தினமும் 17 ரூபாய் – விவசாயிகளை அவமானப்படுத்தும் செயல் – ராகுல்

0

நான்கரை ஆண்டுகள் இல்லாத அக்கறை, இன்னும் ஆட்சி முடிய நான்கு மாதங்கள் உள்ள நிலையில் பல சலுகைகளை வாரி வழங்கியுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உள்ள  மத்திய அரசு.

ஆண்டு வருமானம் 5 லட்சம் வரை இருந்தால் வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது என்ற அறிவிப்பை அரசு ஊழியர்களின் குளிர்ச்சிக்காக அறிவித்து உள்ளது என்று சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும் இந்த அறிவிப்பு எப்போது அமல்படுத்தப்படும் என்று கேள்வியும் எழுந்துள்ளது

இது மட்டுமில்லாமல் வருமான வரி விலக்கு உச்சவரம்பு அதிகரிக்குமா என்ற ஏக்கம் நடுத்தர வர்க்கத்தினரே காணப்படுகிறது.

எந்த நன்மையும் பூர்த்தி செய்யாத மத்திய அரசு , கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போல், இன்னும் நான்கு மாதங்களில்  தேர்தல் வரும் நிலையில், நடுத்தர வர்க்கத்திற்கு மீது காட்டும் கரிசனம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விவசாயிகளுக்கு ஒரு நாளைக்கு 17 ரூபாய் என்ற கணக்கில் நிதி வழங்கும் திட்டம் விவசாயிகளை சந்தோஷப்படுத்த என்பது எதிர்க்கட்சிகளின் மிகப் பெரிய குற்றச்சாட்டு

விவசாயிகளுக்கு rs.17 ஒருநாளைக்கு தருவது, அவர்களையும், அவர்களின் பணியையும் அவமானப்படுத்தும் செயல் ,என்று ராகுல் காந்தி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

போலியான புள்ளிவிவரங்களை கொண்டு ,அவசரகால பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Leave A Reply