தொடரை வென்ற தலைக்கணம்… ஆப்பு வைத்த நியூசிலாந்து

0
thanks – twitter

 இந்திய அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ,நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது. ஐந்து  ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில், விளையாட இந்திய அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் சென்று உள்ளது.

நடந்து முடிந்த 3 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து தோனி மற்றும் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு மிதமாக இன்று கலந்து கொண்ட இந்திய அணி பரிதாபமாக தோல்வி கண்டது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தார் நியூசிலாந்து அணியின் கேப்டன். ஆரம்பமே அதிர்ச்சி தரும் விதமாக  ஷிகர் தவான் 13 வெளியேற , அடுத்து அறிமுக வீரர் சுமன் களமிறங்கினார்… இவர் களம் இறங்க, உடனே நான் வெளியேறுகிறேன் என்பதுபோல், ரோகித் சர்மா 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்தடுத்து வந்த ராயுடு, வந்த வேகத்தில் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.  அதற்கேற்றாற்போல் அடுத்து வந்த அனைத்து வீரர்களும் ,சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி 50 ஓவர்களில் வெறும் 92 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டத்தை இழந்தது.

இதன்மூலம் ஒருநாள் போட்டியில் மிகக்குறைவான ரன்கள் எடுத்த பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது இந்தியா.  இதற்கு முன்னதாக சார்ஜாவில் நடந்த போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக 54 ரன்கள் எடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

நியூஸிலாந்து தரப்பில் போல்ட் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்

thanks – twitter

இந்த சொற்ப ரன்களை வென்றுவிட  ஆடிய நியூசிலாந்து அணி தொடக்க வீரர்கள் 2 பேரை இழந்தாலும்  14 ஓவர்களிலேயே 93 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது.

ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில்.1-3 என்ற விதத்தில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது

Leave A Reply