தமிழகத்தில் ஏழை தொழிலாளிகளுக்கு 2000 ரூபாய் வழங்க எதிர்ப்பு

தமிழக அரசு நேற்று சட்டசபையில் திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் தமிழகத்தில் உள்ள ஏழைகளுக்கு 2000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி அவர்கள் 110 விதியின் கீழ் தமிழகத்தில் உள்ள 60 லட்சம் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு சிறப்பு நிதியாக ரூ 2000 வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த மாத இறுதிக்குள் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார்

இந்நிலையில் இந்த அறிவிப்பை எதிர்த்து சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தை சேர்ந்த செந்தில் ஆறுமுகம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் இதற்கு எதிராக முறையீடு செய்துள்ளார்..

எந்த கணக்கெடுப்பை வைத்து 60 லட்சம் குடும்பங்களுக்கு அரசு இந்த தொகை வழங்குகிறது?

தேர்தலை மனதில் வைத்து இந்த அறிவிப்பை அரசு  வெளியிட்டு இருப்பதாக தெரிகிறது. எனவே இது சட்ட விரோதமான செயலாகும்

ஆகவே தமிழக அரசின் இந்த இரண்டு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார் .இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது