திருமணம் பந்தம் பற்றிய அழகான ஒரு விளக்கம்

0

திருமணங்களுக்கு ஒவ்வொரு ஜாதியிலும் அல்லது ஒவ்வொரு பகுதியிலும் ,ஒவ்வொரு கிராமங்களிலும் ஒவ்வொரு நடைமுறைகள் இருக்கின்றது. ஒவ்வொரு இடத்திலும் நிறைய சம்பிரதாயங்கள் சடங்குகள் அதோடு செலவினங்கள். இந்த செலவினங்கள் அவருடைய தகுதிக்கு அப்பாற்பட்டும் சம்பிரதாயங்களுக்கு உட்பட்டு திருமணங்கள் நடக்கின்றது.

இந்த திருமணம் பந்தம், கணவன் மனைவி உறவு, இது எவ்வாறு ஏற்பட்டிருக்கும் என்ற கேள்விக்கு மிக அழகாக ஒரு பதில்.

என்னவென்றால் முன்பு மனிதர்கள் காட்டுவாசியாக இருந்தபோது ,சிறு சிறு குழுக்களாக இருந்திருப்பார். உணவு ,காவல், வாழ்க்கை முறை, இப்படி அனைத்து தேவைகளையும் அந்தந்த குழுக்கள்… குழுக்களாகவே நிறைவேற்றிக் கொண்டனர். அவற்றில் முக்கியமான ஒன்று கல்வியும், குழந்தை பெறுதலும் அவ்வாறு நடந்திருக்கும்.

 யார் வேண்டுமானாலும், யாரோடு வேண்டுமானாலும் உறவு கொள்ளலாம் என்று தான் இருந்திருக்க வேண்டும்.  ரே பெண்ணுக்கு பல ஆண்கள் உறவு கொள்ள முற்படும் போது, அந்த ஆண்களின் பலத்தைப் பொறுத்தே அந்த உறவு நடந்திருக்கும்.

ஆனால் இந்த மாதிரியான உறவு எவ்வளவு நாள் நீடித்து இருக்கும் என்று பார்க்கும் பொழுது,

தொல்காப்பியத்தில்..

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

ஐயர் யாத்தனர் கரணம் என்ப…

என்று  குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது அந்த மாதிரி ஒரே பெண்ணுக்கு பல ஆண்களிடம் போட்டி இருக்கும் பொழுது, அல்லது அந்த கலவிக்குப் பின் பிறக்கும் குழந்தைகள் யாரோடது, அல்லது அந்த குழந்தைகளுக்கு யார் பொறுப்பு என்று கேள்வி எழும் பொழுது ,ஆண்களும் பெண்களும் ஒவ்வொரு ஒருவரை ஏமாற்றி கொள்வதும், ஏமாற்ற நினைப்பது என ஆரம்பித்து அந்தக் குழுக்களில் இடையில் பல குழப்பங்களும் சண்டைகளும் ஏற்பட்டிருக்கும்.

அப்போதுதான் அந்தக் குழுவின் தலைவன் இவ்வாறு ‘திருமணம்’ அதாவது ‘காரணம்’ திருமண முறையை உருவாக்கி இருக்கலாம்.

அதாவது ஒரு ஆண், ஒரு பெண், இணைந்து தான் வாழவேண்டும்… இவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு இவர்களே பொறுப்பு என்ற விதியையும் இவர்கள் உருவாக்கியிருக்க வேண்டும். என்பதுதான் தொல்காப்பியத்தில் உள்ள கருத்து.

எனவே திருமணம் என்பது அந்த குழுக்களால் ஆரம்பிக்கப்பட்டு இன்று சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு ஒப்பந்தம் என்றே சொல்லலாம்.

திருமணம் என்பது ஒரு அடையாளமாக இருந்திருக்கும். ஆனால் பழமையான மக்கள் இறைநம்பிக்கையும் அதிகம் கொண்டிருந்ததால் இந்த சடங்கோடு வழிபாட்டு முறைகளும் இணைக்கப்பட்டிருக்கும்.

அந்த காலங்களில்., ஏன் எப்போதுமே ஆண்கள் இருப்பிடத்தை விட்டு வெகு தொலைவில் சென்று சம்பாதித்தல், அல்லது வேட்டையாடுதல்,  போர் செய்து தன் இனத்தை ,தன் குடும்பத்தை பாதுகாத்தல் இது இயல்பு…

பெண்கள் இருப்பிடத்திலிருந்து, வெளியில் சென்ற தன் கணவன் பத்திரமாக அல்லது உயிரோடு திரும்பி வீட்டிற்கு வர வேண்டும் என இறைவனிடம் வேண்டுவது பெண்களின் இயல்பு.

இந்த கணவன் மனைவி ஆயுள் உடல்நலம் ஆகியவற்றை இதோடு திருமண சடங்கு இணைக்கப்பட்டிருக்கும்.

அவர்கள் திருமணம் என்பது சமூகத்தில் அனைவருக்கும் ஒரு ஒப்பந்தத்தை அளித்து, அனைவருக்கும் ஒரு விளக்கத்தையும் ஏற்படுத்துமாறு ஒரு சடங்கு அதாவது இவனுக்கு இவள், இவளுக்கு இவன் இனிமேல் இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் இவர்கள் தான் பொறுப்பு ,என்று மற்ற குழுக்களுக்கு ,மனிதர்களுக்கு, சமூகத்திற்கும், ஒரு அறிவிப்பாகவே இந்த திருமண பந்தம் இருந்திருக்கும்.

இதுல மனிதனின் ‘ஆணவம் ‘ அங்கிருந்துதான் ஆரம்பித்திருக்கிறது… அதாவது என்னுடைய குடும்பம், என்னுடைய மனைவி, என்னுடைய குழந்தைகள், என வரும் பொழுது அவரவர்கள் உடல் பலத்திற்கு ஏற்றார்போல் செலவினங்களையும், செய்து விடுகிறார்கள்.. அதாவது என்  என் மகளுக்கு அல்லது என் மகனுக்கு நான் திருமணம் செய்து வைக்கும் பொழுது பரிசாக இதை செய்கிறேன் என ஆரம்பித்து இன்று மிகப்பெரிய விழாவாக திருமணம் நடந்து கொண்டிருக்கிறது.

பரிசு பொருட்கள் இன்று திருமண சடங்கு., சம்பிரதாயமாக மட்டுமல்லாமல், ஒரு கடமையாக மாறிவிட்டு ,ஒரு தொழிலாக மாறிவிட்டது என்றே கூறலாம்… இதனாலேயே திருமணம் என்றாலே பெண்கள் மற்றும் பெற்றோர்களும்பயந்து அலறுகிறார்கள்…. காரணம் ….செலவு.

ஆனால் அவ்வாறு பெரும் பொருட்செலவு செய்து நடக்கும் திருமணங்களில், வந்து வாழ்த்தும் அனைவரும், மனதார மணமக்களை வாழ்கின்றனரா…., என்பது மிகப்பெரிய கேள்வி,.

செலவு என்பது மனிதனின் ஆணவமும், அவனுடைய அதிகாரத்தையும் காட்டுமே தவிர, மணமக்களை வாழ்த்துவதற்காக இல்லை…. அனைவரின் கூற்று

Leave A Reply