால் இவற்றில் அதிகமான வைட்டமின்களும் நார்ச்சத்தும் நீர்ச்சத்தும் அதிகம் உள்ளது.

இந்த மாதிரியான உணவுகளை நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் பொழுது நம் உடலில் உள்ள கலோரிகளை எரித்து நமது தொப்பையை குறைக்க உதவுகிறது

அதற்காக மற்றவைகளை தவிர்க்க வேண்டும் என்பது அல்ல… அவ்வாறு தவிர்த்தால், அதன் மேல ஆசைதான் அதிகமாகுமே தவிர தொப்பையை குறைக்க இயலாது.

இது ஒரு வழிமுறை என்றாலும், உடற்பயிற்சியில் நடைபயிற்சியை மிகச்சிறந்த வழிமுறை என்று சொல்கிறார்கள், குறைந்தது 40 நிமிடங்களாவது நடக்க வேண்டும். இவ்வாறு தினமும் நடப்பது மிக அதிக அளவில் தொப்பையை குறைக்க உதவும்

Leave A Reply