தன் மகனை களத்தில் இறக்கி விட்டார் ஓபிஎஸ்…?

0

தேனி நாடாளுமன்றத் தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்  குமார் களமிறங்கப் போவதாக தகவல்கள் உறுதி செய்கின்றன

2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட, அதிமுக சார்பில் தொண்டர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.

அதிமுக தலைமை அலுவலகத்தில்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இதனை துவக்கி வைத்தனர்

இதற்காக முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, முக்கூர் சுப்பிரமணியன், வடசென்னை மாவட்ட செயலாளர் ராஜேஷ், மற்றும் பல முன்னாள் அமைச்சர்கள் 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி  விருப்ப மனுக்களை அளிக்கின்றனர்.

இந்நிலையில் துணை முதல் அமைச்சருமான ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் அடுத்து நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தேனி மாவட்டத்தின், அதிமுக சார்பில், களமிறங்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தேனி மாவட்டம் முழுவதும் பல ஆண்டுகளாக ரவீந்திரநாத் தீவிரமாக கட்சி வேலை செய்து, கட்சிப் பணியாற்றி உள்ளார். ஆகையால் இவருக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

Leave A Reply