தேங்காய் சிரட்டையின் விலை 3000 ருபாய் …அமேசானில்

நாம் தினமும் உபயோகித்து  குப்பையில் வீசி எறியும் பொருளான தேங்காய் மூடி அல்லது கொட்டாங்குச்சி அல்லது தேங்காய் சிரட்டை என அழைக்கப்படும் இவற்றின் விலை 3000 ரூபாய் என்று சொன்னால் நம்புவீர்களா? ஆனால் அதுதான் உண்மை.

உலகத்திலேயே முன்னணி ஆன்லைன் நிறுவனமான அமேசான்,  இந்த தேங்காய் சிரட்டையை தான் ஆன்லைன்ல விற்பனை செய்து வராங்க.

இந்த தேங்காய் சிரட்டையை நாம, நம்ம வீட்டில சாம்பிராணி போட்டு தூபம் காமிக்கவும் கிராமப்புறங்களில் அடுப்பெரிக்கவும் பயன்படுத்துவார்கள்.

இந்த தேங்காய் சிரட்டையை கைவினை கலைஞர்கள் காபி கப், சட்டை பட்டன்கள், அழகு பொருட்கள் என விதவிதமாக தயார் செய்து இங்கே விற்பனை செய்து வருவார்கள் . ஆனால் இதே தேங்காய் மூடி அல்லது தேங்காய் சிரட்டை அல்லது கொட்டாங்கச்சி ஆன்லைன்ல அமோகமாக விற்பனை ஆகுது…. இதுதான் எல்லோருக்கும் ஆச்சரியம் அளிக்கும் செய்தி.

400 கோடி ரூபாய் வருமானம் தரும் இந்த தேங்காய் சிரட்டைகள் வெறும் எரிபொருளாக மட்டும் இல்லாமல், நகை வேலைப்பாடு, வெடிமருந்து, என 50க்கும் மேற்பட்ட தயாரிப்புகளுக்கு உதவுகிறது இந்த தேங்காய் சிரட்டை.

திருச்சி , கரூர், தேனீ, திருப்பூர், இந்த மாதிரியான மாவட்டங்களில் அதிகமா தேங்காய் விளைகிறது. இங்கிருந்து தேங்காய் சிரட்டை கொள்முதல் செய்யப்பட்டு, நெகமம் பகுதியில் செயல்படும் தொழிற்சாலைகளுக்கு சப்பளை பண்றாங்க.  அந்த தொழிற்சாலைகளில் இருந்து தான் பலதரப்பட்ட கலைப்பொருட்களாக இது உருமாறுகிறது.

சீசன்ல அதாவது தேங்காய் விலை அதிகமான நேரங்களில், இந்த தேங்காய் சிரட்டை விலை அதிகமாக போகிறது என்கிறார்கள்.

அதிகபட்சம் ஒரு டன் சிரட்டை வந்து 15 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்துள்ளார்கள். அதுவும் திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் ஒரு கோடிக்கு விற்பனை நடந்து வருவதாக சொல்கிறார்கள் .இந்த தேங்காய் சிரட்டை வியாபாரத்தில் வந்து வருஷத்துக்கு 400 ரூபாய் வியாபாரம் நடக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.