திண்டுக்கல்லில் நண்டு கடை

இன்று ஐ டி வேலையை விட்டு விட்டு , பலர் விவசாயம் சார்ந்த, இயற்கை உணவுகள் சம்பத்தப்பட்ட தொழில்களை செய்து வருகின்றனர்…
பாஸ்ட் புட் கலாசாரத்திலும், பாரம்பரிய உணவு, மண்பானை உணவு, இயற்கை உணவு என பல உணவகங்கள் தொடங்கி ஜெயித்து வருகின்றனர்.
அவ்வாறு தற்பொழுது திண்டுக்கல்லில் புதிதாக தொடங்கி உள்ள உணவகம் தான் ‘ நளாஸ் நண்டு கடை’ .

திண்டுக்கல் நேருஜி நகர் ரவுண்டானா அருகே அனைவரையும் சுண்டி இழுக்கும் இந்த நளாஸ் நண்டு கடை, அசைவ பிரியர்களுக்கு வரபிரசாதம் தான்..
இங்கு முக்கிய உணவே நண்டு தான். நண்டு சூப், மிளகு நண்டு மசால், நண்டு வறுவல், என நாக்கில் எச்சில் ஊற வைக்கும் அளவுக்கு நண்டு அயிட்டங்களை அடுக்கின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தினமும் நண்டு பிடிக்கும் மீனவர்கள், அதே நாளே திண்டுக்கல் அனுப்பி விடுகின்றனர்.
மிக அதிகமாக ‘ப்ளூ’ எனப்படும் நண்டுகளை தான் வாங்கி சமைக்கின்றனர். விலை அதிகமாக இருந்தாலும் சத்தும் அதிகமாக இருக்கும் இந்த நண்டு தான் இங்கு பிரபலம்.

சளிக்கு மிக அருமருந்தான நண்டு சூப்பும் இந்த கடையில் டிமாண்ட்.
இறால் கிரேவி, இறால் 65, மீன் குழம்பு, என மீன் வகைகளும் உண்டு. மேலும் பொரித்த மீன் குழம்பும் இங்கு பிரபலம்..

இவை மட்டுமன்றி மட்டன், சிக்கன் வகைகளும் உண்டு. முழுவதும் செக்கு எண்ணெயை மட்டும் பயன்படுத்தும் இவர்கள் பிராய்லர் கோழிகளை பயன்படுத்துவதில்லை.
விறகு அடுப்பை பயன் படுத்தும் இவர்கள், வீட்டில் அரைத்த மசாலாவை மட்டுமே பயன்படுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *