தமிழிசை சவுந்தரராஜனுக்கு செக் வைத்த தல அஜித்

அதாவது தன்னுடைய வாழ்க்கையும் தன்னுடைய சினிமா வாழ்க்கையும், எந்த வகையிலும் தன்னுடைய ரசிகர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது  என்பதில் உறுதியாக இருப்பவர் நடிகர் அஜித்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு திருப்பூரில் நடந்த விழாவில் ,அஜித் ரசிகர்கள் சிலர் பாரதிய ஜனதாவில்  சேர்ந்தனர், அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் அஜித் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். தமிழகத்தில் பிஜேபி ஆட்சிபுரிய அஜித் ரசிகர்களாகிய நீங்கள் உதவவேண்டும் என்றும், பிரதமர் மோடியின் திட்டங்கள் தமிழக மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த தகவலை அறிந்து கொண்ட அஜித் தரப்பு உடனடியாக ஓர் அறிக்கையை தயாரித்து வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை இப்பொழுது ட்ரெண்டாகி உள்ளது.

அதில் என்னுடைய தொழில் ‘நடிப்பு’ என்பதை நாம் தெளிவாக புரிந்து வைத்துள்ளேன் .எனவே என்னுடைய சினிமாவில் எந்த வகையிலும் அரசியல் சம்பந்தப்பட்ட நிகழ்வு இருக்கக் கூடாது என்பதையும் தெளிவாக நடைமுறைப் படுத்தி உள்ளேன். அதனாலேயே என்னுடைய ரசிகர்மன்றத்தை கலைத்தேன் .

என்னுடைய இந்த முடிவுக்கு பிறகும் ,என்னுடைய பெயரை என் ரசிகர்கள் சில அரசியல் நிகழ்வுகளுக்கு பயன்படுத்தி செய்திகள் வெளியாகிறது . தேர்தல் நேரத்தில் இந்த மாதிரியான செய்திகள் எனக்கு அரசியல் ஆசை வந்துவிட்டது என ,ஐயப்பாட்டை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும்.

இதன்மூலம் தெரிவிப்பது என்னவென்றால் எனக்கு மறைமுகமாகவோ, நேரடியாகவோ அரசியல் ஈடுபாட்டில் எந்த ஆர்வமும் இல்லை.  தனிப்பட்ட விருப்பு வெறுப்பு அரசியலின் எனக்கு உண்டு .அதை நான் யார் மீதும் திணிப்பதில்லை . மற்றவர்களின் கருத்தை என் மீதும் திணிக்க கூடாது .

இதையே தான் என்னுடைய ரசிகர்களாகிய உங்களிடம் நான் எதிர்பார்க்கிறேன். உங்களுடைய அரசியல் கருத்து உங்களுடையதாக இருக்கட்டும் . என் பெயரையும் என் புகைப்படமும் எந்த ஒரு அரசியல் நிகழ்வுகளில் இடம்பெறுவதை விரும்பவே இல்லை என்று குறிப்பிட்டு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். இது பாஜக தலைமையை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

Leave a Reply

Your email address will not be published.